இரானியப் படம் 'ஸ்க்ரீம் ஆஃப் த ஆன்ட்ஸ்'
|
|
|
|
நான் வசிக்கும் ஊர் கொலம்பஸ், ஒஹையோ. ஒஹையோ என்றால் ஜப்பானிய மொழியில் காலை வணக்கம். கொலம்பஸின் புறநகரான குரோவ் சிட்டியில் என் வீடு உள்ளது. மற்ற வசிக்கத் தகுந்த புறநகர்கள் டப்ளின், டார்டன்பீல்ட், வெஸ்தர்வில், நியூ ஆல்பனி, போலாரிஸ் போன்றவை. நவம்பர் முதல் ஏப்ரல் வரை குளிர் இருக்கும். கம்பளி ஸ்வெட்டர், மேல்கோட் தேவை. ஜனவரி, பிப்ரவரி மாதங்களில் பனிமழைதான். வசந்தமும் வேனிலும் சுகமாக இருக்கும்.
கொலம்பஸில் ஆயிரத்து ஐந்நூறு முதல் இரண்டாயிரம் வரை இந்தியக் குடும்பங்கள் வாழ்கின்றன. இந்தக் கணிப்பு நான் ஹிந்து ஆலயப் பட்டியலில் இருந்து எடுத்தது. நான்கு இந்தியப் பலசரக்குக் கடைகள் உள்ளன. ஹிந்துக் கோவில்கள் தவிர சின்மயா மிஷன் உள்ளது. விந்தியா என்ற தென்னிந்திய அமைப்பும் கொலம்பஸ் தமிழ்ச் சங்கமும் உள்ளன. முப்பத்து நான்கு இந்திய அமைப்புகள் கொலம்பஸில் உள்ளன.
நாம் வாங்கும்-சக்திக்குள் வீடுகள் கிடைக்கும். மில்லியன் டாலர் வீடுகளும் பல உண்டு. வசிக்கும் தரம் என்று பார்த்தால் ஐம்பது மாநிலங்களில் நாற்பத்து எட்டாவதாக இருக்கிறது. காரணம் இங்கு வரிச்சுமை அதிகம். என் பார்வையில் இந்த நகரம் ஓய்வுக்காலத்துக்கு ஏற்றதல்ல. காரணங்கள், முன்னே கூறியவைதாம்: பனிமழை, குளிர், வரிச்சுமை. |
|
| நாம் ஓய்வுக்காலத்தில் முக்கியமாக கவனிக்க வேண்டியது சீதோஷ்ணம், வரிச்சுமை, பொழுதுபோக்குக்கான வசதிகள், கோவில்களின் சமீபம், புயல், வெள்ளப்பெருக்கு. | |
நான் அறிந்தவரை ஒவ்வொரு நகரத்துக்கும் எதோ ஒரு குறை இருக்கும். இருந்தாலும் நாம் ஓய்வுக்காலத்தில் முக்கியமாக கவனிக்க வேண்டியது சீதோஷ்ணம், வரிச்சுமை, பொழுதுபோக்குக்கான வசதிகள், கோவில்களின் சமீபம், புயல், வெள்ளப்பெருக்கு. சில சமயம் சிலவற்றை விட்டுத்தான் கொடுக்கவேண்டியிருக்கும். ஆமாம், ஓய்வுக்குப் பின் நீ எங்கே வசிக்கப் போகிறாய் என்று கேட்கிறீர்களா? நான் தேர்ந்தெடுத்தது அட்லாண்டா ஜார்ஜியா. நாம் பார்த்த நான்கில், சீதோஷ்ணம், பொழுதுபோக்கு, கோவில்கள் என்ற மூன்றும் அங்கே நன்றாக உள்ளது. வரிச்சுமை கொஞ்சம் அதிகம்தான். ஆங்... அட்லாண்டாவில் நல்ல போக்குவரத்து வசதிகள் இருப்பதும் ஒரு காரணம்.
ஏ. பாலசுப்ரமணியன், கொலம்பஸ் (ஒஹையோ) |
|
|
More
இரானியப் படம் 'ஸ்க்ரீம் ஆஃப் த ஆன்ட்ஸ்'
|
|
|
|
|
|
|