குழம்பு வகைகள் பாகம் 2 பொரித்த குழம்பு மிளகுக் குழம்பு
|
|
|
தேவையான பொருட்கள்
புளித்த மோர் - 2 கிண்ணம் துவரம் பருப்பு - 1 தேக்கரண்டி கடலைப்பருப்பு - 1 தேக்கரண்டி பச்சை மிளகாய் - 4 சீரகம் - 1 தேக்கரண்டி தேங்காய் - 3 தேக்கரண்டி கறிவேப்பிலை - சிறிதளவு கொத்துமல்லி - சிறிதளவு கடுகு - தாளிக்க மஞ்சள் பொடி - 1/4 தேக்கரண்டி உப்பு - தேவைக்கேற்ப |
|
செய்முறை
மோரைக் கடைந்து உப்புப் போட்டு வைக்கவும்.
துவரம் பருப்பு, கடலைப்பருப்பு இவற்றை ஊறவைத்து, தேங்காய், பச்சைமிளகாய், சீரகம் சேர்த்து அரைத்து எடுக்கவும். அரைத்த விழுதை மோரில் கலக்கி அடுப்பில் வைத்துக் கொதிக்க விடவும்.
லேசாகக் கொதி வந்ததும் மஞ்சள் தூள் போட்டு, கடுகு தாளித்து இறக்கவும்.
சிவப்பு மிளகாய் வைத்து அரைத்தும் செய்யலாம். சீரகத்திற்குப் பதில் கொத்துமல்லி விதை (தனியா) சேர்த்து அரைத்தும் செய்யலாம்.
வெண்டைக் காயை எண்ணெயில் வறுத்துப் போடவும். மற்ற எந்தக் காயையும் வேக வைத்துப் போடலாம். பருப்பு உருண்டை செய்து மோர்க்குழம்பில் போட்டும் செய்யலாம். அதுபோல் ஓமத்தை வறுத்துப் பொடிசெய்து இறக்கி வைத்து மோர்குழம்பில் போட்டும் செய்யலாம்.
தங்கம் ராமசாமி |
|
|
More
குழம்பு வகைகள் பாகம் 2 பொரித்த குழம்பு மிளகுக் குழம்பு
|
|
|
|
|
|
|