சான் பிரான்சிஸ்கோ விரிகுடாப் பகுதியிலுள்ள லிவர்மோர் சிவ-விஷ்ணு திருக்கோவிலில் ஐயப்ப மண்டல வழிபாடு கொண்டாடப்பட உள்ளது. கடந்த ஆண்டு, இங்குள்ள பதினெட்டுப் படிகள் மீது எழுந்தருளி அருள்பாலிக்கும் சுவாமி ஐயப்பனுக்கு, இருபதுக்கும் மேற்பட்ட பெரியோரும் சிறுவர்களும் விரத மாலை அணிந்து இருமுடி பூஜையில் பங்கேற்றனர். இந்த ஆண்டு மண்டல துவக்க பூஜை நவம்பர் 15, 2009 (கார்த்திகை 1) அன்று மாலை 5.00 மணிக்குத் தொடங்குகிறது. சபரிமலைக்கு யாத்திரை செல்லவிருக்கும் ஐயப்ப பக்தர்கள் மற்றும் மண்டல விரதமிருந்து லிவர்மோர் ஆலயத்தில் இருமுடி பூஜை செய்து சுவாமி ஐயப்பனை வணங்க விரும்புவோர் இந்த நன்னாளில் துளசிமாலை அணிந்து விரதத்தைத் துவக்குவர். அன்று முறையாகச் சங்கல்பம், அபிஷேகம், அர்ச்சனை, மாலை அணிவித்தல், பஜனை, செண்டையுடன் தாலப்பொலி, மங்கள ஆரத்தி மற்றும் அன்னதானம் நடைபெறும்.
பின்னர் ஒவ்வொரு சனிக்கிழமையும் மாலை 5.30க்கு (நவம்பர் 21, 28; டிசம்பர் 5, 12, 19) வாராந்திர பஜனை, தீபாராதனை நடைபெறும். அந்த நாட்களில் மண்டல விரதம் துவங்க மற்றொரு வாய்ப்பு அளிக்கப்படுகிறது. டிசம்பர் 19 அன்று சிறுவர்கள் துளசி மாலை அணிந்து விரதத்தைத் துவக்கலாம்.
டிசம்பர் 25 அன்று மண்டல விரத வழிபாடு நிறைவுபெறும். அன்று காலை 9.00 மணிக்கு விரதம் மேற்கொண்டவர்களுக்கு இருமுடி கட்டுதலும், அதைத் தொடர்ந்து சங்கல்பம், அபிஷேகம், அர்ச்சனை, செண்டையுடன் தாலப் பொலி, மங்கள ஆரத்தி மற்றும் அன்னதானம் நடைபெறும். சென்ற ஆண்டின் நிகழ்வுகளைக் காண: pramki.blogspot.com
மேலும் விவரங்களுக்கு: பிரசாத் ராமகிருஷ்ணன்: prasad.ramki@gmail.com - 408-705-8172 ரவிதேவராஜ்: ravi.devaraj@gmail.com - 650-302-3612 சுதாகர் தீவி: sudhakardeevi@gmail.com - 925-528-5421 மனோஜ் எம்பிரான் திரி: kapish@gmail.com மின்னஞ்சல் குழு: ayyappasamaaj@yahoogroups.com
பிரசாத் ராமகிருஷ்ணன், ஃப்ரீமாண்ட், கலிஃபோர்னியா |