அப்பம் அதிரசம் கோதுமை மாவு அப்பம் ரவை சொஜ்ஜி அப்பம் ஜவ்வரிசி அப்பம் கொய்யா இலை அப்பம் வாழைப்பழ அப்பம் வெள்ளை அப்பம் அதிரசம் பலாப்பழ அதிரசம் பெட்டி அதிரசம் வாசகர் கைவண்ணம் - இட்லி பாஸ்டா கதம்பம்
|
|
|
|
தேவையான பொருட்கள் கேரட் - 1 பீன்ஸ் - 3 வெங்காயம் - 1 கடலைப்பருப்பு - 1/4 கிண்ணம் அரிசி - 1/4 கிண்ணம் உளுத்தம் பருப்பு - 1/4 கிண்ணம் சிகப்பு மிளகாய் - 5 கடுகு - 1 தேக்கரண்டி உப்பு - சிறிதளவு பெருங்காயம் - சிறிதளவு எண்ணெய் - பொரிக்க கறிவேப்பிலை, கொத்துமல்லி - சிறிதளவு
செய்முறை கேரட், பீன்ஸ், வெங்காயம் இவற்றைப் பொடிப் பொடியாக நறுக்கிக் கொள்ளவும். அரிசி, பருப்புகளை ஊற வைத்து உப்பு, பெருங்காயம், மிளகாயுடன் மைய அரைத்துக் கொள்ளவும்.
எண்ணெயில் கடுகு தாளித்துக்கொண்டு நறுக்கிய காய்கறிகளைப் போட்டு வதக்கிக் கொள்ளவும். ஆறியவுடன் மாவுடன் சேர்த்துப் போட்டு கொத்துமல்லி கறிவேப்பிலையுடன் கலந்து நன்றாகக் கலக்கி இட்லி மாவு போலச் செய்து கொள்ளவும். கரண்டியால் எண்ணெயில் ஊற்றிப் பொன்னிறமாகப் பொரித்து எடுக்கவும்.
இது ஒரு சுவையான அப்பம். இதைத் தேங்காய் சட்னி, வெங்காயச் சட்னியுடன் சாப்பிடலாம்.
பின்குறிப்பு: அப்பங்கள் செய்ய அப்பக்காரல் என்ற குழிகுழியான பாத்திரம் ஏற்றதானது. வாணலியிலும் செய்யலாம். இனிப்பு அப்பங்கள் செய்யும் போது பால்பொடி ஒரு தேக்கரண்டி கலந்து செய்தால் சுவை கூடுதலாய் இருக்கும். |
|
தங்கம் ராமசாமி |
|
|
More
அப்பம் அதிரசம் கோதுமை மாவு அப்பம் ரவை சொஜ்ஜி அப்பம் ஜவ்வரிசி அப்பம் கொய்யா இலை அப்பம் வாழைப்பழ அப்பம் வெள்ளை அப்பம் அதிரசம் பலாப்பழ அதிரசம் பெட்டி அதிரசம் வாசகர் கைவண்ணம் - இட்லி பாஸ்டா கதம்பம்
|
|
|
|
|
|
|