காலிஃப்ளவர் சாதம் ஆப்பிள் அல்வா
|
|
வதக்கிய காய்கறி சாதம் (Stir-fried Vegetable Rice) |
|
- லதா சந்திரமெளலி|ஏப்ரல் 2009| |
|
|
|
|
தேவையான பொருட்கள் பாசுமதி அரிசி - 2 கிண்ணம் இஞ்சி (சிறிதாக நறுக்கியது - 1 மேசைக்கரண்டி கேரட் (நீளவாக்கில் நறுக்கியது) - 1/2 கிண்ணம் பீன்ஸ் (நீளவாக்கில் நறுக்கியது) - 1/2 கிண்ணம் பட்டாணி - 1/4 கிண்ணம் வெங்காயம் (நீளவாக்கில் நறுக்கியது) - 1/2 கிண்ணம் பூண்டு - 3 சிறு துண்டங்கள் மிளகாய்த்தூள் - 1 மேசைக்கரண்டி டோஃபூ - 14 அவுன்ஸ் சிறு துண்டங்கள் சீரகத்தூள் - 1 தேக்கரண்டி கொத்துமல்லி - 2 மேசைக்கரண்டி (பொடியாக நறுக்கியது) எண்ணெய் - தேவைக்கேற்ப ஸ்டிர்ஃப்ரை சாஸ் - 2 மேசைக்கரண்டி உப்பு - சிறிதளவு |
|
செய்முறை ரைஸ் குக்கரில் சாதம் சமைக்கும் போது கேரட், பீன்ஸ், பட்டாணியை மேலே வைத்து வேக வைக்கவும். நன்கு வெந்ததும் அடி கனமான பாத்திரத்தில் எண்ணெய் விட்டு, வெங்காயம், பூண்டு, இஞ்சி சேர்த்து வதக்கவும். பின்னர் டோஃபூ சேர்த்து, மிளகாய்த்தூள், சீரகத்தூள், உப்பு சேர்த்து நன்கு வதக்கவும். பின்னர் கொத்துமல்லி சேர்த்து இறக்கவும். சாதத்தைப் பரிமாறும் முன் வெஜிடபிள் மிக்ஸில் நன்கு கலந்து வதக்கிச் சேர்த்து, சூடாகப் பரிமாறவும். சுவையான சத்தான உணவு. கல்லூரி மாணவர்கள் எளிதாகத் தயாரித்துவிடலாம்.
லதா சந்திரமௌலி |
|
|
More
காலிஃப்ளவர் சாதம் ஆப்பிள் அல்வா
|
|
|
|
|
|
|