நல்ல கொழுப்புக்கு அவொகேடோ...! அவொகேடோ கேக் அவொகேடோ பாயசம் குவாகமோல் (Guacamole) அவொகேடோ காரட் சூப்
|
|
|
|
தேவையான பொருட்கள் இட்லி அரிசி - 2 கிண்ணம் உளுத்தம் பருப்பு - 3/4 கிண்ணம் அவொகேடோ - 1 பச்சைமிளகாய் - 4 உப்பு - தேவைக்கேற்ப
செய்முறை: அரிசியையும் பருப்பையும் தனித்தனியாக ஊறவைத்து, மசிய அரைத்து எடுக்கவும். பின் உப்பு சேர்த்து ஒன்றாகக் கலந்து இரவு புளிக்க வைக்கவும். மறுநாள் காலையில் அவொகேடோவின் உண்ணத் தக்க பாகத்தை, மிக்ஸியில் பச்சைமிளகாயுடன் சேர்த்துக் கூழாக அரைக்கவும். அவ்வாறு அரைத்து எடுத்ததை புளித்த மாவுடன் சேர்த்துக் கலக்கவும். பின்னர் மெல்லிய தோசைகளாக வார்த்து எடுத்து தக்காளிச் சட்னியுடன் சாப்பிட மிகச் சுவையாக இருக்கும். |
|
சரஸ்வதி தியாகராஜன் |
|
|
More
நல்ல கொழுப்புக்கு அவொகேடோ...! அவொகேடோ கேக் அவொகேடோ பாயசம் குவாகமோல் (Guacamole) அவொகேடோ காரட் சூப்
|
|
|
|
|
|
|