|
ஆட்டிடையனின் கடற்பயணம் |
|
- |மே 2006| |
|
|
|
A Shepherd was grazing his sheep near the sea shore. The Sea was very calm. கடற்கரைக்கு அருகில் ஓர் இடையன் தன் ஆடுகளை மேய்த்துக் கொண்டு இருந்தான். கடல் மிக அமைதியாக இருந்தது. He wanted to take a voyage with some merchandise and sell it abroad. He sold all his flock, bought a cargo of dates, and set sail. ஒரு கடற்பயணம் மேற்கொண்டு, சில சரக்குகளைக் கொண்டு சென்று விற்கவேண்டும் என்று அவனுக்கு ஆசையாயிற்று. தனது ஆட்டு மந்தையை விற்று, அந்தப் பணத்தில் பேரீச்சம்பழத்தை வாங்கிக் கொண்டு கடற்பயணம் கிளம்பினான்.
While the ship was mid-sea, a huge storm broke out. The ship was in danger of sinking. He threw his cargo of dates overboard, and managed to escape with his life. நடுக்கடலில் கப்பல் போகும்போது பெரியதொரு சூறாவளி வீசியது. கப்பல் முழுகும் அபாயம் ஏற்பட்டது. அவன் பேரீச்சம்பழங்களைக் கடலில் எறிந்துவிட்டு உயிர் தப்பினான். |
|
Some time later, he was again on the shore, grazing sheep. Someone who came that way said "The sea is beautifully smooth!". "It is again hungry for dates and that is why it appears quite," the Shepherd was quick to remark.
சில காலத்திற்குப் பின் மீண்டும் அவன் கடற்கரையில் ஆடு மேய்த்தவாறு இருந்தான். அந்த வழியே வந்த ஒருவர், "கடல் அமைதியாக அழகாக இருக்கிறது!" என்றார். உடனே ஆட்டிடையன், "அதற்குப் பேரீச்சம்பழம் தின்ன ஆசை வந்துவிட்டது, அதனால்தான் அமைதியாக இருப்பது போல் தோன்றுகிறது" என்று கூறினான்.
(Aesop's Fables - ஈசாப் நீதிக் கதைகள்) |
|
|
|
|
|
|
|