கனெக்டிகட் தமிழ் சங்கம்: தீபாவளித் திருவிழா எழுத்தாளர் திலீப்குமார் ஓர் இலக்கியச் சந்திப்பு சிகாகோ தமிழ்ச் சங்கம் தேனிசை மழை வேளுக்குடி கிருஷ்ணன் விரிவுரை கலாலயா எஸ்.பி.பி., சித்ரா இசைவிருந்து லாஸ் ஏஞ்சலஸ் மலிபு கோவில் நவராத்திரி திருவிழா இர்வைன் கோவிலில் கலைநிகழ்ச்சிகள் சாக்ரமெண்டோ சித்தி வினாயகர் கோவிலில் தசரா விழா
|
|
|
|
தமிழ்நாட்டில் சமூக சேவை செய்து வரும் உதவும் கரங்கள் இயக்கத்தின் நிறுவனர் வித்யாகர், 2008 செப்டம்பர் மாதம் சான்ஃப்ரான்ஸிஸ்கோ விரிகுடாப் பகுதிக்கு வந்திருந்தார். பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொண்ட அவர், உதவும் கரங்கள் ஆற்றி வரும் சமூகப் பணிகளின் சமீபகாலச் சாதனைகளை விளக்கினார்.
முதலாவதாக, ஸிஸ்கோ (Cisco) நிறுவனத்தில் நடந்த கூட்டத்தில் ஐம்பதுக்கும் மேலான ஊழியர்களுக்கு இயக்கத்தின் பணிகளை விளக்கினார். அடுத்து ஸ்டேன் ஃபோர்ட் பல்கலைக்கழக மருத்துவமனையின் மனநலத்துறை நடத்தும் பிங் (Bing) நர்ஸரிப் பள்ளியச் சென்று அதன் நடைமுறைகளைக் கண்டறிந்தது. மனநலக் குறைபாடுகள் கொண்ட குழந்தைகளுக்கான பராமரிப்பு மற்றும் கல்விமுறைகளைப் பற்றி வித்யாகர் கேட்டுணர்ந்து, அம்முறைகளை உதவும் கரங்களில் எவ்வாறு பயன்படுத்த முடியும் என்று கலந்தாலோசித்தார்.
இன்னும் இரண்டு நிகழ்ச்சிகளில், உதவும் கரங்கள் தொண்டர்களுக்கும், அன்பர்களுக்கும், கொடை வள்ளல்களுக்கும் உதவும் கரங்களின் சமீப சாதனைகளைப் பற்றிச் சிறப்புச் சொற்பொழிவுகள் ஆற்றினார். அந்நிகழ்ச்சிகளிலிருந்து சில குறிப்புகள்:
உதவும் கரங்களின் விரிகுடாப் பகுதி சேவையாளர் பிரிவின் தொண்டுகளும், நிதி திரட்டும் திறனும் பிரமிப்பூட்டுவதாக உள்ளது என்று பாராட்டினார். உதவும் கரங்கள் பள்ளிக்கு மேலும் 16 வகுப்பறைகள் கட்டப் போவதாக அறிவித்தார். 'ஜீவன்' சமூக நலத் திட்டம் ஒன்றை அறிவித்தார். இல்லப் பணிகள் மட்டுமல்லாமல், அருகிலிருக்கும் சமூகத்துக்கும் பணியாற்றுவதால், அந்தச் சமூகத்தாரும் சேர்ந்து உதவும் கரங்களின் சேவைகளில் பங்கேற்க வாய்ப்புள்ளது என்ற கருத்தை விளக்கினார். |
|
வித்யாகர் 1983-ம் ஆண்டு உதவும் கரங்கள் இயக்கத்தை நிறுவினார். அனாதையான தம்மைப் பராமரித்த சமூகத்துக்கு நன்றி கூறும் வகையில் இதனை ஆரம்பித்தார். அவருடைய வாழ்க்கையின் முழு ஆர்வமும் இந்த இயக்கம்தான்.
உதவும் கரங்களின் சான் ஃப்ரான்ஸிஸ்கோ விரிகுடா வட்டம் 2003ஆம் ஆண்டு நிறுவப்பட்டது. சேவைக்கான நிதி திரட்ட அதன் 200-க்கும் மேலான தொண்டர்கள் உற்சாகத்துடன் உழைக்கின்றனர். கலாட்டா 2004-2007, எஸ்.வி.சேகர், கிரேஸி மோஹன், 'நாடக்', 'க்ரியா' குழுக்களின் நாடகங்கள் மூலம் நிதி திரட்டியது இம்முயற்சிகளில் சில.
வள்ளல் நிலை (sponsor level) அளவில் நன்கொடை வழங்குவதின் பலன்களையும், வழங்கும் முறையைப் பற்றியும் மேலும் அறியவும்,உதவும் கரங்களுடன் இணைந்து தொண்டாற்றவும் பார்க்க இணையதளம்: www.udavumkarangal-sfba.org
கதிரவன் எழில்மன்னன் |
|
|
More
கனெக்டிகட் தமிழ் சங்கம்: தீபாவளித் திருவிழா எழுத்தாளர் திலீப்குமார் ஓர் இலக்கியச் சந்திப்பு சிகாகோ தமிழ்ச் சங்கம் தேனிசை மழை வேளுக்குடி கிருஷ்ணன் விரிவுரை கலாலயா எஸ்.பி.பி., சித்ரா இசைவிருந்து லாஸ் ஏஞ்சலஸ் மலிபு கோவில் நவராத்திரி திருவிழா இர்வைன் கோவிலில் கலைநிகழ்ச்சிகள் சாக்ரமெண்டோ சித்தி வினாயகர் கோவிலில் தசரா விழா
|
|
|
|
|
|
|