நொறுக்குத் தீனிகள் பொட்டுக்கடலைமாவு முறுக்கு மூலிகை முறுக்கு இனிப்பு முறுக்கு கோளா பழ பர்பி மால் புவா கோவா பர்பி
|
|
|
|
தேவையான பொருட்கள்
சோயாமாவு - 1 கிண்ணம் ரவை - 1 மேசைக்கரண்டி கோவா - 1/3 கிண்ணம் சர்க்கரை - 3/4 கிண்ணம் நெய் - 1/2 கிண்ணம் தேங்காய்த் துறுவல் - 1/8 கிண்ணம் வறுத்து ஒடித்த முந்திரிப் பருப்பு - 1/3 கிண்ணம் |
|
செய்முறை
அடிகனமான வாணலியில் சோயாமாவை ரவையுடன் பொன்னிறமாகப் பச்சை வாசம் போகும்வரை சிறிது நெய்யில் வறுத்து எடுக்கவும்.
சர்க்கரையுடன் தண்ணீர் சேர்த்து மெல்லிய கம்பிப் பாகு வைக்கவும். எல்லாப் பொருட்களையும் இதில் சேர்த்து கைவிடாமல் கிளறவும். பாத்திரத்தில் ஒட்டாமல் எழும்பி பர்பி பதம் வந்தபின், நெய் தடவிய தட்டில் கொட்டி ஆறிய பின்னர் வில்லைகளாகப் போடவும். நெய் அதிகம் விடவிட மிக மென்மையாக வரும்.
சரஸ்வதி தியாகராஜன், டேடன், ஒஹையோ |
|
|
More
நொறுக்குத் தீனிகள் பொட்டுக்கடலைமாவு முறுக்கு மூலிகை முறுக்கு இனிப்பு முறுக்கு கோளா பழ பர்பி மால் புவா கோவா பர்பி
|
|
|
|
|
|
|