சூடாப் போடு போண்டா காய்கறி போண்டா மைசூர் போண்டா பிரெட் போண்டா ஜவ்வரிசி போண்டா ரவா போண்டா இனிப்பு போண்டா பயத்தம் போண்டா
|
|
|
|
தேவையான பொருட்கள்
உருளைக்கிழங்கு (வெந்து மசித்தது) - 2 கிண்ணம் கடலை மாவு - 2 கிண்ணம் அரிசி மாவு - 1 மேசைக்கரண்டி வெங்காயம் (நறுக்கியது) - 12 பட்டாணி - 1/2 கிண்ணம் பச்சை மிளகாய் - 6 இஞ்சி - 1 துண்டு மிளகாய்த் தூள் - 1 தேக்கரண்டி மஞ்சள் தூள் - 1 தேக்கரண்டி கடுகு - 1 தேக்கரண்டி உளுத்தம் பருப்பு - 1 தேக்கரண்டி கடலை பருப்பு - 1 தேக்கரண்டி முந்திரிப் பருப்பு - 6 உப்பு - தேவைக்கேற்ப கறிவேப்பிலை எண்ணெய் - பொரிக்க |
|
செய்முறை
கடலை மாவு, அரிசி மாவு, உப்பு, மஞ்சள் பொடி போட்டுக் கொஞ்சம் கெட்டியாகக் கரைத்து வைத்துக் கொள்ளவும்.
நன்கு மசித்த கிழங்கில், கடுகு, உளுத்தம் பருப்பு, கடலைப் பருப்பு, முந்திரி தாளிக் கவும். வெங்காயம், பட்டாணி, இஞ்சி, மிளகாய்த்தூள், மஞ்சள் தூள் போட்டுச் சேர்த்து வதக்கவும். கறிவேப்பிலை, உப்பும் சேர்த்து பொரியல் போல் செய்து சிறு சிறு உருண்டைகளாக உருட்டிக் கொள்ளவும். கடலை மாவுக் கரைசலில் தோய்த்து எண்ணெயில் பொன்னிறமாகப் பொரித்து எடுக்கவும்.
தேங்காய்ச் சட்னியுடன் சாப்பிட்டால் சுவையாக இருக்கும். தேவையானால் 1 தேக்கரண்டி எலுமிச்சைச் சாறு சேர்த்தும் பொரியல் செய்யலாம்.
தங்கம் ராமசாமி |
|
|
More
சூடாப் போடு போண்டா காய்கறி போண்டா மைசூர் போண்டா பிரெட் போண்டா ஜவ்வரிசி போண்டா ரவா போண்டா இனிப்பு போண்டா பயத்தம் போண்டா
|
|
|
|
|
|
|