Thendral Audio Advertise About us
New User? | Forgot Password? | Email: Password: Login
Current Issue | Previous Issues | Author Index | Category Index | Organization Index | E-Magazine | Classifieds | Digital Downloads
By Category:
சின்னக்கதை | சமயம் | சினிமா சினிமா | இளந்தென்றல் | கதிரவனை கேளுங்கள் | ஹரிமொழி | நிகழ்வுகள் | மேலோர் வாழ்வில் | மேலும்
June 2008 Issue
தென்றல் பேசுகிறது | நேர்காணல் | மாயாபஜார் | ஹரிமொழி | நினைவலைகள் | முன்னோடி | அன்புள்ள சிநேகிதியே | நலம்வாழ | சிறப்புப் பார்வை
குறுக்கெழுத்துப்புதிர் | சூர்யா துப்பறிகிறார் | சிறுகதை | பயணம் | யார் இவர்? | சிரிக்க, சிந்திக்க | பொது | சினிமா சினிமா | Events Calendar
எழுத்தாளர் | இளந்தென்றல் | நிகழ்வுகள் | வாசகர் கடிதம் | வார்த்தை சிறகினிலே | இதோ பார், இந்தியா!
நடந்தவை
Tamil Unicode / English Search
நிகழ்வுகள் - நடந்தவை
லக்ஷ்மி ஹோம்ஸ்ரோமுக்கு இயல் விருது
நியூ ஹாம்ப்ஷயர் இந்தியச் சங்கம் வசந்தத் திருவிழா 2008
முதல் அமெரிக்கத் தமிழ் நாடக விழா
டெலவர் வேலி பெருநிலத் தமிழ்ச் சங்கத்தின் தமிழ்த் தேனீ மற்றும் திருக்குறள் போட்டி
ஸ்ரீ வெங்கடேச கல்யாண உத்சவம்
பாரதி தமிழ்ச் சங்கம் தமிழ்ப் புத்தாண்டு விழா
மிக்சிகன் தமிழ்ச்சங்கம் சித்திரை வசந்தம் - 2008
கலிபோர்னியாவில் பிரம்மஸ்ரீ பாபநாசம் சிவன் இசைவிழா
அட்லாண்டா மாநகரத் தமிழ்ச் சங்கம் தமிழ்ப் புத்தாண்டு விழா
- சந்தா|ஜூன் 2008|
Share:
Click Here Enlargeமே 11, 2008 அன்று அட்லாண்டா மாநகரத் தமிழ்ச் சங்கம் நார்கிராஸில் உள்ள மெடோ க்ரீக் உயர்நிலைப்பள்ளியில் தமிழ்ப் புத்தாண்டு விழாவைக் கொண்டாடியது. விழா தேசீய கீதத்துடன் துவங்கியது. சங்கச் செயலாளர் சாந்த் குப்புசாமி வழங்கிய வரவேற்புரையில் புத்தாண்டு மற்றும் மகளிர் தின வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொண்டதோடு சங்கத்தின் சாதனைகளைப் பகிர்ந்து கொண்டார்.

சுந்தர், உமா ஆகியோர் நிகழ்ச்சிகளைத் தொகுத்து வழங்கினர். உமாவின் சென்னை பாஷை கலகலப்பாக இருந்தது. புஷ்பாஞ்சலி (பவானி, சுப்பிரமணி), 'எங்கும் விஷ்ணு மயம்' (காயத்ரி, சுபத்திரா) ஆகியவை அற்புதம். குழந்தைகளின் அலங்காரப் போட்டி அனைவரும் ரசிக்கும்படி இருந்தது.

'கல்வியா, செல்வமா, வீரமா' (கீதா கார்த்திகேயன்), 'கொடி பறக்குது' (தேவி செல்வகுமார்) ஆகிய நிகழ்ச்சிகள் சுவையாக இருந்தன. 'தமிழ் செந்தமிழ்' நிகழ்ச்சியில் 50 குழந்தைகளுக்கு மேல் அருமையாக நடனமாடினர். 'அழகிய தமிழ் மகள்' (பூங்கோதை), 'தேன்மதுரத் தமிழ் ஓசை' (காயத்ரி, சுபத்திரா) ஆகிய நிகழ்ச்சிகள் அருமை. தொடர்ந்து, தமிழ்ச் சமூகத்துக்கு உழைத்த கிரி அவர்களுக்கு நரசி (palam.com) நினைவஞ்சலி செலுத்தினார்.

தமிழ்ப் போட்டிகளில் வென்ற மாணவர்களுக்கு டாக்டர் இந்திரன் பரிசுகளை வழங்கினார். 'நவசாந்தி' (ப்ரீத்தி), 'ரங்கோலா பதுமைகள் நடனம்' (சுவாதி ராம்மோகன்). 'கைவீசிப் போகும் கவிதைகள்' (ஜெயமாறன்), 'அன்னைக்கு அர்ப்பணம்' (ரஜனி ஸ்டீபன் குழுவினர்) நடனம் ஆகியவை மனதைக் கவர்ந்தன.

நிகழ்ச்சியின் முத்தாய்ப்பாக GA Tech மாணவர்கள் வழங்கிய 'அடுத்த சூப்பர் ஸ்டார் யாரு?' அனைவரும் ரசிக்கத் தக்கதாக இருந்தது. ஆகஸ்ட் 2, 2008 அன்று வரப்போகும் முத்தமிழ் விழாவைப்பற்றி அறிவிக்கப்பட்டது. சங்கத் தலைவர் மணி கிரிதரன் நன்றி கூற, தேசிய கீதத்துடன் விழா நிறைவடைந்தது.
சாந்த் குப்புசாமி
More

லக்ஷ்மி ஹோம்ஸ்ரோமுக்கு இயல் விருது
நியூ ஹாம்ப்ஷயர் இந்தியச் சங்கம் வசந்தத் திருவிழா 2008
முதல் அமெரிக்கத் தமிழ் நாடக விழா
டெலவர் வேலி பெருநிலத் தமிழ்ச் சங்கத்தின் தமிழ்த் தேனீ மற்றும் திருக்குறள் போட்டி
ஸ்ரீ வெங்கடேச கல்யாண உத்சவம்
பாரதி தமிழ்ச் சங்கம் தமிழ்ப் புத்தாண்டு விழா
மிக்சிகன் தமிழ்ச்சங்கம் சித்திரை வசந்தம் - 2008
கலிபோர்னியாவில் பிரம்மஸ்ரீ பாபநாசம் சிவன் இசைவிழா
Share: 




© Copyright 2020 Tamilonline