சொக்குப் பொடி போட்டுப் பிடி! தேநீர் மசாலா பொடி புலாவ் மசாலா பொடி வாங்கிபாத் பொடி கூட்டுப் பொடி பருப்புப் பொடி கொத்துமல்லிப் பொடி தேங்காய்ப் பொடி ஐங்காயப் பொடி புதினாப் பொடி சட்னிப் பொடி
|
|
|
|
தேவையான பொருள்கள் வெள்ளை எள் - 1 கிண்ணம் மிளகாய் வற்றல் - 7 உளுத்தம் பருப்பு - 1/4 கிண்ணம் பெருங்காயம் (தேவையானால்) - 1 தேக்கரண்டி உப்பு - தேவைக்கேற்ப
செய்முறை எள்ளை வெறும் வாணலியில் படபடவெனப் பொரித்துக் கொள்ளவும். உளுத்தம்பருப்பையும் மிளகாயையும் சிறிது எண்ணெய் விட்டு வறுக்கவும். பெருங்காயத்தையும் பொரிக்கவும். எல்லாவற்றையும் உப்புச் சேர்த்து மிக்சியில் பொடிசெய்து கொள்ளவும்.
முதலில் பருப்பு மற்றும் மிளகாயைச் சற்றுக் கரகரவென அரைத்துக் கொண்டு பிறகு எல்லாவற்றையும் தனியாக அரைக்கவும். சேர்த்துப் போட்டால் எள் எண்ணெய்ப் பதமாக உருட்டிக் கொண்டுவிடும். பருப்புகள் மசியாது.
இந்தப் பொடியிலும் சாதம் பிசையலாம். தயிர் சாதத்திற்கும் தொட்டுக் கொள்ளலாம். கடுகும், கறிவேப்பிலையும் தாளிக்கலாம். தேங்காய் வறுத்துப் போட்டும் சாதம் பிசையலாம். ருசியாக இருக்கும். |
|
தங்கம் ராமசாமி |
|
|
More
சொக்குப் பொடி போட்டுப் பிடி! தேநீர் மசாலா பொடி புலாவ் மசாலா பொடி வாங்கிபாத் பொடி கூட்டுப் பொடி பருப்புப் பொடி கொத்துமல்லிப் பொடி தேங்காய்ப் பொடி ஐங்காயப் பொடி புதினாப் பொடி சட்னிப் பொடி
|
|
|
|
|
|
|