அட்லாண்டா மாநகரத் தமிழ்ச் சங்கம் தமிழ்ப் புத்தாண்டு விழா
மே 11, 2008 அன்று அட்லாண்டா மாநகரத் தமிழ்ச் சங்கம் நார்கிராஸில் உள்ள மெடோ க்ரீக் உயர்நிலைப்பள்ளியில் தமிழ்ப் புத்தாண்டு விழாவைக் கொண்டாடியது. விழா தேசீய கீதத்துடன் துவங்கியது. சங்கச் செயலாளர் சாந்த் குப்புசாமி வழங்கிய வரவேற்புரையில் புத்தாண்டு மற்றும் மகளிர் தின வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொண்டதோடு சங்கத்தின் சாதனைகளைப் பகிர்ந்து கொண்டார்.

சுந்தர், உமா ஆகியோர் நிகழ்ச்சிகளைத் தொகுத்து வழங்கினர். உமாவின் சென்னை பாஷை கலகலப்பாக இருந்தது. புஷ்பாஞ்சலி (பவானி, சுப்பிரமணி), 'எங்கும் விஷ்ணு மயம்' (காயத்ரி, சுபத்திரா) ஆகியவை அற்புதம். குழந்தைகளின் அலங்காரப் போட்டி அனைவரும் ரசிக்கும்படி இருந்தது.

'கல்வியா, செல்வமா, வீரமா' (கீதா கார்த்திகேயன்), 'கொடி பறக்குது' (தேவி செல்வகுமார்) ஆகிய நிகழ்ச்சிகள் சுவையாக இருந்தன. 'தமிழ் செந்தமிழ்' நிகழ்ச்சியில் 50 குழந்தைகளுக்கு மேல் அருமையாக நடனமாடினர். 'அழகிய தமிழ் மகள்' (பூங்கோதை), 'தேன்மதுரத் தமிழ் ஓசை' (காயத்ரி, சுபத்திரா) ஆகிய நிகழ்ச்சிகள் அருமை. தொடர்ந்து, தமிழ்ச் சமூகத்துக்கு உழைத்த கிரி அவர்களுக்கு நரசி (palam.com) நினைவஞ்சலி செலுத்தினார்.

தமிழ்ப் போட்டிகளில் வென்ற மாணவர்களுக்கு டாக்டர் இந்திரன் பரிசுகளை வழங்கினார். 'நவசாந்தி' (ப்ரீத்தி), 'ரங்கோலா பதுமைகள் நடனம்' (சுவாதி ராம்மோகன்). 'கைவீசிப் போகும் கவிதைகள்' (ஜெயமாறன்), 'அன்னைக்கு அர்ப்பணம்' (ரஜனி ஸ்டீபன் குழுவினர்) நடனம் ஆகியவை மனதைக் கவர்ந்தன.

நிகழ்ச்சியின் முத்தாய்ப்பாக GA Tech மாணவர்கள் வழங்கிய 'அடுத்த சூப்பர் ஸ்டார் யாரு?' அனைவரும் ரசிக்கத் தக்கதாக இருந்தது. ஆகஸ்ட் 2, 2008 அன்று வரப்போகும் முத்தமிழ் விழாவைப்பற்றி அறிவிக்கப்பட்டது. சங்கத் தலைவர் மணி கிரிதரன் நன்றி கூற, தேசிய கீதத்துடன் விழா நிறைவடைந்தது.

சாந்த் குப்புசாமி

© TamilOnline.com