இந்தியாவின் சூரிய விண்கலம் 'ஆதித்யா' ஒரு கிராமம், ஒரு இளைஞர் சதுரங்க இளைஞர் படை!
|
|
இறந்தும் உயிர்வாழும் தாய் |
|
- அரவிந்த்|டிசம்பர் 2008| |
|
|
|
கரூர் மாவட்டம் கிருஷ்ணராயபுரத்தைச் சேர்ந்த மாணவன் சுரேஷ்குமார். பெற்றோர் சாந்தி - மருதையன். சுரேஷ் எட்டாம் வகுப்பும் அவனது சகோதரி கோமதி இரண்டாம் வகுப்பும் படித்து வருகின்றனர். இந்நிலையில் திடீரென சாந்திக்கு உடல்நலக்குறைவு ஏற்பட்டு திருச்சியில் உள்ள ஒரு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். நாளடைவில் உடல் குணமாகாததுடன் மூளைச்சாவும் ஏற்பட்டு விட்டது. சாந்தி பிழைக்க மாட்டார் என்பதை மருத்துவர்கள் மூலம் அறிந்து கொண்ட சுரேஷ்குமார், தாயினது உடல் உறுப்புகளை தானம் செய்து மற்றவர்களுக்கு உதவலாம் எனத் தந்தையை வற்புறுத்தினான். அதன்படியே சாந்தியின் கண்கள், சிறுநீரகங்கள், இதய வால்வு முதலியன அகற்றப்பட்டு தேவைப்படுபவருக்குப் பொருத்த ஏற்பாடுகள் செய்யப்பட்டன.
'என் தாய் மறைந்தாலும் அவர் உடல் உறுப்புகளால் சிலர் உயிர் வாழ்வது ஆறுதலை அளிக்கிறது' என்கிறான் சுரேஷ் குமார். |
|
அரவிந்த் |
|
|
More
இந்தியாவின் சூரிய விண்கலம் 'ஆதித்யா' ஒரு கிராமம், ஒரு இளைஞர் சதுரங்க இளைஞர் படை!
|
|
|
|
|
|
|