சிகாகோ லெமாண்ட் கோவில் தங்க முருகன் திருவிழா அட்லாண்டா மாநகர தமிழ்ச்சங்கம் தீபாவளிக் கொண்டாட்டம் க்ளீவ்லாந்து சரயு ரமணனின் நடனம் அரிசோனா தமிழ்ச்சங்கம் தீபாவளி கொண்டாட்டம் நியூயார்க் ஸ்ரீராஜராஜேஸ்வரி ஆலய பிரம்மோற்சவம்
|
|
Zee Sports சானல் வெற்றிகரமான தொடக்கம் |
|
- |ஜனவரி 2008| |
|
|
|
|
அண்மையில் அமெரிக்காவில் ஸீ ஸ்போர்ட்ஸ் சானல் வெற்றிகரமாகத் தொடங்கப்பட்டது. எகோஸ்டார் கம்யூனி கேஷனும் அதன் டிஷ் நெட்வொர்க் துணைக்கோள் டிவியும், சானல் துணை வரான ஸீ டிவியும் இணைந்து இதனைக் கொண்டாடினர். டிசம்பர் 12, 2007 அன்று நியூயார்க் நகரத்தில் நடந்த இந்த நிகழ்ச்சியில் செய்தியாளர் கூட்டமும் விருந்தும் இடம் பெற்றன. ட்ரீம் மேக்கர்ஸ் மற்றும் டச்டௌன் மீடியா இன்க். ஆகிய இரண்டு தெற்காசிய ஊடக நிறுவனங்களும் இணைந்து இதன் ஏற்பாடுகளை கவனித்தன. நியூயார்க் டைம்ஸ் மற்றும் பிற உள்நாட்டு ஊடக நிறுவனங்கள் தவிர, இந்தக் கொண்டாட் டத்துக்கு தெற்காசியா மற்றும் கரீபியன் பகுதியைச் சேர்ந்தோர் வந்திருந்து பாராட்டினர்.
தெற்காசிய விளையாட்டுகளை ஒளிபரப்பும் முழுமையான சானலான ஜீ ஸ்போர்ட்ஸ் அமெரிக்கா, டிஷ் நெட்வொர்க் தளத்தின் 576வது சானலாக 24 மணி நேரமும் காணக்கிடைக்கிறது. இது தெற்காசியாவில் நிகழும் கிரிக்கெட், கால்பந்து, கோல்·ப், கார் பந்தயம், ஹாக்கி, டென்னிஸ் போன்றவற்றை 'முன் வரிசையில் அமர்ந்து' காண உதவும் முதல் சானலாகும். இதைத் தவிர ஜீ டிவியின் விருதுபெற்ற நிகழ்ச்சிகளான 'டெய்லி ஸ்போர்ட்ஸ் நியூஸ்', 'ஸ்போர்ட்ஸ் க·பே', 'ஸ்போர்ட்ஸ் சன்டே' 'வேர்ல்ட் மோட்டார் ஸ்போர்ட்ஸ் மாகஸின்', '22 யார்ட்ஸ்', 'கிரிக்கெட் டாக்', 'கிரிக்கெட் ·பர்ஸ்ட்' போன்றவையும் இதில் இடம் பெறும்.
எக்கோஸ்டாரின் நிர்வாக உபதலைவர் மைக்கல் கெல்லியும், ஸீ டிவியின் அமெரிக்கத் தலைவர் எஸ். வெங்கட்டும் நிருபர்களின் கேள்விகளுக்கு விடை யளித்தனர். |
|
செய்திக் குறிப்பிலிருந்து. |
|
|
More
சிகாகோ லெமாண்ட் கோவில் தங்க முருகன் திருவிழா அட்லாண்டா மாநகர தமிழ்ச்சங்கம் தீபாவளிக் கொண்டாட்டம் க்ளீவ்லாந்து சரயு ரமணனின் நடனம் அரிசோனா தமிழ்ச்சங்கம் தீபாவளி கொண்டாட்டம் நியூயார்க் ஸ்ரீராஜராஜேஸ்வரி ஆலய பிரம்மோற்சவம்
|
|
|
|
|
|
|