'அம்மா' மாதா அமிர்தானந்தமயி அமெரிக்க விஜயம் பாரதி தமிழ்ச்சங்கத்தின் தீபாவளித் திருவிழா டெலவர் பெருநில தமிழ்ச் சங்கம் தீபாவளி சிறப்பு நிகழ்ச்சி நியூ இங்கிலாந்து தமிழ்ச் சங்கம் கலைவிழா 2007 பூஜா, பரத் சங்கர் கீபோர்ட் அரங்கேற்றம் சங்கல்பா நடனக் குழுமம் மல்லிகா மல்லேசுவரன் நாட்டிய அரங்கேற்றம் நாட்டக் வழங்கிய Sleuth நோவையில் (மிச்சிகன்) வெங்கடேஸ்வரர் ஆலயம் அரிசோனா தமிழ்ச் சங்கத்தின் மெல்லிசை மாலை 07
|
|
நித்யானந்த மிஷனின் திருமறைக் கோவில் தொடக்க விழா |
|
- |டிசம்பர் 2007| |
|
|
|
|
நவம்பர் 9-11, 2007 தேதிகளில் நித்யானந்தா மிஷனின் வேதத் திருக்கோவில் 9720, சென்ட்ரல் அவென்யூ, மாண்ட்க்ளேர், கலிபோர்னியாவில் தொடங்கி வைக்கப் பட்டது. இதைத் தொடங்கி வைத்துப் பேசிய ஸ்ரீ பரமஹம்ச நித்யானந்தர் 'இது மேற்குலகுக்கு வேத விஞ்ஞானத்தின் பரிமாணங்களை உணர்த்தும் தலைமையக மாக இருக்கும்' என அறிவித்தார். சிவன், திருமால், தேவி, விநாயகர், முருகன், சூரியன் ஆகிய ஆறு தெய்வங்களை மூலமாகக் கொண்ட அறுமதக் கோவிலாக இது இருக்கும். நவம்பர் 9ஆம் தேதி பிராண பிரதிஷ்டையும் கும்பாபிஷேகமும் நடை பெற்றன. லட்சார்ச்சனை, 108 கலச அபிஷேகம், 1008 சங்கு அபிஷேகம், ஸ்ரீவித்யா பூஜை ஆகியவையும் நடைபெற்றன.
நவம்பர் 10ஆம் தேதியன்று தியானமும் நித்யானந்தரின் சிவசூத்திர உபன்யாசமும் நடைபெற்றன. இந்த விழாவில் கவாய் ஹிந்து மடாலயத்தின் சத்குரு போதிநாத வேலன் சுவாமிகளும், லாஸ் ஏஞ்சலஸ் வேதாந்த சங்கத்தின் சுவாமி சர்வதேவானந்தாவும் கலந்து கொண்டனர்.
இந்தக் கோவிலில் இன்னொரு சிறப்பு அம்சம் இதில் புத்தர், 24வது ஜைன தீர்த்தங்கரர், சீக்கியர்களின் குரு கிரந்த சாஹிப் ஆகியவையும் இருப்பதாகும். |
|
மேலும் விவரங்களுக்கு: www.dhyanapeetamhindutemple.org
தியானபீட செய்திக் குறிப்பிலிருந்து.... |
|
|
More