Thendral Audio Advertise About us
New User? | Forgot Password? | Email: Password: Login
Current Issue | Previous Issues | Author Index | Category Index | Organization Index | E-Magazine | Classifieds | Digital Downloads
By Category:
சின்னக்கதை | சமயம் | சினிமா சினிமா | இளந்தென்றல் | கதிரவனை கேளுங்கள் | ஹரிமொழி | நிகழ்வுகள் | மேலோர் வாழ்வில் | மேலும்
June 2006 Issue
ஆசிரியர் பக்கம் | சாதனையாளர் | மாயாபஜார் | நிதி அறிவோம் | இலக்கியம் | முன்னோடி | அன்புள்ள சிநேகிதியே | நலம்வாழ | சிறப்புப் பார்வை
குறுக்கெழுத்துப்புதிர் | சூர்யா துப்பறிகிறார் | சமயம் | சிரிக்க சிரிக்க | நூல் அறிமுகம் | தமிழக அரசியல் | பொது | சினிமா சினிமா | Events Calendar
எழுத்தாளர் | இளந்தென்றல் | நிகழ்வுகள் | வாசகர் கடிதம் | விளையாட்டு விசயம் | வார்த்தை சிறகினிலே
Tamil Unicode / English Search
தமிழக அரசியல்
ஐந்தாவது முறையாக முதல்வர் ஆனார் கருணாநிதி
விஜயகாந்தின் வெற்றி முரசு
பழனிவேல்ராஜன் திடீர் மரணம்
ஆட்சியில் பங்கு கேட்கிறது காங்கிரஸ்
- கேடிஸ்ரீ|ஜூன் 2006|
Share:
Click Here Enlargeசில மாதங்களுக்கு முன்பு மத்திய அமைச்சர் இளங்கோவன் 'தமிழகத்தில் கூட்டணி ஆட்சி' என்ற ஆயுதத்தைக் கையில் எடுத்தார். அது தி.மு.க தலைமைக்குக் கடும் கோபத்தை ஏற்படுத்தியது. காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி தலையிட்டு இளங்கோவனுக்கு வாய்ப்பூட்டுப் போட்டார்.

ஆனால் கூட்டணிக் கட்சிகளின் ஆதரவோடுதான் இப்போது தி.மு.க. ஆட்சியமைத்திருக்கிறது. கூட்டணிக் கட்சிகள் 'வெளியிலிருந்து ஆதரவு தருவோம்' என்றே கூறின.

நீண்ட இடைவெளிக்குப் பிறகு தமிழகத்தில் ஏற்பட்டிருக்கும் வாய்ப்பை நழுவவிடச் சில காங்கிரசார் விரும்பவில்லை. 'காங்கிரஸ் தலைமையிலான மத்திய அரசில் தி.மு.க.வைச் சேர்ந்த ஏழு அமைச்சர்கள் இருக்கும்போது, தமிழகத்தில் காங்கிரஸ் அமைச்சர் பதவி கேட்பதில் என்ன தவறு?' என்றே பல காங்கிரஸ் தொண்டர்கள் கேட்கின்றனர்.

காங்கிரஸ் சட்டசபை உறுப்பினர்கள் கூடி 'தி.மு.க. ஆட்சியில் எங்களுக்கும் பங்கு வேண்டும்' என்ற தீர்மானம் ஒன்றை நிறைவேற்றியுள்ளனர். தி.மு.க. தரப்புக்கு இதனால் அதிர்ச்சி ஏற்பட்டபோதும் இதுவரை மெளனம் காத்து வருகிறது.
விரைவில் தில்லியில் மன்மோகன்சிங், சோனியா ஆகியோரைச் சந்திக்கவிருக்கும் மு. கருணாநிதி இதுகுறித்து அவர்களுடன் பேசுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

கேடிஸ்ரீ
More

ஐந்தாவது முறையாக முதல்வர் ஆனார் கருணாநிதி
விஜயகாந்தின் வெற்றி முரசு
பழனிவேல்ராஜன் திடீர் மரணம்
Share: 




© Copyright 2020 Tamilonline