சொக்குப் பொடி போட்டுப் பிடி! தேநீர் மசாலா பொடி புலாவ் மசாலா பொடி வாங்கிபாத் பொடி கூட்டுப் பொடி பருப்புப் பொடி கொத்துமல்லிப் பொடி தேங்காய்ப் பொடி ஐங்காயப் பொடி எள்ளுப்பொடி புதினாப் பொடி
|
|
|
|
தேவையான பொருள்கள் துவரம் பருப்பு - 1 கிண்ணம் கடலைப் பருப்பு - 1 கிண்ணம் உளுத்தம் பருப்பு - 1 கிண்ணம் கொப்பரைத் தேங்காய்த் துருவல் - 1 கிண்ணம் புளி - எலுமிச்சையளவு கடுகு - 1 தேக்கரண்டி பெருங்காயம் - 1 தேக்கரண்டி மிளகாய் வற்றல் - 12 அல்லது 14 உப்பு - தேவைக்கேற்ப
செய்முறை எண்ணெய் விட்டுப் பருப்புகள், மிளகாய் வற்றல் ஆகியவற்றைத் தனித்தனியாக வறுத்துக்கொள்ளவும். கடுகு,பெருங்காயம் எண்ணெயில் வெடிக்க விட்டு அதிலேயே புளியையும் தேங்காய்த் துருவலையும் வறுக்கவும். எல்லாவற்றையும் உப்புச் சேர்த்து மிக்சியில் பொடி செய்யவும். கறிவேப்பிலையும் வறுத்துச் சேர்க்கலாம்.
இந்தப் பொடியை நிறைய செய்து வைத்துக் கொண்டால் சாதத்தில் பிசைந்து சாப்பிட ருசியோ ருசி. காய்கறிகளில் பொரியல் செய்யும்போது தூவி இறக்கலாம். |
|
தங்கம் ராமசாமி |
|
|
More
சொக்குப் பொடி போட்டுப் பிடி! தேநீர் மசாலா பொடி புலாவ் மசாலா பொடி வாங்கிபாத் பொடி கூட்டுப் பொடி பருப்புப் பொடி கொத்துமல்லிப் பொடி தேங்காய்ப் பொடி ஐங்காயப் பொடி எள்ளுப்பொடி புதினாப் பொடி
|
|
|
|
|
|
|