தேவையான பொருட்கள்
புழுங்கலரிசி - 3 கிண்ணம் உளுத்தம் பருப்பு - 1 கிண்ணம் பீன்ஸ் - சிறிதளவு உருளைக் கிழங்கு - 1 (அ) 2 காரட் - 2 பட்டாணி - 1/2 கிண்ணம் பச்சை மிளகாய் - 3 கடுகு - 1 தேக்கரண்டி காரப்பொடி - 1 தேக்கரண்டி பெருங்காயப் பொடி - 1 தேக்கரண்டி உப்பு - தேவைக்கேற்ப கறிவேப்பிலை கொத்துமல்லி
செய்முறை
வழக்கம் போல இட்டலிக்கு முதல்நாளே அரைத்து வைக்கவும். காய்கறிகளை நறுக்கித் தாளித்து உப்பு, பெருங்காயப் பொடி, காரப்பொடி, கறிவேப்பிலை, கொத்துமல்லி சேர்த்துப் பொரியல் செய்து கொள்ளவும். இட்டலித் தட்டில் எண்ணெய் தடவி, ஒரு கரண்டி இட்டலி மாவை விட்டு மேலாக ஒரு தேக்கரண்டி காய்கறிகள் பரப்பி, அதற்கு மேல் ஒரு கரண்டி மாவை ஊற்றவும். வேந்தபின் எடுக்கவும். மேலே இன்னொரு அடுக்கு காய் அதற்கு மேல் மாவு ஊற்றியும் செய்யலாம். பார்க்க அடுக்காக அழகாய் இருக்கும். மூன்று அடுக்கு இட்டலித் தட்டில் செய்ய முடியாது. இடிக்கும். ஒரே தட்டில் செய்யலாம். இந்த சாண்ட்விச் இட்டலிக்கு வெங்காயம் அல்லது தேங்காய்ச் சட்னி நன்றாக இருக்கும்.
தங்கம் ராமசாமி |