அரிசோனா தமிழ்ச் சங்கம் பொங்கல் திருவிழா 2008 மிச்சிகன் தமிழ்ச் சங்கம் தைத்திருவிழா 'வெற்றியின் படிகள்' செயல்பட்டறை கலிபோர்னியா அருணாசல ஆஸ்ரமம்: ரமண ஜயந்தி நியூ இங்கிலாந்து தமிழ்ச்சங்கம் பொங்கல் விழா 2008
|
|
OSAAT இசை, நடனப் போட்டிகள் |
|
- |ஜனவரி 2008| |
|
|
|
|
2008 பிப்ரவரி 23, 24 தேதிகளில் OSAAT அமைப்பு 'நாட்யராகா' என்ற பிரம்மாண்ட மான இசை, நடனப் போட்டிகளை நடத்த இருக்கிறது.
'ஒரு நேரத்தில் ஒரு பள்ளி' (One School At A Time) என்ற இந்தச் சேவை அமைப்பு இந்தியாவின் கிராமப்புறங்களில் பராமரிப்பை வேண்டி நிற்கும் பலதரப்பட்ட பள்ளிகளைச் சீரமைக்கும் பணியை ஏற்று நடந்துகிறது. பெங்களூரின் சுற்று வட்டாரத்தில் உள்ள பன்னர்கட்டா பகுதியில் உள்ள பள்ளியைச் சீரமைக்க சான் பிரான்சிஸ்கோ விரிகுடாப் பகுதியில் நடந்த இந்தப் போட்டிகளின் மூலம் சென்ற ஆண்டு நிதி திரட்டப்பட்டது. இதில் முன்னணிப் பள்ளிகளான ஸ்ரீ க்ருபா நடனக் குழுவினர், கலா வந்தனா நாட்டிய மையம், சங்கல்பா நடன அகாடமி, ஏரோடான்ஸ், ஸ்பந்தன் நடன அகாடமி, நாட்யாலயா குச்சிப்புடி நடனப்பள்ளி, PAMPA, ந்ருதய காவ்யா நடனப் பள்ளி போன்றவற்றிலிருந்து 26 நடனக் குழுக்களும் 36 இசைக்குழுக்களும் பங்கேற்றன.
'OSAAT அமைப்பில் பணியாற்றும் அனைவரும் தன்னார்வத் தொண்டர்களே என்பதால் திரட்டப்படும் நிதி முழுமையாக நலப்பணியைச் சென்றடைகிறது' என்கிறார் இதன் தலைவரும் தலைமைப் புரவலருமான பி.வி. ஜகதீஷ். தவிர இது ஒரு 501(c)(3) வரிவிலக்குப் பெற்ற, லாபநோக்கற்ற தொண்டு நிறுவனம். |
|
இந்த ஆண்டுகளுக்கான போட்டிகள் கீழ்க்கண்டவாறு நடைபெறும்.
நாள்: பிப்ரவரி 23, 2008 இடம்: the McAfee Performing arts center, Saratoga High School போட்டி: Indian classical and semi-classical dance contest for Groups of 4 or More நாள்: பிப்ரவரி 24, 2008 இடம்: Sunnyvale Hindu temple போட்டி: Indian classical and semi-classical music contest for groups of 4 or more மேலும் விவரங்களுக்கு: www.osaat.org தொடர்புகொள்ள: Mangala Kumar at info@osaat.org |
|
|
More
அரிசோனா தமிழ்ச் சங்கம் பொங்கல் திருவிழா 2008 மிச்சிகன் தமிழ்ச் சங்கம் தைத்திருவிழா 'வெற்றியின் படிகள்' செயல்பட்டறை கலிபோர்னியா அருணாசல ஆஸ்ரமம்: ரமண ஜயந்தி நியூ இங்கிலாந்து தமிழ்ச்சங்கம் பொங்கல் விழா 2008
|
|
|
|
|
|
|