நல்ல கொழுப்புக்கு அவொகேடோ...! அவொகேடோ தோசை அவொகேடோ பாயசம் குவாகமோல் (Guacamole) அவொகேடோ காரட் சூப்
|
|
|
|
தேவையான பொருட்கள் மைதாமாவு - 1 கிண்ணம் அவொகேடோ பழக்கூழ் - 1/3 கிண்ணம் கெட்டி மோர் - 1/4 கிண்ணம் முட்டை - 2 சர்க்கரை - 1/2 கிண்ணம் பேகிங் சோடா - 1/2 தேக்கரண்டி சோடா உப்பு - 1/4 தேக்கரண்டி உப்பு - தேவைக்கேற்ப வால்நட், முந்திரி - 1/4 கிண்ணம் (உடைத்தது)
செய்முறை: முட்டைகளின் வெள்ளைக் கருவைத் தனியே எடுத்துக் கடைந்து வைத்துக் கொள்ளவும். பழம், மோர், உடைத்த பருப்புகளை ஒன்றாகச் சேர்த்து ஒரு பெரிய பாத்திரத்தில் கலந்து வைத்துக் கொள்ளவும். முட்டை வெள்ளைக் கரு தவிர பிற பொருட்களை இரண்டு முறை சலித்து எடுக்கவும். சலித்த மாவை பாத்திரத்தில் உள்ள பழக்கலவையுடன் கலந்து, கடைசியில் வெள்ளைக்கரு சேர்த்து மெதுவாகக் கலக்கவும்
கலவையை அவனில் வைக்கக்கூடிய வெண்ணெய் தடவிய தட்டில் வைத்து 350 டிகிரி ஃபாரன்ஹீட்டில் பேக் செய்யவும். ஒரு மரக்குச்சியை இதன் நடுவில் நுழைத்து எடுக்க, அது குச்சியில் ஒட்டாமல் வந்தால், அதுதான் சரியான பதம். ஆறிய பின்னர் கேக்குகளாக வெட்டி எடுத்துப் பரிமாறவும். |
|
சரஸ்வதி தியாகராஜன் |
|
|
More
நல்ல கொழுப்புக்கு அவொகேடோ...! அவொகேடோ தோசை அவொகேடோ பாயசம் குவாகமோல் (Guacamole) அவொகேடோ காரட் சூப்
|
|
|
|
|
|
|