Thendral Audio Advertise About us
New User? | Forgot Password? | Email: Password: Login
Current Issue | Previous Issues | Author Index | Category Index | Organization Index | E-Magazine | Classifieds | Digital Downloads
By Category:
சின்னக்கதை | சமயம் | சினிமா சினிமா | இளந்தென்றல் | கதிரவனை கேளுங்கள் | ஹரிமொழி | நிகழ்வுகள் | மேலோர் வாழ்வில் | மேலும்
June 2008 Issue
தென்றல் பேசுகிறது | நேர்காணல் | மாயாபஜார் | ஹரிமொழி | நினைவலைகள் | முன்னோடி | அன்புள்ள சிநேகிதியே | நலம்வாழ | சிறப்புப் பார்வை
குறுக்கெழுத்துப்புதிர் | சூர்யா துப்பறிகிறார் | சிறுகதை | பயணம் | யார் இவர்? | சிரிக்க, சிந்திக்க | பொது | சினிமா சினிமா | Events Calendar
எழுத்தாளர் | இளந்தென்றல் | நிகழ்வுகள் | வாசகர் கடிதம் | வார்த்தை சிறகினிலே | இதோ பார், இந்தியா!
நடந்தவை
Tamil Unicode / English Search
நிகழ்வுகள் - நடந்தவை
லக்ஷ்மி ஹோம்ஸ்ரோமுக்கு இயல் விருது
நியூ ஹாம்ப்ஷயர் இந்தியச் சங்கம் வசந்தத் திருவிழா 2008
அட்லாண்டா மாநகரத் தமிழ்ச் சங்கம் தமிழ்ப் புத்தாண்டு விழா
முதல் அமெரிக்கத் தமிழ் நாடக விழா
டெலவர் வேலி பெருநிலத் தமிழ்ச் சங்கத்தின் தமிழ்த் தேனீ மற்றும் திருக்குறள் போட்டி
ஸ்ரீ வெங்கடேச கல்யாண உத்சவம்
மிக்சிகன் தமிழ்ச்சங்கம் சித்திரை வசந்தம் - 2008
கலிபோர்னியாவில் பிரம்மஸ்ரீ பாபநாசம் சிவன் இசைவிழா
பாரதி தமிழ்ச் சங்கம் தமிழ்ப் புத்தாண்டு விழா
- சுந்தரேஷ்|ஜூன் 2008|
Share:
Click Here Enlargeஏப்ரல் 27, 2008 அன்று பாரதி தமிழ்ச் சங்கம் தமிழ்ப் புத்தண்டு விழாவை கலிபோர்னியா சன்னிவேல் இந்துக் கோவில் அரங்கத்தில் விமரிசையாக நிகழ்ந்தேறியது. அருணகிரிநாதரின் 'முத்தைத்தரு பத்தித் திருநகை' பாடலை செல்ஸி சிம்ரன் ராஜ் இறைவணக்கமாகப் பாடி நிகழ்ச்சியை துவங்கி வைத்தார். தமிழ்ச் சங்கத் தலைவர் கோவிந்தராஜனின் வரவேற்புரையை அடுத்து குழந்தைகளும் பெரியவர்களும் பல கலைநிகழ்ச்சிகளை வழங்கினர்.

வாய்ப்பாட்டு, வாத்திய இசை, பக்திப்பாடல்கள், பாரத பாரம்பரிய நடனங்கள், திரைப்பட நடனங்கள் என அனைத்து நிகழ்ச்சிகளும் வந்திருந்தோரை பிரமிக்க வைத்தன. பரதநாட்டிய ஆசிரியைகள் தீபா மகாதேவன், விஷால் ரமணி, குச்சிப்புடி ஆசிரியர் ஹிமபிந்து சல்லா ஆகியோரின் ஒருங்கிணைப்பில் அஜிதா, மல்லிகா, அரவிந்த், அகிலா, ஷர்மிளா ரவிசங்கர், ஜெயா ஜூலியட், ஜெயஸ்ரீ கார்த்திக், உஷா அரவிந்தன், சாந்தி சாம்பசிவம், உமா ஸ்ரீராம், சந்திரா விஸ்வநாதன் ஆகியோரின் பங்களிப்புகள் பாராட்டத்தக்கவையாக அமைந்திருந்தன. நிகழ்ச்சியை அருண் விஸ்வநாதன் தன் பலகுரல் திறமையின் மூலம் சுவையாகத் தொகுத்தளித்தார்.
நிகழ்ச்சியின் இறுதியில் மறைந்த எழுத்தாளர் சுஜாதா அவர்களை நினைவு கூறும் வகையில் அவரது கதை நாடகமாக நடத்திக் காட்டப்பட்டது. இதற்கு சித்ரா கருணாகரன் மேடை அமைப்பு, முகுந்தன் பின்னணி இசை, பாலாஜி சீனிவாசன் நாடக இயக்க உதவி செய்திருந்தனர். ஸ்ரீகாந்த், கெளரி, ராம்கி ஆகியோர் மிகச் சிறப்பாக நடித்திருந்தனர்.

தமிழ்ப் புத்தாண்டு விழா பாரதி தமிழ்ச் சங்கத்தின் முதல் ஆண்டு நிறைவு விழாவாகவும் அமைந்திருந்தது குறிப்பிடத் தக்கது.

சுந்தரேஷ்
More

லக்ஷ்மி ஹோம்ஸ்ரோமுக்கு இயல் விருது
நியூ ஹாம்ப்ஷயர் இந்தியச் சங்கம் வசந்தத் திருவிழா 2008
அட்லாண்டா மாநகரத் தமிழ்ச் சங்கம் தமிழ்ப் புத்தாண்டு விழா
முதல் அமெரிக்கத் தமிழ் நாடக விழா
டெலவர் வேலி பெருநிலத் தமிழ்ச் சங்கத்தின் தமிழ்த் தேனீ மற்றும் திருக்குறள் போட்டி
ஸ்ரீ வெங்கடேச கல்யாண உத்சவம்
மிக்சிகன் தமிழ்ச்சங்கம் சித்திரை வசந்தம் - 2008
கலிபோர்னியாவில் பிரம்மஸ்ரீ பாபநாசம் சிவன் இசைவிழா
Share: 




© Copyright 2020 Tamilonline