Thendral Audio Advertise About us
New User? | Forgot Password? | Email: Password: Login
Current Issue | Previous Issues | Author Index | Category Index | Organization Index | E-Magazine | Classifieds | Digital Downloads
By Category:
சின்னக்கதை | சமயம் | சினிமா சினிமா | இளந்தென்றல் | கதிரவனை கேளுங்கள் | ஹரிமொழி | நிகழ்வுகள் | மேலோர் வாழ்வில் | மேலும்
April 2010
தென்றல் பேசுகிறது | நேர்காணல் | மாயாபஜார் | முன்னோடி | நினைவலைகள் | முன்னோட்டம் | அன்புள்ள சிநேகிதியே | சமயம் | ஹரிமொழி
குறுக்கெழுத்துப்புதிர் | கதிரவனை கேளுங்கள் | சிறுகதை | ஜோக்ஸ் | எங்கள் வீட்டில் | பொது | சினிமா சினிமா | Events Calendar | வாசகர் கடிதம்
எழுத்தாளர் | இளந்தென்றல் | நிகழ்வுகள் | கவிதை பந்தல் | அமெரிக்க அனுபவம் | சாதனையாளர் | நலம்வாழ
Tamil Unicode / English Search
குறுக்கெழுத்துப்புதிர்
ஏப்ரல் 2010: குறுக்கெழுத்துப் புதிர்
- வாஞ்சிநாதன்|ஏப்ரல் 2010|
Share:
Click Here Enlargeசென்ற மாதப் புதிரில் சுழி படர்ந்த தலையுடன் தியானத்தால் சக்தியடைந்தவன் பாவி (என்று இலங்கையில் கூறுவர்) (4) என்ற குறிப்பிற்கு விடைகள் பலவிதமாக வந்திருந்தன. "யோகி" என்ற பகுதியைக் கண்ட பின்னும் விடை வராததற்குக் காரணம் இலங்கைத் தமிழ் பக்கம் போனதால் என்று தெரிகிறது. உபயோகப்படுத்து என்ற பொருளில் "பாவி" என்று வினைச்சொல் இலங்கையில் பாவிக்கப்படுகிறது. சுழி என்றால் 'உ' என்ற வழக்கத்தை பழைய புதிர் ஆர்வலர்கள் அறிவர்.

குறுக்காக
3. சும்மா மெல்வதற்குள் சொச்சம் பாதி வைத்த கெட்ட பெயர் (5)
6. தங்க முனையிட்ட கை அலுமினியம் போல்தான் (4)
7. தேர்தலில் ஆதரிக்க உறுதி கொடு (4)
8. பொருத்தமாகக் காஞ்சி இரண்டாவது உயிரின்றி மாய்ந்த குழப்பம் (6)
13. நம்பிக்கை தருகின்ற நிலை வெயிலில் இருப்பது போன்றிருக்கும் (6)
14. உள்ளே தோண்டி வெயிலுக்குப் பாதுகாப்பு மருந்து தொடங்கவில்லை (4)
15. திண்டாடிச் சிக்கித் துன்புற்ற உதவித் தலைமையாசிரியை (4)
16. உடலுக்கு வலுவூட்டும் அறிவுரை சலசலப்புக்கஞ்சா நரியிருக்குமிடத்தில் கெட்ட பெயர் தரும் (5)

நெடுக்காக
1. மலர் இருக்க கடைசி நாள் நீரும் நெருப்பும் இவற்றில் அடக்கம் (5)
2. தச்சர் சிற்பி இவர்களின் கூட்டுழைப்பில் உருவானதோ? (5)
4. குடும்பம் நடத்த தேவையானது எதிர்காலத்தில் விஜயம் நிச்சயம் (4)
5. மதுரைப்பக்கம் விளையாடியவன் மயக்கிவிடுவான் (4)
9. 1917இல் உலகில் நடந்த பெரும் நிகழ்ச்சிக்குக் கடைக்கண் வைத்தவள் (3)
10. வில் கழிய வேறுபட்ட மீனாட்சி (5)
11. தலையின்றி மனது கத்த மயங்கி பாரமேறியது (5)
12. அங்காடிக் கதவிருக்கும் அடிமட்டம் (4)
13. வழிவிடு மையத்திலிருந்து விலகு (4)

நீங்கள் புதிர் மன்னரா?
குறுக்கெழுத்துப் புதிருக்கான சரியான விடைகளை 15-க்குள் அனுப்பும் முதல் மூன்று வாசகர்களின் பெயர்கள் 'புதிர் மன்னர்கள்' சாதனைப் பட்டியலில் இடம் பெற்று அடுத்த இதழில் வெளிவரும். விடைகளை அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி: thendral@tamilonline.com. 15க்குப் பிறகு, விடைகளை www.tamilonline.com என்ற சுட்டியில் காணலாம்.

வாஞ்சிநாதன்
மார்ச் 2010 விடைகள்
Share: 




© Copyright 2020 Tamilonline