பார்வையற்றோருக்கு உதவும் வித்யா விருட்சம் தண்ணீருக்கடியில் வளர்ந்த பணம்
|
|
தெற்காசியர்களுக்கான Pan Desi ஆங்கில டி.வி. |
|
- |ஏப்ரல் 2008| |
|
|
|
|
அமெரிக்காவில் வாழும் தெற்காசியர்களுக்கான நிகழ்ச்சிகளை வழங்கும் பான் தேசி (Pan Desi) என்ற டி.வி. நெட்வொர்க் ஒன்று கலர்ஸ் டி.வி. (CoLors TV) நேரடி இல்லச் சேவை வழியே தொடங்கப்பட்டுள்ளது. அமெரிக்காவிலுள்ள ஆசியர்களின் வாழ்க்க அனுபவங்களை இந்தச் சேனல் சித்திரிக்கும். பிரைம் டைம் எனப்படும் மிக அதிக நோக்கர்கள் டி.வி. பார்க்கும் நேரத்தில் சுமார் 50 மில்லியன் நபர்களுக்குக் கிடைப்பதாக இதன் ஒளிபரப்பு இருக்கும். கலர்ஸ் டி.வி.யில் தினந்தோறும் இரவு 9:00 (8:00 சென்ட்ரல்) மணிக்கு உச்சநேர ஒளிபரப்பு இருக்கும். மார்ச் 22, 2008 முதல் இந்தச் சேவை தொடங்கப்பட்டுள்ளது.
'தேசி என்ற முறையில் வேர்களை அறிந்திருக்கும் நமது வாழ்க்கை அமெரிக்கக் கலாசாரத்தில் இரண்டறக் கலந்துள்ளதால் நிகழ்ச்சிகள் ஆங்கிலத்தில் இருக்க வேண்டியதாகிறது. நமது தேசி கலாசாரத்தைப் பகிர்ந்துகொள்ளும் ஒரு டி.வி. நிகழ்ச்சி வருவதற்கு இது மிகச் சரியான நேரம்' என்கிறார் பான் தேசியின் தலைமை நிர்வாக அதிகாரி விமல் வர்மா.
பெண்களுக்கான உரையாடல் நிகழ்ச்சி, இளையோருக்கான நிகழ்ச்சிகள், விளையாட்டு செய்திகள், நேர்காணல், பின்னிரவு நகைச்சுவை நிகழ்ச்சி, தேசி-அமெரிக்கக் கலப்புத் திருமணத்தைக் கருவாகக் கொண்ட நிகழ்ச்சிகள், ஹாலிவு-பாலிவுட் திரைப்படத் தொகுப்பு என ஒரு சுவையான கலவையாகப் பான் தேசி இருக்கும். |
|
நிகழ்ச்சி குறித்த தகவலுக்கு: www.PanDesi.com www.colourstv.org
விளம்பர விசாரணைகளுக்கு: Pan Desi: Niteka Mokal, 848-248-4199, niteka@touchdown-media.com CoLours TV: Carrie Gomez, (303) 326-0088, cgomez@colourstv.org |
|
|
More
பார்வையற்றோருக்கு உதவும் வித்யா விருட்சம் தண்ணீருக்கடியில் வளர்ந்த பணம்
|
|
|
|
|
|
|