Thendral Audio Advertise About us
New User? | Forgot Password? | Email: Password: Login
Current Issue | Previous Issues | Author Index | Category Index | Organization Index | E-Magazine | Classifieds | Digital Downloads
By Category:
சின்னக்கதை | சமயம் | சினிமா சினிமா | இளந்தென்றல் | கதிரவனை கேளுங்கள் | ஹரிமொழி | நிகழ்வுகள் | மேலோர் வாழ்வில் | மேலும்
May 2006 Issue
ஆசிரியர் பக்கம் | சிறப்புப் பார்வை | மாயாபஜார் | நிதி அறிவோம் | இலக்கியம் | முன்னோடி | அன்புள்ள சிநேகிதியே | நலம்வாழ | நூல் அறிமுகம்
குறுக்கெழுத்துப்புதிர் | சூர்யா துப்பறிகிறார் | சிறுகதை | விளையாட்டு விசயம் | வார்த்தை சிறகினிலே | பொது | சினிமா சினிமா | Events Calendar
எழுத்தாளர் | இளந்தென்றல் | நிகழ்வுகள் | வாசகர் கடிதம் | தமிழக அரசியல்
Tamil Unicode / English Search
மாயாபஜார்
இட்லி வகைகள்
காஞ்சிபுரம் இட்டலி
பூரண இட்டலி
ரவை இட்டலி
சாண்ட்விச் இட்டலி
- தங்கம் ராமசாமி|மே 2006|
Share:
தேவையான பொருட்கள்

புழுங்கலரிசி - 3 கிண்ணம்
உளுத்தம் பருப்பு - 1 கிண்ணம்
பீன்ஸ் - சிறிதளவு
உருளைக் கிழங்கு - 1 (அ) 2
காரட் - 2
பட்டாணி - 1/2 கிண்ணம்
பச்சை மிளகாய் - 3
கடுகு - 1 தேக்கரண்டி
காரப்பொடி - 1 தேக்கரண்டி
பெருங்காயப் பொடி - 1 தேக்கரண்டி
உப்பு - தேவைக்கேற்ப
கறிவேப்பிலை
கொத்துமல்லி
செய்முறை

வழக்கம் போல இட்டலிக்கு முதல்நாளே அரைத்து வைக்கவும். காய்கறிகளை நறுக்கித் தாளித்து உப்பு, பெருங்காயப் பொடி, காரப்பொடி, கறிவேப்பிலை, கொத்துமல்லி சேர்த்துப் பொரியல் செய்து கொள்ளவும். இட்டலித் தட்டில் எண்ணெய் தடவி, ஒரு கரண்டி இட்டலி மாவை விட்டு மேலாக ஒரு தேக்கரண்டி காய்கறிகள் பரப்பி, அதற்கு மேல் ஒரு கரண்டி மாவை ஊற்றவும்.
வேந்தபின் எடுக்கவும். மேலே இன்னொரு அடுக்கு காய் அதற்கு மேல் மாவு ஊற்றியும் செய்யலாம். பார்க்க அடுக்காக அழகாய் இருக்கும்.
மூன்று அடுக்கு இட்டலித் தட்டில் செய்ய முடியாது. இடிக்கும். ஒரே தட்டில் செய்யலாம். இந்த சாண்ட்விச் இட்டலிக்கு வெங்காயம் அல்லது தேங்காய்ச் சட்னி நன்றாக இருக்கும்.

தங்கம் ராமசாமி
More

இட்லி வகைகள்
காஞ்சிபுரம் இட்டலி
பூரண இட்டலி
ரவை இட்டலி
Share: 




© Copyright 2020 Tamilonline