தியாகத்துக்குப் பரிசு சுதந்திர ரயில் பெரிய கோயில் மறந்து போன மனிதநேயம் சென்னை புத்தகக் காட்சி
|
|
சாதனைச் சிறார்கள் |
|
- அரவிந்த்|பிப்ரவரி 2008| |
|
|
|
|
2007-ம் ஆண்டின் வீரதீரச் செயலுக்கான தேசிய விருது இருபத்தியிரண்டு சிறுவர் களுக்கு வழங்கப்பட உள்ளது. இவர்களில் பதினெட்டு பேர் ஆண்கள், நான்கு பேர் பெண்கள். இவர்களில் நான்கு பேர் மரணத்திற்குப் பின் இந்த விருதைப் பெறுகின்றனர். சத்தீஸ்கரைச் சேர்ந்த 7-வயதுச் சிறுவன் ஸ்ரீவாஸ்தவாவின் பதினொரு மாதத் தங்கையைத் தெருநாய்கள் சூழ்ந்து குதறிக் கொண்டிருந்தன. அவற்றை விரட்ட முயன்ற அவனையே அந்த நாய்கள் சூழ்ந்து கொண்டு கடித்த போதும் பொருட் படுத்தாமல் தங்கையைக் காப்பாற்றிய ஸ்ரீவாஸ்தவாவுக்கு சிறந்த சாதனைச் சிறுவன் விருது வழங்கப் பட்டிருக்கிறது. தனக்கு நடக்க இருந்த குழந்தைத் திருமணத்தை காவல்துறை உதவியுடன் தடுத்து நிறுத்தித் தன்னைக் காப்பாற்றிக் கொண்ட கன்வர் என்ற பதிமூன்று வயதுச் சிறுமி; பாட்டியை யும், தன் தம்பியையும் கொன்றபின் தன்னைக் கொல்ல வந்த கொலைகாரனிட மிருந்து தன்னைக் காப்பாற்றிக் கொண்ட லேகா; நீரில் மூழ்கித் தத்தளித்த பலரைக் காப்பாற்றிய பபிதா, அமர்ஜித் எனப் பல சாதனைச் சிறுவர்களுக்கு இவ்விருது வழங்கப்பட இருக்கிறது. அச்சமில்லாமல் பிரச்னைகளை எதிர்கொண்டு சாதனை படைத்த சிறுவர்களை வாழ்த்துவோம். |
|
அரவிந்த் |
|
|
More
தியாகத்துக்குப் பரிசு சுதந்திர ரயில் பெரிய கோயில் மறந்து போன மனிதநேயம் சென்னை புத்தகக் காட்சி
|
|
|
|
|
|
|