குவாண்டம் இயற்பியலும் குண்டலினி யோகமும்: டாக்டர் G.கிருஷ்ணகுமார் டாக்டர் சி.சந்திரமௌலி
|
|
|
|
செல்வதுரை சிவ ஐங்கரன் பாடும்பொழுது கண்ணை மூடிக்கொண்டு கேட்டால் மேடையில் பி.பி.ஸ்ரீனிவாஸ், எஸ்.பி. பாலசுப்பிரமணியம், ஏ.எம்.ராஜா, பி.சுசீலா, ஜிக்கி என்று பல பிரபலங்களின் பேரணியே மேடையில் இருப்பதாகத் தோன்றும். இந்தப் பலகுரல் திறமை, இசையே கற்காத இவருக்கு ஆர்வத்தினாலும் பயிற்சியாலும் ஏற்பட்டது. ஓவியம், புகைப்படம் என்று பல திறமைகள் இருந்தாலும் 'இசையே எனது உயிர்மூச்சு' என்ற உறுதியுடன் 22 ஆண்டுகளாக அமெரிக்கா முழுதிலும் மெல்லிசை பாடி வருகிறார் ஐங்கரன். வரப்போகும் FeTNA ஆண்டுவிழாவில் தமிழ்த் திரையிசைக் கலைஞர்களுடன் பாடவிருக்கிறார். ஐங்கரனைப் பற்றி மேலும் அறிய: www.csainkaranmelodies.com
அவருடன் ஒரு மினி உரையாடல்...
கேள்வி: நீங்கள் எப்பொழுது பாட ஆரம்பித்தீர்கள்?
பதில்: 5 வயதில். அப்பொழுது தமிழ் அங்கு மிகுந்த வளம். நான் வானொலிப் பெட்டியில் பாட்டு கேட்பேன். அந்த காலத்தில் வால்வ் ரேடியோ. நான் அதன் பின்னால் போய் யார் யார் அதில் இருக்கிறார்கள் என்று பார்ப் பேன். எனக்கும் அதே மாதிரி பல குரல்களில் பாடவேண்டும் என்று ஆசை வந்தது.
கே: பழைய பாடகர்கள் உங்களுடைய டிரேட் மார்க். பி.பி. ஸ்ரீனிவாஸ், ஏ.எம். ராஜா, ஜிக்கி இவர்களைப் போல நீங்கள் பாடுகிறீர்கள். நீங்கள் சினிமா பார்த்திருக்க மாட்டீர்கள்...
ப: சினிமா பார்த்ததில்லை. ரேடியோவில் கேட்டுத்தான் சின்ன வயசுலயே பாடிப் பார்ப்பேன். வயது ஏற, ஏற நுணுக்கங்கள் புரிந்தன. இப்பொழுது அந்தப் படங்களை எல்லாம் பார்த்துப் பழைய ஆசையைத் தீர்த்து கிட்டு இருக்கேன்.
கே: நீங்கள் முறைப்படி பாட்டு கற்றுக் கொண்டீர்களா?
ப: இல்லை.
கே: இலங்கையில் இருந்த பொழுது மெல்லிசை நிகழ்ச்சியில் பாடியதுண்டா?
ப: இல்லை. ஸ்கூலில் எப்பவாவது பண்ணு வேன். முழுவதுமாகத் தொடங்கியது இங்கே தான்.
கே: எப்போது அமெரிக்காவுக்கு வந்தீர்கள்?
ப: 1984 அக்டோ பர் 26ம் தேதி வந்தேன். 1985 அக்டோ பர்ல சிகாகோவில முதல் நிகழ்ச்சியைக் கொடுத்தேன். அங்கே தமிழ்ச் சங்கத்தில் கீபோர்டு வாசித்த டாக்டர் ரோஷ் என்னை மிகவும் ஊக்குவித்தார்.
கே: முதல் ஷோவிலேயே ஆண் பெண் இரண்டு குரலிலும் பாடினீர்களா?
ப: ஆமாம். முதல் பாட்டு 'தேனே தென் பாண்டி மீனே' பாடினேன். அப்புறம், ஆண், பெண் இரண்டு குரலிலும் 'பசுமை நிறைந்த நினைவுகளே' பாடினேன். பின்னர், 'தேனிலவு' படத்தில் வரும் 'காலையும் நீயே மாலையும் நீயே' பாடினேன். அதில தெளி வான கிளாசிகல் டச். ஐங்கரன் என்பதை 'ஐங்குரலோன்' அப்படீன்னே வச்சுட்டாங்க. சில சமயம் ஒரு பெண்ணை நிறுத்திப் பாடுவது போல வாயசைக்கச் சொல்வேன். ஆனால் திடீரென்று ஆண் குரலில் பாடியதும் அது பொருந்தாது. இதைப் பார்க்க விசித்திரமாக இருக்கும்.
கே: நீங்கள் சராசரியாக ஒரு வருடத்தில் எத்தனை நிகழ்ச்சிகள் பண்ணுவீர்கள்?
ப: இப்பொழுது பலரும் வந்துவிட்டதால் குறைந்துவிட்டது. முன்னெல்லாம் ஆண்டுக்கு 15, 20 நிகழ்ச்சிகள். கோடைகாலம் முடிந்து ஆகஸ்ட்டில் சீஸன் ஆரம்பிக்கும். முன்னாடி என் குழுவோடு தான் பாடுவேன் இப்பொழுது வேறு இசைக்குழுக்களுடனும் சேர்ந்து பாடிவருகிறேன். சிகாகோ தமிழ்சங்கம் என் இசைக்குத் தாய். இப்போது மற்ற குழுக் களுடன் சேர்ந்து பாடுகிறேன். சிகாகோவில தமிழ்ச் சங்கம் எப்ப கூப்பிட்டாலும் போய் பாடுவேன். அங்கே தொடங்கித்தான் அமெரிக்கா முழுவதிலும் பாடுகிறேன்.
உதவும் கரங்கள் எனக்கு மிகவும் பிடித்த நிறுவனம். அவங்க எப்ப கூப்பிட்டாலும் போவேன். அவங்களுக்காக நிறைய நிகழ்ச்சி கள் செய்திருக்கிறேன். நான் வித்யாசாகரைச் சந்தித்திருக்கேன். ஹூஸ்டன்ல ஒரு நிகழ்ச்சி வழங்கியபோது, ஒரு மேடையில நாங்கள் பாட, இன்னொரு மேடையில நடனம் இருந்தது. 1986ல சங்கராபரணம் பாடலை டெட்ராயிட்ல TNFக்காகப் பாடினேன். இந்த ஆண்டு FeTNA ஆண்டுவிழாவில் நான் பாடுகிறேன்.
கே: இந்தியாவிலிருந்து வரும் பிரபல பாடகர்களோடு சேர்ந்து பாடியிருக் கிறீர்கள், அல்லவா?
ப: சென்ற ஆண்டு டெட்ராய்ட்ல பி.சுசீலா, ஜமுனாராணி கூட சேர்ந்து பாடினேன். முதன்முதல்ல மனோரமாவுடன் சேர்ந்து பாடினேன். பின்னர் அமெரிக்காவின் 13 இடங்களில் சுசீலாம்மாவுடன் பாடியிருக் கிறேன். 'காட்டுக்குயிலே' பாட்டை ஒருமுறை யேசுதாஸ் சாருடன் பாடியிருக்கிறேன். கிரேஸ், மகாநதி ஷோபனா ஆகியோருடன் பாடியிருக்கிறேன். எஸ்.பி.பி.யுடன் பாட வாய்ப்பு வந்தது, ஆனால் முடியவில்லை. ஒரே சமயத்தில் நிகழ்ச்சிகள். அவர்தான் மானசீக குரு பி.பி.எஸ். உடன் பாட சென்ற வருடம் தான் வாய்ப்பு கிடைத்தது. |
|
கே: அடுத்து என்ன?
ப: சினிமாவில் பாட வாய்ப்புத் தருவதாகச் சொல்கிறார்கள். எனக்கு அப்படி ஆர்வம் இல்லை. எல்லோருமே சினிமாவில்தான் பாடவேண்டுமென்று இல்லை. இங்கே இருப்பவர்களை நான் சந்தோஷப்படுத்துவதே எனக்குத் திருப்தி தருகிறது. இறையருளால் எல்லாம் சரியாக அமைந்து சினிமா வாய்ப்பு வந்தால் அப்போது செய்வேன்.
கே: நீங்கள் தொடர்ந்து பாடல் பயிற்சி செய்துகொண்டே இருப்பீர்களா?
ப: பழைய பாடல்களைத் தூக்கத்திலும் பாட முடியும். புதிய பாடல் என்றால் அலுவலகத் துக்குப் போய் வரும்போது கேட்டுக்கொண்டே இருப்பேன். முதலில் ராகத்தைப் பிடிப்பேன். பின்னர் பாடல் வரிகள். நிகழ்ச்சிக்கு முதல் நாள் 4 மணிநேரமாவது துல்லியமாகப் பயிற்சி செய்வேன். ஒத்திகையே இல்லாமல் பல நிகழ்ச்சிகள் கொடுத்திருக்கிறேன். என்னுடன் ரமா ரகுராமனும் அனிதா கிருஷ்ணாவும் அதிகமாக இசைநிகழ்ச்சி நடத்தியிருக்கிறார்கள்
கே: பல வார இறுதி நாட்களில் நிகழ்ச்சி களுக்காக வெளியூர் போய்விடுவீர்கள். குடும்பத்தை எப்படிப் பார்த்துக் கொள்கிறீர்கள்?
ப: எல்லாம் என் மனைவிதான். அவருக்குத் தான் நான் நன்றி சொல்லவேண்டும்.
கே: இதைச் செய்ய எப்படி உற்சாகத் தைத் தக்கவைத்துக் கொள்கிறீர்கள்?
ப: இசைதான் எனது ஆன்மா, உயிர்மூச்சு. அதுக்காக என்ன வேண்டுமானாலும் செய்ய லாம். எல்லா நாடுகளின் இசை தொகுப்புகளும் என்னிடம் உள்ளன. நான் எந்த இசையையும் ரசிப்பேன். இசைக்கு மொழி கிடையாது. இசையை கேட்போம் வாழ்க்கையை ரசிப்போம். நான் அவற்றைப் கேட்காமல் இருக்கலாம், பாடாமல் இருக்க லாம். ஆனாலும் இசை என்னிடம் இருக்க வேண்டும். தவிர, நான் ஓர் ஓவியன். சங்கீதத் துக்கு வந்தபின் பல ஊர்களுக்கும் போவதால் புகைப்படம் எடுக்கும் ஆர்வம் வந்தது.
சுனாமி நிதிக்காக நிறைய நிகழ்ச்சிகள் செய்தேன். இப்படி ஊனமுற்றோர், முதியோர் என்று பலவகை நல்ல காரியங்களுக்காகத் தான் எங்கள் நிகழ்ச்சிகளைக் கேட்கிறார்கள். அது எனக்கு மிகுந்த சந்தோஷத்தைத் தரு கிறது. அவர்கள் கேட்பதைவிட நிறைவாக நான் செய்துகொடுப்பேன்.
கே: மனதைத் தொட்ட சம்பவம் ஒன்று சொல்லுங்கள்...
ப: 1999ல் அட்லாண்டிக் சிடியில் சுசீலாம்மா வுடன் கடைசி நிகழ்ச்சி. அதில் 'காணா இன்பம் கனிந்ததேனோ' என்ற பாடலில் சுசீலாம்மாவின் குரலிலும் நானே பாடினேன். அவர்கள் கண்ணில் நீரே வந்துவிட்டது. அவர்களுடைய ஆசியைப் பெற்றது என்னால் மறக்கமுடியாது.
கே: தென்றல் வாசகர்களுக்கு...
ப: தென்றல்தான் அமெரிக்காவின் பல பகுதிகளுக்கும் என் பெயரை எடுத்துச் சென்றது. வாசகர்கள் தென்றலில் அறிவிக்கப்படும் நிகழ்ச்சிகளுக்குச் செல்ல வேண்டும், ஆதரிக்க வேண்டும், ஊக்குவிக்க வேண்டும் என்பதே என் வேண்டுகோள்.
சந்தித்து உரையாடியவர்: சி.கே. |
|
|
More
குவாண்டம் இயற்பியலும் குண்டலினி யோகமும்: டாக்டர் G.கிருஷ்ணகுமார் டாக்டர் சி.சந்திரமௌலி
|
|
|
|
|
|
|