|
பூனையும் சேவலும் |
|
- |ஏப்ரல் 2006| |
|
|
|
A cat caught a rooster. He wondered how to find a reasonable excuse for eating him. ஒரு பூனை ஒரு சேவலைப் பிடித்தது. அதைத் தின்னுவதற்கு என்ன சாக்குச் சொல்லலாம் என்று யோசித்தது.
"You have this bad habit of crowing aloud in the night time and disturbing the sleep of men!" accused the cat. "இரவு நேரத்தில் உரக்கக் கூவி மனிதர்களை உறக்கத்திலிருந்து எழுப்பிவிடும் கெட்ட பழக்கம் உன்னிடம் இருக்கிறது!" என்று பூனை குற்றம் சாட்டியது.
The rooster said, "It is useful to them. They rise in time for their daily chores." "அதனால் அவர்களுக்குப் பயன் உண்டு. அன்றாட வேலைகளைச் செய்ய அவர்கள் வெள்ளென எழுகிறார்கள்" என்றது சேவல்.
The cat replied, "You are good at giving specious excuses, I shall not remain supperless"; and he ate him up. "ஏதோ சாக்குப் போக்குச் சொல்வதில் நீ கெட்டிக் காரன்தான். அதற்காக நான் பட்டினி கிடக்கமுடியாது" என்று கூறிப் பூனை சேவலைத் தின்றுவிட்டது. |
|
Aesop's Fables (ஈசாப் நீதிக் கதைகள்) |
|
|
|
|
|
|
|