விஜய் கையில் வில்லு ஒரே ஒருவரின் கடைசி நிமிடம் லிங்குசாமியின் பட்டாளம் திருநங்கைகளின் பங்களிப்பில் பால் ரிச்சர்டின் ஏன் இப்படி மயக்கினாய் மாணவன் நினைத்தால்
|
|
|
|
விகடன் டாக்கீஸ் பட நிறுவனம் தயாரிக்கும் புதிய படம் 'வால்மீகி'. இதில் 'கல்லூரி' படத்தில் நடித்த அகில் கதாநாயகன். மலையாள நடிகை மீரா நந்தன், புதுமுகம் ஸ்ருதி நாயர் ஆகியோர் கதாநாயகிகள். இவர்களுடன் அஜயன் பாலா, படவா கோபி உள்ளிட்ட பலர் நடிக்கிறார்கள். கதை, திரைக்கதை, வசனம் இயக்கம் ஜி. அனந்த நாராயணன். திரைப்படக் கல்லூரியில் பயின்ற இவர், இயக்குநர் ஷங்கரிடம் உதவியாளராகப் பணியாற்றியிருக்கிறார். 'கொலை, கொள்ளை புரிந்த வேடன் மனம் திருந்தி வால்மீகி முனிவராக மாறி ராமாயணத்தைப் படைத்தது போல, பல தவறுகளைச் செய்யும் நாயகன், தன்னுடைய வாழ்க்கையில் ஏற்படும் திடீர் மாற்றத்தால் நல்லவனாக மாறி சமுதாயத்துக்குப் பெரிய நன்மையைச் செய்கிறான் என்பதுதான் கதை' என்கிறார் அனந்த நாராயணன்.
இசை இளையராஜா. பாடல்கள் வாலி. ஒளிப்பதிவு என்.அழகப்பன். படத்தொகுப்பு வி.டி.விஜயன். பா.சீனிவாசன் தயாரிக்கிறார். |
|
அரவிந்த் |
|
|
More
விஜய் கையில் வில்லு ஒரே ஒருவரின் கடைசி நிமிடம் லிங்குசாமியின் பட்டாளம் திருநங்கைகளின் பங்களிப்பில் பால் ரிச்சர்டின் ஏன் இப்படி மயக்கினாய் மாணவன் நினைத்தால்
|
|
|
|
|
|
|