பள்ளிக்கூடத்துக்கு வந்தால் ஒரு ரூபாய் எழுபத்தாறு வயதில் இமயமலை ஏறியவர் லாரன்ஸின் மனிதநேயம்
|
|
சரோஜாதேவிக்கு வாழ்நாள் சாதனையாளர் விருது |
|
- அரவிந்த்|ஜூலை 2008| |
|
|
|
|
'அபிநய சரஸ்வதி' என அக்கால ரசிகர்களால் அழைக்கப்பட்ட நடிகை சரோஜா தேவிக்கு திரையுலகின் வாழ்நாள் சாதனையாளர் விருதை இந்திய மத்திய அரசு அறிவித்துள்ளது. நாடு சுதந்திரம் பெற்றதன் வைரவிழாக் கொண்டாட்டங்கள் நிறைவு பெறுவதை முன்னிட்டுத் திரையுலகில் சாதனை படைத்த நான்கு பேருக்கு இந்த வாழ்நாள் சாதனையாளர் விருது வழங்கி கௌரவிக்கப்பட உள்ளது. பிரபல பின்னணிப் பாடகி லதா மங்கேஷ்கர், ஹிந்தி நடிகர் திலீப்குமார், பழம்பெரும் இயக்குநர் தபன் சின்ஹா ஆகியோர் விருதுபெறும் மற்ற மூவர் ஆவர். தற்போது உடல்நலம் குன்றியிருக்கும் தபன் சின்ஹாவுக்கு கோல்கத்தாவில் உள்ள அவரது இல்லத்துக்கே சென்று மேற்கு வங்க ஆளுநர் கோபாலகிருஷ்ண காந்தி, மத்திய ஒளிபரப்புத் துறை அமைச்சர் பிரியரஞ்சன் தாஸ் முன்ஷி ஆகியோர் விருதைக் கையளிக்க இருக்கிறார்கள். மற்றவர்களுக்கு குடியரசுத் தலைவர் பிரதீபா பாட்டீல் தலைமையில் நடைபெறும் விழாவில் வழங்கப்படும். |
|
அரவிந்த் |
|
|
More
பள்ளிக்கூடத்துக்கு வந்தால் ஒரு ரூபாய் எழுபத்தாறு வயதில் இமயமலை ஏறியவர் லாரன்ஸின் மனிதநேயம்
|
|
|
|
|
|
|