தமிழ்நாட்டு பாடநூல் இணையத்தில் அம்மாவுக்கு ஒரு கடிதம்... இங்கிருந்தபடியே இந்தியாவில் நிலம் வாங்குங்கள் உல்லாசச் சிறை தமிழ்விழா 2008 - Fetna
|
|
ஒரு வேலையிழப்பும் தற்கொலையும் |
|
- |மே 2008| |
|
|
|
கணேஷ் சந்தானகிருஷ்ணனுக்கு வயது 27. முன்னாள் PhD ஆய்வாளர். கணினித் துறையில் வேலை செய்து கொண்டிருந் தார். வேலை இழந்து நடுத்தெருவுக்கு வந்தார். ஏப்ரல் 3, 2008 அன்று நியூயார்க் நகரின் வடக்கே இருக்கும் டேப்பன் ஜீ பாலத்திலிருந்து குதித்துத் தற்கொலை செய்துகொண்டு விட்டார்.
'பிரெடரிக் ·போர்சைத் நாவல்களை விரும்பிப் படிக்கும் கணேஷ் மிக உற்சாகமான இளைஞர்' என்கிறார் அவருடைய நண்பர் கிரிஷங்கர். அதே கணேஷ் வேலையிழந்ததும் தான் தங்கியிருந்த வீட்டைக் காலிசெய்து விட்டுத் தங்க இடமில்லாமல் தவித்திருக் கிறார். தெருவில் போவோர் வரு வோரைத் துரத்துவது, இரவெல்லாம் கூக்குரலிட்டபடிக் கைதட்டுவது என்று மனநிலை பாதிக்கப்பட்ட நிலையில் பெரும் தொந்தரவாகிப் போய்விட்டார். எந்தக் குற்றப் பின்புலமும் இல்லாத இவரைப் பொலீஸ் கைது செய்ய வேண்டியதானது.
பின்னர் இவர் வெஸ்ட்செஸ்டர் மருத்துவ மையத்தின் மனநோய்ப் பிரிவில் சிகிச்சை பெற்றிருக்கிறார். அதிலிருந்து வெளியே வந்து இரண்டு நாட்கள் கழித்துத் தற்கொலை நடந்திருக்கிறது.
வேலை போனதும் தமிழ்நாட்டில் இருக்கும் தனது தந்தையுடன் கணேஷ் பேசியிருக்கிறார். 'திரும்பி வந்துவிடு' என்று அவர் சொன்ன தைக் கேட்காததோடு 'இனிமேல் என்னோடு பேச முயற்சிக்காதீர்கள்' என்றும் தந்தையிடம் சொல்லிவிட்டிருக்கிறார். அதுதான் அவர் தன் தந்தையுடன் கடைசியாகப் பேசியது. தனது வீட்டைக் காலிசெய்துகொண்டு பொருள் வைக்கும் கூடத்தில் தனது பொருட்களை வைத்ததோடு தானும் அங்கேயே தங்கி யிருந்திருக்கிறார். அங்கேதான் உடல் மிகவும் மெலிந்ததோடு, மனமும் சிதை வுற்றது. அமெரிக்கக் கனவுகளோடு மூன்றாண்டுகள் வாழ்ந்த அந்த இளைஞன் தற்கொலை செய்து கொண்டதும் அதற்குப் பிறகுதான். |
|
வாழ வழியில்லாவிட்டாலும் அமெரிக் காவிலேயே இருக்கவேண்டும் என்று கணேஷ் நினைத்தது ஏன்? சரியும் மனதிற்கு ஊன்றுகோலாக உறவுகள் இல்லை. சாப்பாட்டுக்குக் கூட வழி யில்லை. அப்படியிருந்தும் ஏன் எளிய வேலை ஒன்றைச் செய்து பிழைக்கலாம், நல்ல வேலையைப் பின்னர் பார்த்துக் கொள்ளலாம் என்ற எண்ணம் இந்த புத்திசாலி இளைஞனுக்கு வரவில்லை? எது முக்கியம் எது முக்கியமல்ல என்ற விவேகம் இளைய தலைமுறைக்குத் தெரியவில்லையா? பல கேள்விகளை எழுப்புகிறது இந்தத் தற்கொலை. பெற்றோரும் இளைஞர்களும் சிந்திக்க வேண்டும்.
தகவல் உதவி: http://www.sajaforum.org |
|
|
More
தமிழ்நாட்டு பாடநூல் இணையத்தில் அம்மாவுக்கு ஒரு கடிதம்... இங்கிருந்தபடியே இந்தியாவில் நிலம் வாங்குங்கள் உல்லாசச் சிறை தமிழ்விழா 2008 - Fetna
|
|
|
|
|
|
|