Thendral Audio Advertise About us
New User? | Forgot Password? | Email: Password: Login
Current Issue | Previous Issues | Author Index | Category Index | Organization Index | E-Magazine | Classifieds | Digital Downloads
By Category:
சின்னக்கதை | சமயம் | சினிமா சினிமா | இளந்தென்றல் | கதிரவனை கேளுங்கள் | ஹரிமொழி | நிகழ்வுகள் | மேலோர் வாழ்வில் | மேலும்
April 2009 Issue
தென்றல் பேசுகிறது | நேர்காணல் | மாயாபஜார் | ஹரிமொழி | நினைவலைகள் | நலம்வாழ | அன்புள்ள சிநேகிதியே | சிறப்புப் பார்வை | சிரிக்க, சிந்திக்க
குறுக்கெழுத்துப்புதிர் | கதிரவனை கேளுங்கள் | சிறுகதை | எங்கள் வீட்டில் | பொது | நூல் அறிமுகம் | சினிமா சினிமா | Events Calendar
எழுத்தாளர் | இளந்தென்றல் | நிகழ்வுகள் | வாசகர் கடிதம் | இதோ பார், இந்தியா! | வார்த்தை சிறகினிலே
Tamil Unicode / English Search
நலம்வாழ
வசந்த காலத் துன்பங்கள்
- |ஏப்ரல் 2009|
Share:
வசந்த காலம் வந்தாலே ஒவ்வாமையில் (allergy) தவிப்பவர் பலர். சமீபத்திய கணக்கெடுப்பின்படி அமெரிக்காவில் 35.9 மில்லியன் மக்கள் வசந்த காலத்தில் ஒவ்வாமையில் அவதிப் படுகிறார்கள். அமெரிக்காவின் வெவ்வேறு பகுதிகளில் வெவ்வேறு மாதங்களில் ஒவ்வாமை ஏற்படலாம். அமெரிக்க ஒவ்வாமைக் கழகம் இதனை இவ்வாறு பட்டியலிடுகிறது:

பகுதிஒவ்வாமை ஏற்படுத்தும் காரணிகாலகட்டம்
வடமேற்கு மாநிலங்கள்மரங்கள்
புல்
களைப்புல் மகரந்தம்
பிப்ரவரி - மே
ஏப்ரல் - செப்டம்பர்
ஏப்ரல் - டிசம்பர்
வடகிழக்கு மாநிலங்கள்மரங்கள் 
புல் 
களைப்புல்மகரந்தம்
மார்ச் - மே
ஏப்ரல் - அக்டோபர்
ஜூன் - அக்டோபர்
சமவெளி மாநிலங்கள்மரங்கள் 
புல் 
களைப்புல்மகரந்தம்
பிப்ரவரி - மே
ஏப்ரல் - அக்டோபர்
ஜூன் - அக்டோபர்
தென்மேற்கு மாநிலங்கள்மரங்கள் 
புல் 
களைப்புல்மகரந்தம்
ஜனவரி - ஜூன்
வருடம் முழுதும்
ஏப்ரல் - டிசம்பர்
தென்மத்திய மாநிலங்கள் மரங்கள் 
புல் 
களைப்புல்
மகரந்தம்
ஜனவரி - மே
ஏப்ரல் - அக்டோபர்
ஜூன் - அக்டோபர்
தென்வடகிழக்கு மாநிலங்கள்மரங்கள் 
புல் 
களைப்புல்
மகரந்தம்
பிப்ரவரி - ஜூன்

ஏப்ரல் - அக்டோபர்

ஜூன் - செப்டம்பர்
தென்கிழக்கு மாநிலங்கள்மரங்கள் 
புல் 
களைப்புல்மகரந்தம்
ஜனவரி - ஜூலை
மார்ச் - நவம்பர்
மே - நவம்பர்
ஆக, நீங்கள் வசிக்கும் மாநிலத்திற்கேற்ப ஆண்டின் வெவ்வேறு காலத்தில் ஒவ்வாமை பாதிப்பு ஏற்படும். அவரவர் உடலில் எந்தெந்த மகரந்தத்திற்கு ஒவ்வாமை உண்டோ அந்தந்த மாதங்களில் இந்த அறிகுறிகள் தீவிரமடையும். ஒரு சிலருக்கு மரங்களும், சிலருக்கு புல்வெளிகளும், மேலும் சிலருக்குக் களைப்புல் மகரந்தமும் ஒவ்வாமையை ஏற்படுத்தலாம்.

ஒவ்வாமையின் அறிகுறிகள்
* தும்மல்
* மூக்கில் இருந்து நீர் கொட்டுதல்
* கண்களில் இருந்து நீர் கொட்டுதல்
* அரிப்பு
* மூக்கு அடைப்பு

இவை பெரும்பாலும் வீட்டை விட்டு வெளியே சென்றவுடன் ஏற்படலாம். இந்த ஒவ்வாமை ஏற்படுத்தும் மகரந்தத்தின் எண்ணிக்கையை தேசத்தின் பல்வேறு இடங்களில் உள்ள அமைப்புகள் அவ்வப்போது கணக்கெடுக்கின்றன. அன்றைய எண்ணிக்கையை அறிந்துகொள்ள www.aaaai.org/nab
என்ற வலைதளத்தைப் பார்க்கவும்.

ஒவ்வாமை நோய், எப்போது வேண்டுமானாலும் ஆரம்பிக்கலாம். சிறியவர் முதல் பெரியவர் வரை யாரை வேண்டுமானாலும் தாக்கலாம். அதே ஊரில் பல வருடங்களாக வசிப்பவரையும் திடீரென்று ஒரு வருடம் வசந்த காலத்தில் தாக்கலாம். அல்லது, ஒரு ஊரில் இருந்து இன்னொரு ஊருக்குப் பயணிப்பவரை அல்லது மாற்றலில் வந்தவரைத் தாக்கலாம். வசந்த காலத்தின் இனிமையில் இது ஒரு கசப்பான அனுபவம். வருடா வருடம் அதே மாதங்களில் வேதனைப்பட வைக்கும் அனுபவம்.

ஒவ்வாமை ஏற்படுபவோர் கீழ்க் கூறிய வழிகளை பின்பற்றினால் நோயின் தீவிரம் அதிகரிக்காமல் தடுக்க வாய்ப்புக்கள் அதிகம்:

* வசந்த காலச் சுத்தம் (spring cleaning) என்று சொல்லப்படும் விவரமான தூய்மைப்படுத்தும் முறையைக் கையாள வேண்டும். முக்கியமாகக் குளிர் காலம் முடிந்ததும், வீட்டின் பல்வேறு இடங்களைச் சுத்தப்படுத்த வேண்டும். ஜன்னல், கதவு, புத்தக அறை, vent ஆகியவற்றை தூசுதட்டிச் சுத்தப்படுத்த வேண்டும்.

* வெளிவேலைகளைக் காலை 10 மணிக்குப் பின்னால் செய்ய முடிந்தால் நல்லது. குறிப்பாக காலை 5 மணிமுதல் 10 மணி வரை மகரந்தத் துகள்களின் எண்ணிக்கை அதிகமாகக் காணப்படுகிறது.

* உங்களின் சுற்று வட்டாரத்தின் மகரந்தத் துகள் எண்ணிக்கையை அறிந்து கொள்வது நல்லது. அதற்கேற்றாற் போல் வெளி வேலைகளை மாற்றி அமைத்துக் கொள்வது நல்லது.

ஒவ்வாமை ஏற்படும் போது, antihistamine என்று சொல்லப்படும் மருந்துகளை உட்கொள்வது தகுந்தது. முதன்மை மருத்துவரையோ அல்லது ஒவ்வாமை நிபுணரையோ கலந்து ஆலோசிப்பது நல்லது. ஒரு சிலருக்கு மகரந்த எண்ணிக்கை அதிகமாக இருக்கும் நாட்களில் முன்னெச்சரிக்கையாகத் தக்க மருந்தை உட்கொள்வது பயன் தரும்.
* கூடுமானவரை ஜன்னல்களைக் காலை வேளையில் திறக்காமல் இருப்பது நல்லது.

* வாகனத்தில் போகும்போது ஜன்னல்களை மூடிவைத்து, குளிர் சாதனத்தை உபயோகிப்பது நல்லது.

* மிகவும் உஷ்ணமான வறண்ட நாட்களில் வீட்டிலேயே இருப்பது உசிதம்.

* புல்வெளியைச் சுத்தப்படுத்தும் போது முகமூடி அணிந்து கொள்ள வேண்டும்.

* துணிகளை வெளியில் உணர்த்தாமல் இருப்பது நல்லது. துணிகளில் மகரந்தம் ஒட்டிக்கொள்ளும் அபாயம் உள்ளது.

* படுக்கை உறைகளை வாரம் தோறும் துவைப்பது நல்லது.

* தினமும் இரவில் தலைகுளிப்பதின் மூலம் உடலிலும், தலையிலும் ஒட்டியுள்ள மகரந்தத்தை அகற்றுவது நல்லது.

* மழை நாட்களைத் தொடர்ந்து பூசனம் ஏற்படும் அபாயத்தை கவனத்தில் கொள்ள வேண்டும்.

* வீட்டில் குறிப்பாக மிதியடி, தரைக் கம்பளம் ஆகியவற்றை அடிக்கடி தூசு தட்ட வேண்டும். பழைய மிதியடிகளை மாற்ற வேண்டும். மரத்தரை போடுவது உகந்தது.

* பூனை போன்ற வளர்ப்புப் பிராணிகள் ஒவ்வாமையை அதிகப்படுத்தும். இவற்றை வளர்ப்போர், தங்களுக்கு அவற்றின் மூலம் ஒவ்வாமை ஏற்படுகிறதா என்று பரிசோதித்துக் கொள்ள வேண்டும். அவை இருக்கும் நண்பர்களின் வீட்டிற்குச் செல்வதைத் தவிர்க்க வேண்டும்.

இந்த முறைகளைக் கையாண்ட பின்னரும் ஒவ்வாமை ஏற்படும் போது, antihistamine என்று சொல்லப்படும் மருந்துகளை உட்கொள்வது தகுந்தது. முதன்மை மருத்துவரையோ அல்லது ஒவ்வாமை நிபுணரையோ கலந்து ஆலோசிப்பது நல்லது. ஒரு சிலருக்கு மகரந்த எண்ணிக்கை அதிகமாக இருக்கும் நாட்களில் முன்னெச்சரிக்கையாகத் தக்க மருந்தை உட்கொள்வது பயன் தரும். பலருக்கு வசந்த காலம் முழுவதுமே மருந்தை தினம் உட்கொள்ள வேண்டி வரலாம். இந்த மருந்துகள் Zyrtec, claritin, Allegra வகையைச் சார்ந்தன.

இதைத் தவிர மூக்கில் செலுத்தப்படும் Steroid spray நல்ல தீர்வு தர வல்லது. இது Flonase, Nasonex என்ற பெயர்களில் கிடைக்கின்றது. இவற்றை வசந்த காலத்தில் தினமும் எடுத்துக் கொள்ள வேண்டும்.

ஆஸ்த்துமா நோயில் அவதிப்படுவோருக்கு இந்தக் காலகட்டத்தில் இழுப்பு அதிகமாகும் அபாயம் உள்ளது. இவர்கள் கையில் எப்போதும் இழுப்பு மருந்தை (inhaler) வைத்திருக்க வேண்டும். குறிப்பாக உடற்பயிற்சியினால் இழுப்பு உண்டாகும் வகையினர், காலை பனிமூட்டம் இருக்கும் பிரதேசங்களில் ஓட்டம் அல்லது நடை போன்ற உடற்பயிற்சி செய்யும் போது, கைவசம் இந்த இழுப்பு மருந்துடன் செய்வது நல்லது. அதையும் மீறி இழுப்பு அதிகமானால் Prednisone மாத்திரையும், மருத்துவமனையில் வழங்கும் nebulizer சிகிச்சையும் தேவைப்படலாம். இவற்றுடன் Singulair என்று சொல்லப்படும் மாத்திரையும் தினமும் உட்கொள்ள வேண்டி வரலாம்.

வருமுன் காப்பது நல்லது. ஆனால் ஒவ்வாமை ஏற்பட்டு விட்டால் தாமதிக்காமல் உடனடியாக மருந்து எடுத்துக் கொள்வதின் மூலம் தீவிரம் அதிகமாகாமல் தடுக்கலாம்.

ஒரு சிலர் வருடம் முழுதும் அவரவர் ஊரில் தயாராகும் தேன் உண்பதின் மூலம் ஒவ்வாமையின் தீவிரத்தைக் குறைக்கலாம். இவற்றையும் மீறி ஒவ்வாமையின் தீவிரத்தில் அவதிப்படுவோர், ஒவ்வாமை நிபுணரை நாட வேண்டும். எந்த எந்தப் புரதத்துக்குத் தமது ஒவ்வாமை ஏற்படுகிறது என்பதை தோல் பரிசோதனையில் கண்டுபிடித்து, அதற்கான ஊசிகளை எடுத்துக் கொள்ளலாம். குறைந்த அளவே ஒவ்வாமை உள்ளோருக்கு நிரந்தரத் தீர்வு ஏற்படவும் இந்தச் சிகிச்சை முறையில் வாய்ப்பு உள்ளது. ஆனால் வாரத்திற்கு ஒருமுறை, இரண்டு வாரத்திற்கு ஒருமுறை என்று ஊசிகள் தேவைப்படலாம்.

முன்னெச்சரிக்கையோடு இருந்தால் வசந்தம் இனிக்கும்!

* அமெரிக்க ஒவ்வாமைக் கழகத்தின் ஒவ்வாமை வண்ணப்படம் பார்க்க: www.aaaai.org
Share: 




© Copyright 2020 Tamilonline