ஆதிவாசியும் அதிசய பேசியும் மர்மயோகி கமல்ஹாசன் மச்சக்கார ஜீவனின் பயணிகள் கவனத்திற்கு சிலம்பரசனுக்கு ஒரு சிலம்பாட்டம் சேரன் நடிப்பில் ராமன் தேடிய சீதை
|
|
அகத்தியனின் இயக்கத்தில் நெஞ்சத்தைக் கிள்ளாதே |
|
- கேடிஸ்ரீ, அரவிந்த்|ஜனவரி 2008| |
|
|
|
|
'காதல் கோட்டை' திரைப்படத்தின் மூலம் தமிழ் படத்திற்காக முதன் முதலில் தேசிய விருது பெற்ற இயக்குநர் அகத்தியன். அடுத்து வந்த அவரது 'விடுகதை, ராமகிருஷ்ணா' போன்ற படங்கள் 'காதல் கோட்டை' அளவுக்கு வெற்றியைப் பெறவில்லை. நீண்ட நாட்களுக்குப் பிறகு அகத்தியன் 'நெஞ்சத்தைக் கிள்ளாதே' என்ற படத்தை இயக்கிக் கொண்டிருக்கிறார். நடிகர் விஜய்யின் சித்தி மகனான விக்ராந் தும், 'அம்முவாகிய நான்' புகழ் பாரதியும் நாயகன், நாயகியாக நடிக்கின்றனர்.
படத்தில் 'விசில்' பட நாயகன் விக்ரமாதித் யாவும் முக்கியமான கதாபாத்திரத்தில் நடிக்கிறார். 'இது முற்றிலும் இளைஞர் களுக்கான படம். ஆகவே படம் முழுக்க இளமை இருக்கும். காதலை ஒரு மாறுபட்ட கோணத்தில் காட்டியுள்ளேன். இளைஞர்களின் உணர்வுகளையும் காதலையும், உள்ளத்து உணர்வுகளையும் வித்யாசமான முறையில் சொல்லும் படமாக இருக்கும்' என்று கூறுகிறார் அகத்தியன். ப்ளூ வாட்டர்ஸ் மூவி மேக்கர்ஸ் தயாரிக்கும் இந்தப் படத்திற்கு இசை கங்கை அமரனின் மகனான பிரேம்ஜி அமர். |
|
தொகுப்பு: கேடிஸ்ரீ, அரவிந்த் |
|
|
More
ஆதிவாசியும் அதிசய பேசியும் மர்மயோகி கமல்ஹாசன் மச்சக்கார ஜீவனின் பயணிகள் கவனத்திற்கு சிலம்பரசனுக்கு ஒரு சிலம்பாட்டம் சேரன் நடிப்பில் ராமன் தேடிய சீதை
|
|
|
|
|
|
|