கலிபோர்னிய பாடப்புத்தக சர்ச்சையும் தென்றல் ஆசிரியர் குழுவும் தமிழ் பள்ளிகளில் ஆண்டுவிழா
|
|
டொரண்டோவில் தமிழியல் மாநாடு |
|
- |ஜூன் 2006| |
|
|
|
தமிழ்மொழி, தமிழியல் சார்ந்த ஆய்வுகளும் அவற்றின் மேம்பாடு, வளர்ச்சிக்குத் தேவையான அறிவுநிலை சார்ந்த முயற்சி களும் தமிழர் புலம்பெயர்ந்து வாழும் நாடுகளில் முனைப்புப் பெற்றுள்ளன. டொராண்டோ நகரில் 2006 மே 12, 13, 14 தேதிகளில் நடைபெற்ற தமிழியல் மாநாடு இதற்குச் சிறந்த எடுத்துக்காட்டு.
'தமிழியல்: திணையும் தளமும் நிலையும்' என்ற பொதுத் தலைப்பில் நடைபெற்ற இந்த மாநாட்டைக் கனடாவின் டொராண்டோ பல்கலைக்கழகம், வின்சர் பல்கலைக்கழகம் தமிழ்க் கலைத் தொழில்நுட்பக் கல்லூரி ஆகியவை இணைந்து ஒழுங்கு செய்திருந்தன.
மாநாட்டின் அமைப்பாளர்களாகப் பேரா. செல்வா கனகநாயகம் (டொராண்டோ பல்கலைக்கழகம்), பேரா. சேரன் (வின்சர் பல்கலைக்கழகம்), தர்ஷன் அம்பலவாணர் (ஹார்வர்ட் பல்கலைக்கழகம்) ஆகியோர் பணியாற்றினர். ஒன்பது அமர்வுகளில் 27 ஆய்வுக் கட்டுரைகள் தமிழியலை ஒட்டிய பல்வேறு தலைப்புகளில் வாசிக்கப்பட்டன. இந்தியா, இலங்கை, அமெரிக்கா, கனடா, நியூசிலாந்து, சுவீடன், இங்கிலாந்து ஆகிய நாடுகளில் இருந்து பல்கலைக்கழகப் பேராசிரியர்களும் ஆய்வாளர்களும் கட்டுரை வாசித்தனர்.
தமிழர்களின் சமகால வாழ்வியலைச் சித்தரிக்கும் நவீன ஓவியக் கண்காட்சியும் மாநாட்டில் இடம் பெற்றது. இதில் கனடா வைச் சேர்ந்த ஓவியர்களான நந்தா கந்தசாமி (ஜீவன்), கருணா ஆகியோரின் ஈழத்துப் போர்க்கால அனுபவங்களையும் புலம்பெயர்ந்த தமிழர் வாழ்வியலையும் பற்றிய நவீன ஓவியங்கள் காட்சியில் இடம்பெற்றிருந்தன. ஓவியர்களுடனான கலந்துரையாடல் ஒன்றும் சிறப்பு அமர்வாக நடைபெற்றது.
250 பேர் வரையில் மாநாட்டில் கலந்து கொண்டார்கள். பெரும் எண்ணிக்கையில் பல்கலைக்கழக மாணவர்கள் பங்குபற்றியது ஒரு சிறப்பாகும். மாநாட்டின் முதல் இரண்டு நாட்களும் ஆங்கில மொழியிலும் மூன்றாவது நாள் அமர்வுகள் தமிழிலும் நடைபெற்றன.
முதலாவது அமர்வாக இடம்பெற்ற 'வரலாறும் இலக்கியமும்' என்பதில் பேராசிரியர்கள் இந்திரா பீட்டர்சன் (மவுண்ட் ஹோலியோ கல்லூரி, அமெரிக்கா), நியூயார்க், செயிண்ட் லாரன்ஸ் பல்கலைக் கழகப் பேராசிரியர் அர்ச்சனா வெங்க டேசன், யாழ்ப்பாணப் பல்கலைக்கழக பேராசிரியர் பொ.ரகுபதி ஆகியோர் கட்டுரைகள் படித்தனர்.
இலங்கையில் தமிழர் குடியிருப்புகளின் தொன்மை பற்றியும் தமிழ்நாட்டுக்குச் சமாந்தரமாக ஈழத்திலும் தமிழர் குடியிருப்புகள் 2000 ஆண்டுகளாக இருந்து வந்துள்ளன என்பதை ஆய்வு மூலம் நிறுவியர் ரகுபதி என்பது குறிப்பிடத்தக்கது.
'தற்காலத் தமிழ் இலக்கியம்' என்ற தலைப்பில் இரண்டாவது அமர்வு இடம் பெற்றது. யேல் பல்கலைக்கழகப் பேராசிரியர் அண்ணாமலை, பாண்டிச்சேரி பிரெஞ்சு நிறுவன ஆய்வாளர் எம். கண்ணன், டொராண்டோ பல்கலைக் கழகப் பேராசிரியர் செல்வா கனகநாயகம், எழுத்தாளர், மொழி பெயர்ப்பாளர், சமூக வரலாற்று ஆசிரியரான வ. கீதா ஆகியோர் இதில் ஆய்வுக் கட்டுரைகள் வாசித்தனர்.
மூன்றாவது அமர்வு அலைந்துழல்வியல். இதில் நியூயார்க் சிட்டி பல்கலைக்கழகப் பேராசிரியர் சுரேஷ் கனகராஜா, சவுத் கரோலைனா பல்கலைக்கழகப் பேராசிரியர் மார்க் விட்டேக்கர், ஹார்வர்ட் பல்கலைக் கழகப் பேராசிரியர் எஸ்.ஜே.தம்பையா, டொராண்டோ பல்கலைக்கழகப் பேராசிரி யர் ஜோசப் சந்திரகாந்தன், வின்சர் பல்கலைக்கழகப் பேராசிரியர் சேரன் ஆகியோர் பங்கு கொண்டனர்.
நான்காவது அமர்வு 'அண்ணன்மார் கதை' பற்றியது. நாட்டார் இலக்கியப் படைப்பான அண்ணன்மார் கதை எழுதப்பட்ட வரலாற்றுச் சூழலை ஆய்வு செய்து, பிருந்தா என்று தன்னை அழைத்துக் கொள்ளும் பிரெண்டா பெக் கட்டுரை படைத்தார். அவரது அண்ணன்மார் கதை திரைப் படத்தின் சில காட்சிகளும் திரையிடப் பட்டன.
இரண்டாம் நாள் அமர்வுகள் 'காலனித் துவத்திற்கு முன்பு' என்ற தலைப்பில் ஆரம்பமாகின. உப்சாலா பல்கலைக்கழகப் பேராசிரியர் பீட்டர் ஷாக், இங்கிலாந்தின் ஸ்கூல் ஆ·ப் ஓரியண்டல் அண்ட் ஆப்ரிக்கன் ஸ்டடிஸ் விரிவுரையாளர் தாவுத் அலி, மாக்கில் பல்கலைக் கழகப் பேராசிரியர் கத்தரின் யங், கொன்கோடியா பல்கலைக்கழகர் லெஸ்லி ஓர் ஆகியோர் இவ்வமர்வில் ஆய்வுக்கட்டுரைகள் வாசித்தனர்.
வடஅமெரிக்காவில் தமிழியல் கல்வியின் எதிர்காலம் என்பது பற்றியும் ஓர் அமர்வு இடம்பெற்றது. இந்த அமர்வில் அமெரிக்க, கனேடிய பல்கலைக்கழகங்களைச் சேர்ந்த பேராசிரியர்கள் தமிழ் மொழியையும் தமிழியலையும் அமெரிக்காவிலும் கனடா விலும் கற்பிப்பதற்கும் மேம்பாட்டிற்கும் எத்தகைய வழிகளில் திட்டமிட்டுச் செயல்பட வேண்டுமென்பது குறித்து விவாதித்தனர். இந்த அமர்வில் பேராசிரியர் களுடன் கனேடிய பல்கலைக்க கழக மாணவியான ஷாந்திலா ஈஸ்வர குமாரும் தமிழாசிரியரான கலாநிதி பார்வதி கந்தசாமியும் கலந்து கொண்டனர். மே மாதத்தில் இருந்து டொராண்டோ பல் கலைக்கழகத்தில் தமிழ் மொழியும் தமிழி யலும் கற்கை நெறிகளாக ஆரம்பிக்கப் பட்டுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது. 80 மாணவர்கள் இந்தக் கற்கை நெறிகளில் பயிலத் துவங்கி உள்ளனர்.
அடுத்த அமர்வு காலனித்துவ, பின் காலனித்துவ வரலாறு பற்றி அமைந்தது. யேல் பல்கலைக்கழகப் பேராசிரியர் பெர்னாட் பேட்ஸ், ஸ்வார்த்மோர் கல்லூரிப் பேராசிரியர் சூசன் ஸ்கூம்பர்க், மனிடோபா பல்கலைக்கழகப் பேராசிரியர் ரவிந்திரன் வைத்தீஸ்பரத, மாக்கில் பல்கலைக்கழகப் பேராசிரியர் தவேஷ் சொனேஜி ஆகியோர் இதில் பங்குகொண்டனர். |
|
மாலை அமர்வு மானுடவியல் என்ற பொதுத்தலைப்பில் இடம்பெற்றது. பேராசிரியர் வலண்டைன் டானியல் (கொலம்பியா பல்கலைக்கழகம்), பேரா சிரியர் யமுனா சங்கரசிவம் (நாஸெரெத் கல்லூரி), மார்கிரெட் ட்ரேவிக் (மாஸே பல்கலைக்கழகம்), அனந்த் பாண்டியன் (பிரிட்டிஷ் கொலம்பியா பல்கலைக்கழகம்) ஆகியோர் கட்டுரைகள் வாசித்தனர்.
தமிழியல்: அணுகுமுறைகள், ஆய்வு நெறிகள், அளவுகோல்கள் என்ற தலைப்பில் ஞாயிறு காலை அமர்வு இடம் பெற்றது. இது தமிழில் நடைபெற்றது. இவ்வமர்வுக்கு பேராசிரியர் செல்வா கனகநாயகம் தலைமை வகித்தார். போராசிரியர் இ. அண்ணாமலை, பேராசிரியர் பொ. ரகுபதி, பேராசிரியர் மார்கிரெட் ட்ரேவிக், பேராசிரியர் பெர்னாட் பேட், கலாநிதி இ பாலசுந்தரம், பேராசிரியர் சுரேஷ் கனக ராஜா ஆகியோர் பங்கேற்றனர்.
துறை சார்ந்த அணுகுமுறைகள் யாவை, பல்வேறு துறைகள், ஒன்றிணைந்தும் கிளை பிரிந்தும் எவ்வாறு தமிழியல் ஆய்வுகளுக்கு உதவ முடியும். பயன்படுத்தப்படும் ஆய்வு நெறிகளின் வலு என்ன, வழுக்கள் யாவை, இப்போதைய ஆய்வுகளில் மேலோங்கி யிருக்கும் கூறுகள் என்ன, சிறப்பான தமிழியல் ஆய்வு மையங்கள் எவை போன்ற கேள்விகளுக்கு மறுமொழி தேடும் ஒரு முயற்சியாக இந்த அமர்வு அமைந்தது. தமிழர் புலம் பெயர்ந்த சூழலில் தமிழ்மொழியைப் பேணுவது எவ்வாறு என்ற கேள்வியும் முக்கியமாக கவனத்தில் எடுத்துக் கொள்ளப் பட்டது.
பிற்பகல் அமர்வு, ஈழத்து இலக்கியம்: படைப்பின் கவித்துவம், திறனாய்வின் நெறிமுறைகள், வெளியீட்டின் தொழில் நுட்பம் என்ற தலைப்பில் இடம்பெற்றது. கலாநிதி குலமோகன் தலைமை வகித்தார். பேரா. நா. சுப்ரமணியன், என். கண்ணன், வ. கீதா, தேவகாந்தன் ஆகியோர் பங்கேற்றனர்.
கனடாவில் தமிழ்மொழிக்கும் தமிழியல் கல்விக்கும் ஒரு புத்தெழுச்சி ஊட்டுவதாக இந்த மாநாடு அமைந்திருந்தது என்று மாநாட்டில் பங்கு கொண்ட தமிழ்ப் பல்கலைக்கழக மாணவர்கள் பலர் தெரிவித் தார்கள். இந்த மாநாடு ஆண்டுதோறும் மே மாதம் நடைபெற உள்ளது. மாநாட்டில் சமர்ப்பிக்கப்பட்ட ஆய்வுகள் தொகுப்பு நூலாக வெளிவரும்.
http://www.chass.utoronto.ca/-tamils/main.html என்ற வலைதளத்தில் ஆய்வுக் கட்டுரை களின் சுருக்கத்தைத் தமிழிலும் ஆங்கிலத் திலும் வாசிக்கலாம்.
கிருஷ்ணசுவாமி |
|
|
More
கலிபோர்னிய பாடப்புத்தக சர்ச்சையும் தென்றல் ஆசிரியர் குழுவும் தமிழ் பள்ளிகளில் ஆண்டுவிழா
|
|
|
|
|
|
|