அப்பம் அதிரசம் கோதுமை மாவு அப்பம் ரவை சொஜ்ஜி அப்பம் ஜவ்வரிசி அப்பம் கொய்யா இலை அப்பம் வாழைப்பழ அப்பம் வெள்ளை அப்பம் காரக் காய்கறி அப்பம் அதிரசம் பலாப்பழ அதிரசம் பெட்டி அதிரசம்
|
|
|
|
தேவையான பொருட்கள் இட்லித் துண்டுகள் (அ) குட்டி இட்லி - 2 கிண்ணம் சமைத்த பாஸ்டா (Penne or shells) - 2 கிண்ணம் சிவப்பு வெங்காயம் (நறுக்கியது) - 1 கிண்ணம் பச்சை மிளகாய் - 4 அல்லது 6 நறுக்கிய இஞ்சி - 1 தேக்கரண்டி கறிவேப்பிலை கொத்துமல்லி (பொடியாக நறுக்கியது) - 2 மேசைக்கரண்டி தோசைமிளகாய்ப் பொடி - 1 மேசைக்கரண்டி உப்பு - தேவைக்கேற்ப எண்ணெய் - 2 மேசைக்கரண்டி கடுகு - 1/4 தேக்கரண்டி பெருங்காயம் - சிறிதளவு உளுத்தம் பருப்பு - 1/2 தேக்கரண்டி கடலை பருப்பு - 1/2 தேக்கரண்டி முந்திரி - 10
செய்முறை கனமான அடியுள்ள பாத்திரத்தில் எண்ணெயை விட்டு மிதமான தீயில் சூடு செய்யவும். அதில் கடுகு, பெருங்காயம், பருப்புகள் ஆகியவற்றைத் தாளித்துக் கொள்ளவும். பொன்னிறமாக வறுபட்ட பின் இஞ்சி, வெங்காயம், பச்சை மிளகாய், கறிவேப்பிலை சேர்த்து வதக்கவும்.
பின் சமைத்த பாஸ்டவைப் போட்டுக் கலக்கவும். பின் உப்பு, தோசை மிளகாய்ப் பொடிகளைச் சேர்க்கவும். இரண்டு மூன்று நிமிடங்களுக்குப் பின் இட்லியைச் சேர்த்து ஐந்து நிமிடம் வரை கலக்கவும். பின் கொத்தமல்லியைத் தூவிப் பறிமாறவும். சுவையில் இது புதுசு! |
|
லதா சந்திரமௌலி |
|
|
More
அப்பம் அதிரசம் கோதுமை மாவு அப்பம் ரவை சொஜ்ஜி அப்பம் ஜவ்வரிசி அப்பம் கொய்யா இலை அப்பம் வாழைப்பழ அப்பம் வெள்ளை அப்பம் காரக் காய்கறி அப்பம் அதிரசம் பலாப்பழ அதிரசம் பெட்டி அதிரசம்
|
|
|
|
|
|
|