Thendral Audio Advertise About us
New User? | Forgot Password? | Email: Password: Login
Current Issue | Previous Issues | Author Index | Category Index | Organization Index | E-Magazine | Classifieds | Digital Downloads
By Category:
சின்னக்கதை | சமயம் | சினிமா சினிமா | இளந்தென்றல் | கதிரவனை கேளுங்கள் | ஹரிமொழி | நிகழ்வுகள் | மேலோர் வாழ்வில் | மேலும்
October 2008 Issue
தென்றல் பேசுகிறது | நேர்காணல் | மாயாபஜார் | ஹரிமொழி | நினைவலைகள் | சிறப்புப் பார்வை | அன்புள்ள சிநேகிதியே | நலம்வாழ | சிரிக்க, சிந்திக்க
குறுக்கெழுத்துப்புதிர் | சூர்யா துப்பறிகிறார் | சிறுகதை | வார்த்தை சிறகினிலே | எங்கள் வீட்டில் | பொது | சினிமா சினிமா | Events Calendar
எழுத்தாளர் | இளந்தென்றல் | நிகழ்வுகள் | வாசகர் கடிதம் | அஞ்சலி | யார் இவர்? | இதோ பார், இந்தியா!
நடந்தவை
Tamil Unicode / English Search
நிகழ்வுகள் - நடந்தவை
ராகசித்ரா கலை நிலையம் வழங்கிய நியூயார்க் இந்திய இசைவிழா
ஸ்ரீக்ருபா நடனக் குழுமம்: ராமாயண நாட்டிய நாடகம்
சிகாகோ தியாகராஜ உற்சவம்: கர்நாட சங்கீதம் போட்டிகள்
டெட்ராயிட் பாலாஜி கோவில் கல்யாண உத்சவம்
அஷ்வின் ஸ்ரீநிவாசன் கர்நாடக இசை அரங்கேற்றம்
லஷ்மிநாராயணா இசைப்பள்ளி பிள்ளையார் சதுர்த்தி
ஸ்வேதா ஸ்ரீதர் பரதநாட்டிய அரங்கேற்றம்
கர்நாடிகா சகோதரர்கள் கச்சேரியில் பாலாஜி கிரிதரன் மிருதங்க அரங்கேற்றம்
ஷரண்யா பரதநாட்டிய அரங்கேற்றம்
சஹானா கிருபாகரன் பரதநாட்டிய அரங்கேற்றம்
டெற்றாயிட் பெருநிலத்தில் ஷீரடி சாயிபாபா கோவில்
மனைவியர் போற்றும் விழா
- ராஜேஷ் சாம்பசிவம்|அக்டோபர் 2008|
Share:
Click Here Enlargeஉலகில் 50 சதவிகிதம் பெண்கள். மற்ற அனைவரும் அப்பெண்களால் பெற்றெடுக்கப்பட்ட ஆண்கள் எனப் பெண்ணினத்தின் பெருமையை உணர்த்தியவர் வேதாத்திரி மகரிஷி. அவரது துணைவியார் அன்னை லோகாம்பாள் அவர்களின் பிறந்த தினமான ஆகஸ்ட் 30, அன்பர்களால் மனைவியரைப் போற்றும் தினமாகக் கொண்டாடப்படுகிறது. இவ் வருடம் இந்த நாளை முதல்முறையாக உலக சமுதாய சேவா சங்கத்தின் (World Community Service Center) விரிகுடாப்பகுதி மன்றம், ஃப்ரீமாண்ட் ஹிந்துக் கோயிலில் கொண்டாடியது. மூத்த பேராசிரியர் அறிவானந்தம் (Joint Director, SMART, Aliyar, India) அவர்கள் தலைமையேற்று நடத்தினார். சிறப்பு தம்பதிகளாக நடராஜன் வெங்கடாசலம், உண்ணாமலை வெங்கடாசலம் உட்படப் மற்றும் பலர் கலந்துகொண்டனர். செயலாளர் ரவிகுமார் கோவிந்தராஜன் இவ்விழாவை ஒருங்கிணைத்து நடத்த, பொறுப்பாசிரியர் முரளி சீனிவாசன் விழாவின் சிறப்பை எடுத்துரைத்தார்.

'வாழ்க வையகம், வாழ்க வளமுடன்!' என்பதே உலக சமுதாய சேவா சங்கத்தின் தாரக மந்திரம். தனிமனித அமைதியே உலக அமைதிக்கு ஒரே வழி என்று உணர்த்தியவர் இந்நிறுவனத்தின் தந்தை தத்துவ ஞானி ஸ்ரீ வேதாத்திரி மகரிஷி அவர்கள். நீண்ட ஆயுள் மற்றும் உடல்நலம் பெற எளிய முறை உடற்பயிற்சி, மன அமைதி, நலம் பெற எளிய முறை குண்டலினி தவப் பயிற்சி மற்றும் அகத்தாய்வு, உயிருக்கு சித்தர்களின் காயல்கல்பப் பயிற்சி ஆகியன இந் நிறுவனத்தின் மூலம் பொதுமக்களுக்கு அளிக்கப்படுகின்றது.
'இறைவன் வேறு நாம் வேறல்ல; நாமே இறைவன், எல்லாம் இறைவனின் தோற்றமே' என்று அவனை உணர்ந்து அறிய இப்பயிற்சிகள் உதவுகின்றன. எல்லா மதத்தினரும், எந்த வயதினரும் ஆண், பெண் பாகுபாடு இன்றி பின்பற்றும் சிறப்புமிக்கது இப்பயிற்சிகள். இந்நிறுவனத்தின் வட அமெரிக்கக் கிளையாக வளைகுடாப் பகுதி மன்றம் (SKY Bay Area) அக்டோபர் 2007ல் இருந்து பொதுமக்களுக்குச் சேவை செய்து வருகிறது.

சிறப்பு தவத்திற்குப் பின் தம்பதிகள் பூ, பழம் பரிமாறி தங்கள் அன்பை வெளிப்படுத்திக் கொண்டனர். தலைவர் ராஜேஷ் சாம்பசிவம் நன்றி உரைக்க, காலை உணவுடன் விழா நிறைவுபெற்றது.

ராஜேஷ் சாம்பசிவம், ஃப்ரீமாண்ட்
More

ராகசித்ரா கலை நிலையம் வழங்கிய நியூயார்க் இந்திய இசைவிழா
ஸ்ரீக்ருபா நடனக் குழுமம்: ராமாயண நாட்டிய நாடகம்
சிகாகோ தியாகராஜ உற்சவம்: கர்நாட சங்கீதம் போட்டிகள்
டெட்ராயிட் பாலாஜி கோவில் கல்யாண உத்சவம்
அஷ்வின் ஸ்ரீநிவாசன் கர்நாடக இசை அரங்கேற்றம்
லஷ்மிநாராயணா இசைப்பள்ளி பிள்ளையார் சதுர்த்தி
ஸ்வேதா ஸ்ரீதர் பரதநாட்டிய அரங்கேற்றம்
கர்நாடிகா சகோதரர்கள் கச்சேரியில் பாலாஜி கிரிதரன் மிருதங்க அரங்கேற்றம்
ஷரண்யா பரதநாட்டிய அரங்கேற்றம்
சஹானா கிருபாகரன் பரதநாட்டிய அரங்கேற்றம்
டெற்றாயிட் பெருநிலத்தில் ஷீரடி சாயிபாபா கோவில்
Share: 




© Copyright 2020 Tamilonline