அரிசோனா தமிழ்ச் சங்கம் பொங்கல் திருவிழா 2008 மிச்சிகன் தமிழ்ச் சங்கம் தைத்திருவிழா கலிபோர்னியா அருணாசல ஆஸ்ரமம்: ரமண ஜயந்தி நியூ இங்கிலாந்து தமிழ்ச்சங்கம் பொங்கல் விழா 2008 OSAAT இசை, நடனப் போட்டிகள்
|
|
|
|
ஜனவரி 19, 2008 அன்று மாலை 3.30 மணிக்கு 'Steps to Success and Satisfaction' என்ற 3 மணிநேரச் செயல்பட்டறை ஒன்றை சுவாமி சுகபோதானந்தாவிடம் தீவிரப் பயிற்சி பெற்றோர் நடத்துகின்றனர். சுகபோதானந்தா அவர்களால் வடிவமைக்கப்பட்ட இந்தச் செயல்பட்டறை சன்னிவேலில் (கலி.) உள்ள கோமளவிலாஸில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
இந்தப் பயிற்சிக் கூடம், ஜப்பானியர்களின் கைசான் கொள்கைப்படி, இன்று புதிதாகப் பிறக்கும் இந்த நாள் நமக்கு நேற்றை விட அதிக மகிழ்ச்சி அன்பு நம்பிக்கை ஆகியவற்றைக் கொடுத்து வாழ்க்கையில் சரியான ஏணிப்படியில் மேலேறிச் செல்ல வழிகாட்டுகிறது. மிக எளிதான முறையில் வாழ்க்கையின் சரியான குறிக்கோள்களைக் காட்டி, அதை தினசரி வாழ்வில் எப்படி நடைமுறைப்படுத்துவது என்பதையும் விளக்குகிறது.
ஆன்மீகத்தை வாழ்க்கையின் ஒரு பகுதி யாக கொண்டுவருவதற்கான சிறந்த நுழைவு நிலைப் பயிற்சியாக இந்த நிகழ்ச்சி அமையும். நாம் வாழ்க்கையிலும் ஆன்மீகத்திலும் எந்தக் கட்டத்திலிருந்தாலும், மிகச்சிறந்த தெளி வைக் கொண்டு வருவதன் மூலம் இந்தப் பயிற்சி பயனுள்ளதாக அமைகிறது. வாழ்க்கையை உற்சாகத்துடனும் உல்லாசத்தோடும் இந்தப் பயிற்சி அலசுவதால் இதில் இனிமைக்கும் குறைவில்லை. |
|
பல தொடக்க நிலை தியானங்களையும், மூச்சுப் பயிற்சிகளையும் இந்தப் பட்டறையில் நாம் கற்றுக் கொள்ளலாம். இந்தப் பயிற்சி பல எளிதான ஆனால் மிகவும் ஆழமான உத்திகளைக் கற்பித்து, இங்கு நாம் பெற்ற மனத்தெளிவை எப்படி மேன்மேலும் வளர்த்துக் கொள்வது என்பதையும் தெளிவாக்குகிறது. இது சுவாமி சுகபோதா னந்தா அவர்களின் பிற பயிற்சிகளைப் போலவே வாழ்க்கையில் உற்சாகத்தையும், ஆழத்தையும் ஒரே நேரத்தில் தந்துவிடுகிறது.
பயிற்சிக்குக் கட்டணம் ஏதும் கிடையாது. பிரசன்னா டிரஸ்டுக்கு நன்கொடைகள் ஏற்றுக்கொள்ளப்படும்.
தொடர்புகொள்ள: மஹி - 408-688-6254 மீரா - 408-733-1948 toshakila@gmail.com, vskamala@yahoo.com
N. ஷகிலா பானு |
|
|
More
அரிசோனா தமிழ்ச் சங்கம் பொங்கல் திருவிழா 2008 மிச்சிகன் தமிழ்ச் சங்கம் தைத்திருவிழா கலிபோர்னியா அருணாசல ஆஸ்ரமம்: ரமண ஜயந்தி நியூ இங்கிலாந்து தமிழ்ச்சங்கம் பொங்கல் விழா 2008 OSAAT இசை, நடனப் போட்டிகள்
|
|
|
|
|
|
|