Thendral Audio Advertise About us
New User? | Forgot Password? | Email: Password: Login
Current Issue | Previous Issues | Author Index | Category Index | Organization Index | E-Magazine | Classifieds | Digital Downloads
By Category:
சின்னக்கதை | சமயம் | சினிமா சினிமா | இளந்தென்றல் | கதிரவனை கேளுங்கள் | ஹரிமொழி | நிகழ்வுகள் | மேலோர் வாழ்வில் | மேலும்
November 2009 Issue
தென்றல் பேசுகிறது | நேர்காணல் | மாயாபஜார் | முன்னோடி | நினைவலைகள் | நலம்வாழ | அன்புள்ள சிநேகிதியே | அமெரிக்க அனுபவம் | ஹரிமொழி
குறுக்கெழுத்துப்புதிர் | கதிரவனை கேளுங்கள் | சிறுகதை | எனக்குப் பிடிச்சது | சமயம் | எங்கள் வீட்டில் | பொது | சினிமா சினிமா | Events Calendar
எழுத்தாளர் | இளந்தென்றல் | நிகழ்வுகள் | வாசகர் கடிதம்
நடந்தவை
Tamil Unicode / English Search
நிகழ்வுகள்
தென்கலிஃபோர்னியா தமிழ்மன்றம் வழங்கும் நகைச்சுவை நாடகம்
டௌன்செண்ட் சொற்பொழிவு: 'தமிழ் மீது வேதம்சாரா மதங்களின் தாக்கம்'
வளைகுடாப் பகுதி தமிழ் மன்றம் வழங்கும் சரித்திர நாடகம் 'பொன்னியின் செல்வன்'
ஸ்ரீ மாதா அமிர்தானந்தமயி கலிபோர்னியா, மிச்சிகன் விஜயம்
'புதுமைப்பெண்' நாட்டிய நிகழ்ச்சி
அட்லாண்டா தமிழ் சபையில் கிறிஸ்து பிறப்பு
லிவர்மோர் சிவ-விஷ்ணு ஆலயத்தில் ஐயப்பன் மண்டல வழிபாடு
- பிரசாத் ராமகிருஷ்ணன்|நவம்பர் 2009|
Share:
Click Here Enlargeசான் பிரான்சிஸ்கோ விரிகுடாப் பகுதியிலுள்ள லிவர்மோர் சிவ-விஷ்ணு திருக்கோவிலில் ஐயப்ப மண்டல வழிபாடு கொண்டாடப்பட உள்ளது. கடந்த ஆண்டு, இங்குள்ள பதினெட்டுப் படிகள் மீது எழுந்தருளி அருள்பாலிக்கும் சுவாமி ஐயப்பனுக்கு, இருபதுக்கும் மேற்பட்ட பெரியோரும் சிறுவர்களும் விரத மாலை அணிந்து இருமுடி பூஜையில் பங்கேற்றனர்.

இந்த ஆண்டு மண்டல துவக்க பூஜை நவம்பர் 15, 2009 (கார்த்திகை 1) அன்று மாலை 5.00 மணிக்குத் தொடங்குகிறது. சபரிமலைக்கு யாத்திரை செல்லவிருக்கும் ஐயப்ப பக்தர்கள் மற்றும் மண்டல விரதமிருந்து லிவர்மோர் ஆலயத்தில் இருமுடி பூஜை செய்து சுவாமி ஐயப்பனை வணங்க விரும்புவோர் இந்த நன்னாளில் துளசிமாலை அணிந்து விரதத்தைத் துவக்குவர். அன்று முறையாகச் சங்கல்பம், அபிஷேகம், அர்ச்சனை, மாலை அணிவித்தல், பஜனை, செண்டையுடன் தாலப்பொலி, மங்கள ஆரத்தி மற்றும் அன்னதானம் நடைபெறும்.

பின்னர் ஒவ்வொரு சனிக்கிழமையும் மாலை 5.30க்கு (நவம்பர் 21, 28; டிசம்பர் 5, 12, 19) வாராந்திர பஜனை, தீபாராதனை நடைபெறும். அந்த நாட்களில் மண்டல விரதம் துவங்க மற்றொரு வாய்ப்பு அளிக்கப்படுகிறது. டிசம்பர் 19 அன்று சிறுவர்கள் துளசி மாலை அணிந்து விரதத்தைத் துவக்கலாம்.

டிசம்பர் 25 அன்று மண்டல விரத வழிபாடு நிறைவுபெறும். அன்று காலை 9.00 மணிக்கு விரதம் மேற்கொண்டவர்களுக்கு இருமுடி கட்டுதலும், அதைத் தொடர்ந்து சங்கல்பம், அபிஷேகம், அர்ச்சனை, செண்டையுடன் தாலப் பொலி, மங்கள ஆரத்தி மற்றும் அன்னதானம் நடைபெறும். சென்ற ஆண்டின் நிகழ்வுகளைக் காண: pramki.blogspot.com
Click Here Enlargeமேலும் விவரங்களுக்கு:
பிரசாத் ராமகிருஷ்ணன்: prasad.ramki@gmail.com - 408-705-8172
ரவிதேவராஜ்: ravi.devaraj@gmail.com - 650-302-3612
சுதாகர் தீவி: sudhakardeevi@gmail.com - 925-528-5421
மனோஜ் எம்பிரான் திரி: kapish@gmail.com
மின்னஞ்சல் குழு: ayyappasamaaj@yahoogroups.com

பிரசாத் ராமகிருஷ்ணன்,
ஃப்ரீமாண்ட், கலிஃபோர்னியா
More

தென்கலிஃபோர்னியா தமிழ்மன்றம் வழங்கும் நகைச்சுவை நாடகம்
டௌன்செண்ட் சொற்பொழிவு: 'தமிழ் மீது வேதம்சாரா மதங்களின் தாக்கம்'
வளைகுடாப் பகுதி தமிழ் மன்றம் வழங்கும் சரித்திர நாடகம் 'பொன்னியின் செல்வன்'
ஸ்ரீ மாதா அமிர்தானந்தமயி கலிபோர்னியா, மிச்சிகன் விஜயம்
'புதுமைப்பெண்' நாட்டிய நிகழ்ச்சி
அட்லாண்டா தமிழ் சபையில் கிறிஸ்து பிறப்பு
Share: 




© Copyright 2020 Tamilonline