வெந்தயக் கீரை அடை வெந்தயக் கீரை பொங்கல் வெந்தயக் கீரை சப்பாத்தி வெந்தயக்கீரை பாலாடை கட்டி சாதம் (Methi paneer rice) வெந்தயக் கீரை உருளைக்கிழங்கு கறி வெந்தய தோசை வெந்தய இட்டலி
|
|
|
தேவையான பொருட்கள்
வெந்தயக் கீரை (நறுக்கியது) - 1/2 கிண்ணம் துவரம் பருப்பு - 1/2 கிண்ணம் வெந்தயம் சிவப்பு மிளகாய் வற்றல் - 4 சமையல் எண்ணெய் - 2 மேசைக்கரண்டி உப்பு - தேவைக்கேற்ப பெருங்காயம் - சிறிதளவு |
|
செய்முறை
நறுக்கிய வெந்தயக் கீரையைச் சிறிது உப்புக் கலந்த நீரில் சற்று நேரம் ஊற வைத்துப் பிழிந்து எடுக்கவும். அதை நுண்ணலை அடுப்பில் வேகவைத்துக் கொள்ளவும். துவரம் பருப்பை 2 மணி நேரம் தண்ணீரில் ஊற வைத்து, நன்றாக வடியவிட்டு, இதனுடன் காய்ந்த சிவப்பு மிளகாய், உப்பு, பெருங்காயம் சேர்த்து, அதிகம் தண்ணீர் விடாமல் மிக்ஸியில் ரவை போல அரைக்கவும். அடி கனமான வாணலியில் எண்ணெய் காய்ந்ததும் அதில் அரைத்த பருப்பைப் போட்டு கிளறிக் கொண்டே இருக்க வேண்டும். அடி தீயாமல் பார்த்துக் கொள்ளவேண்டும். ஒரு நுண்ணலை அவியனில் அல்லது இட்லி வேகவிடுவது போல பிரஷர் குக்கரில் இந்த அரைத்த பருப்பை வேக வைத்துப் பின் உதிர்த்தும் செய்யலாம். பருப்பு நன்றாக வெந்து பொலபொல என்று வந்தபின்பு, வேகவைத்த வெந்தயக் கீரையை பிழிந்து இதில் போட்டு ஒன்று சேரக் கிளறி இறக்கவும். வெந்தயக் கீரையை வைத்து சாம்பார், பருப்புச் சேர்த்து மசியல் ஆகியவையும் செய்யலாம். இதுவரை வெந்தயக் கீரையை வைத்துச் செய்யும் உணவு வகைகள் சிலவற்றைச் செய்யும் முறைகளைப் பார்த்தோம். இனி முழு வெந்தயத்தைக் கொண்டு செய்யும் தோசை, இட்டலி பற்றிக் கூறுகிறோம். இது வயிற்றுப் புண்ணை ஆற்றும், ரத்தத்தில் சர்க்கரையைக் குறைக்கும். தவிர இதில் இரும்புச் சத்தும் நிறைய உண்டு.
சரஸ்வதி தியாகராஜன் |
|
|
More
வெந்தயக் கீரை அடை வெந்தயக் கீரை பொங்கல் வெந்தயக் கீரை சப்பாத்தி வெந்தயக்கீரை பாலாடை கட்டி சாதம் (Methi paneer rice) வெந்தயக் கீரை உருளைக்கிழங்கு கறி வெந்தய தோசை வெந்தய இட்டலி
|
|
|
|
|
|
|