அவொகேடோ தோசை அவொகேடோ கேக் அவொகேடோ பாயசம் குவாகமோல் (Guacamole) அவொகேடோ காரட் சூப்
|
|
|
|
நமது உணவில் நன்மை செய்யும் கொழுப்பு, கேடு செய்யும் கொழுப்பு என இரு வகைகள் உள்ளன. கெட்ட கொழுப்பு இதயத்துக்கும், இரத்த நாளங்களுக்கும் தீங்கு விளைவிக்கும். பிஸ்கட், குக்கி போன்ற பேக் செய்யப்பட்ட உணவுப் பொருட்களிலும், பெருமளவில் தயாரிக்கப்படும் பொரித்த உணவுகளிலும் கேடுசெய்யும் கொழுப்பு அதிகம்.
அடுத்ததாக, கொலஸ்ட்ரால். இது அதிகமாக இருந்தால் இரத்த நாளங்களில் அடைப்பு ஏற்படுவதுடன் இருதய சம்பந்தமான வியாதிகளும் அதிகமாகும். எனவே கொலஸ்ட்ரால் குறைந்த அளவில் உள்ள உணவுப் பொருட்களையே நாம் பயன்படுத்த வேண்டும். மாமிச உணவுப் பொருட்களில் தீய கொலஸ்ட்ரால் அதிகம் உள்ளது. காய்கறி, பழங்களில் இல்லை. ஒருவருக்கு ஒரு நாளைக்கு 300 மி.கி. கொலஸ்ட்ராலே போதுமானது என்பது மருத்துவர்களின் கணிப்பு.
உடலுக்கு நன்மை தரக்கூடிய கொழுப்புச் சத்து அதிகம் கொண்டது அவொகேடோ (Avocado). 100 கிராம் அவொகேடோவில் மாவுச்சத்து - 8.53 கி., நார்ப்பொருள் - 6.7 கி., திண்மக்கொழுப்பு - 2.13 கி., ஒற்றை நீர்மக்கொழுப்பு - 9.80 கி., பலநீர்மக் கொழுப்பு - 1.82 கி., புரதம் - 2 கி. ஆகியன உள்ளன.
அவொகேடோவை வாங்கும்போது அதன் மேல்பாகம் நல்ல கரும்பச்சையாகவும், தொட்டால் அமுங்கும் படியும், பழுத்ததாக உள்ளதா என்றும் பார்த்து வாங்க வேண்டும். அதை வாங்கி நீளவாக்கில் வெட்டி ஒரு பாதியை மற்றொரு பாதிக்கு 90 டிகிரி கோணத்திற்கு திருப்பினால், கொட்டையை எளிதாக எடுத்து விடலாம். பின்னர் ஒரு சிறிய ஸ்பூனால் உண்ணத்தக்க பகுதியைக் குடைந்து எடுத்துவிட்டால், தோல்பாகம் எளிதாக நீங்கிவிடும்.
இனி அவொகேடோவைப் பயன்படுத்திச் செய்யக்கூடிய சில எளிய உணவு வகைகளைப் பார்ப்போம். |
|
அவொகேடோ சப்பாத்தி
தேவையான பொருட்கள் கோதுமை மாவு - 1 கிண்ணம் அவொகேடோ பழம் - 1/2 உப்பு - தேவைக்கேற்ப மசாலாப் பொடி - தேவைக்கேற்ப
செய்முறை: எல்லா பொருட்களையும் தண்ணீர் விட்டுச் சேர்த்துப் பிசைந்து, சப்பாத்தியாகச் செய்யவும். அதிகநேரம் மாவை ஊறவைக்க வேண்டாம். சிலருக்கு இந்தப் பழம் அரைகுறையாக மசித்தால் பிடிக்கும். அது வேண்டாமெனில் பழத்தை மிக்ஸியில் ஒரு சுற்று அரைத்து, மாவுடன் சேர்த்துப் பிசைந்து சப்பாத்தி செய்யவும்.
சரஸ்வதி தியாகராஜன் |
|
|
More
அவொகேடோ தோசை அவொகேடோ கேக் அவொகேடோ பாயசம் குவாகமோல் (Guacamole) அவொகேடோ காரட் சூப்
|
|
|
|
|
|
|