|
|
|
1. லலிதாவிடம் சில சாக்லேட்டுகள் இருந் தன. அவற்றை எட்டு எட்டாகப் பங்கிட்டால் ஐந்து மீதமிருக்கிறது. ஆறு ஆறாகப் பங்கிட்டால் மீதி மூன்று வருகிறது. நான்கு நான்காகப் பங்கிட்டால் மீதி ஒன்று வருகிறது. லலிதாவிடம் இருந்த மொத்த சாக்லேட்டுகள் எத்தனை?
2. ஒரு கூடையில் நூறு மாம்பழங்கள் இருந்தன. அவற்றை உமா, சுமா, ஹேமா, ரீனா ஆகிய நான்கு பேரும் பங்கு போட்டுக் கொண்டனர். ரீனாவிடம் இருந்த மாம்பழங்களை விட உமா ஆறு பழங்கள் அதிகம் வைத்திருந்தாள். ஹேமாவிடம் இருந்த பழங்களை விட ஆறு பழங்களை அதிகமாகச் சுமா வைத்திருந்தாள். சுமாவிடம் இருந்ததை விட ரீனா ஆறு பழங்களை அதிகம் வைத்திருந்தாள். அப்படியென்றால் ஒவ்வொருவரிடமும் இருந்த பழங்களின் எண்ணிக்கை எவ்வளவு?
3. ஒரு பெட்டியில் சில பென்சில்கள் இருந்தன. முதலில் வந்த ராமு அந்தப் பென்சில்களில் பாதியையும், கூடுதலாக ஒன்றும் எடுத்துக் கொண்டான். அடுத்து வந்த சோமு அதேபோன்று பெட்டியில் இருந்தவற்றில் பாதியையும், கூடுதலாக ஒன்றையும் எடுத்துக் கொண்டான். இறுதியாக வந்த கணேஷ் பெட்டியில் இருந்தவற்றில் பாதியையும் கூடுதலாக ஒன்றையும் எடுத்துக் கொண்டான். தற்போது பெட்டியில் மீதம் ஒரே ஒரு பென்சில் மட்டுமே இருந்தது. அப்படி யென்றால் பெட்டியில் முதலில் இருந்த பென்சில்கள் எத்தனை, ராமு, சோமு, கணேஷ் எடுத்துக் கொண்டது எவ்வளவு?
4. 1 முதல் 9 வரையிலுள்ள தொடர் எண்கள் வரிசையில் கூட்டினாலும், பெருக்கினாலும் ஒரே விடையைத் தரும் தொடர் எண்கள் எவை?
5. அது ஓர் ஐந்து இலக்க எண். அந்த எண்ணை நான்கால் பெருக்கினால் வரும் எண் அந்த எண்ணின் தலை கீழ் எண். அந்த எண் எது? |
|
விடைகள் 1. லலிதாவிடம் இருந்த சாக்லேட்டுகள் 21
எட்டு எட்டாகப் பங்கிட = 21 / 8 = ஈவு 2; மீதி 5
ஆறு ஆறாகப் பங்கிட = 21 / 6 = ஈவு 3; மீதி 3
நான்கு நான்காகப் பங்கிட = 21 / 4 = ஈவு 5; மீதி 1
ஆகவே லலிதாவிடம் இருந்த மொத்த சாக்லேட்டுகளின் எண்ணிக்கை= 21
2. மொத்த மாம்பழங்கள் = 100 ஹேமா = x சுமா = x + 6 ரீனா = x + 12 உமா = x + 18 மொத்த பழங்கள் = 4x + 36 4x + 36 = 100 4x = 100-36 = 64 x = 16. எனவே ஹேமா = 16; சுமா = 22; ரீனா = 28; உமா = 34 என பங்கிட்டுக் கொண்டிருப்பர்.
3. பெட்டியில் இருந்த பென்சில்கள்= 22 ராமு எடுத்துக் கொண்டது = 22/2 + 1 = 11+1 = 12; பெட்டியில் மீதம் இருப்பது 22-12 = 10; சோமு எடுத்துக் கொண்டது = 10/2 + 1 = 5+1= 6 பெட்டியில் மீதம் இருப்பது 10-6 = 4; கணேஷ் எடுத்துக் கொண்டது = 4/2 + 1 = 2+1 = 3; பெட்டியில் மீதம் இருப்பது 4-3= 1.
4. அந்த எண்கள் = 1 + 2 + 3 = 6 1 x 2 x 3 = 6
5. 21978 x 4 = 87912. இது 21978ன் தலைகீழ் எண். |
|
|
|
|
|
|
|