ஒபாமா வருகிறார், பராக்! பராக்! அம்பைக்கு இயல் விருது எஸ்.வைத்தீஸ்வரனுக்கு 'விளக்கு' விருது கனடாவில் அறிஞர் அண்ணா தபால்தலை வெளியீடு துக்கடாக்களில் துணுக்கு வெடிகள்
|
|
சர்ஜன் ஜெனரல் டாக்டர் சஞ்சய் குப்தா? |
|
- சுந்தரேஷ்|பிப்ரவரி 2009| |
|
|
|
|
சிஎன்என் தொலைக்காட்சியில் "House Call with Dr. Sanjay Gupta" என்ற பொது ஆரோக்கியம் மற்றும் மருத்துவத் தொடரை முன்னின்று நடத்தி வரும் இந்திய வம்சாவளியினரான டாக்டர். சஞ்சய் குப்தாவை புதிய அமெரிக்க அதிபர் பராக் ஒபாமா, அமெரிக்காவின் சர்ஜன் ஜெனரல் என்னும் முக்கியமான பதவியை ஏற்க அழைப்பு விடுத்துள்ளார். 39 வயதில் இந்தப்பதவியை அடையக்கூடிய இளைஞர் டாக்டர். சஞ்சய் குப்தா. இது இந்தியர் அனைவரும் பெருமைப்பட வேண்டிய செய்தி.
இவர், சிஎன்என் தொலைக்காட்சியின் பல மருத்துவ ஆவணப்படங்களில் பணியாற்றி வருவதோடு நரம்பியல் அறுவைச்சிகிச்சை நிபுணராகவும், நரம்பியல் அறுவை சிகிச்சைத்துறையில் துணைப்பேராசிரியராகவும் பணியாற்றி வருகிறார். |
|
அமெரிக்க சர்ஜன் ஜெனரல் என்பது அமெரிக்கப் பொது மக்களுக்கான மருத்துவ வழிகாட்டி போன்றதொரு பொறுப்பு. ஆரோக்கிய வாழ்வு, அமெரிக்க மக்களுக்கு உடல்நலம் குறித்த அறிவியல் பூர்வமான தகவல்களைத் தந்து நோயற்ற சமுதாயத்திற்கான மருத்துவ வழிகாட்டியாக செயல்பட வேண்டிய பொறுப்பு சர்ஜன் ஜெனரலுக்கு உள்ளது.
வே. சுந்தரேஷ் |
|
|
More
ஒபாமா வருகிறார், பராக்! பராக்! அம்பைக்கு இயல் விருது எஸ்.வைத்தீஸ்வரனுக்கு 'விளக்கு' விருது கனடாவில் அறிஞர் அண்ணா தபால்தலை வெளியீடு துக்கடாக்களில் துணுக்கு வெடிகள்
|
|
|
|
|
|
|