Thendral Audio Advertise About us
New User? | Forgot Password? | Email: Password: Login
Current Issue | Previous Issues | Author Index | Category Index | Organization Index | E-Magazine | Classifieds | Digital Downloads
By Category:
சின்னக்கதை | சமயம் | சினிமா சினிமா | இளந்தென்றல் | கதிரவனை கேளுங்கள் | ஹரிமொழி | நிகழ்வுகள் | மேலோர் வாழ்வில் | மேலும்
November 2007 Issue
தென்றல் பேசுகிறது | நேர்காணல் | மாயாபஜார் | ஹரிமொழி | நினைவலைகள் | சமயம் | அன்புள்ள சிநேகிதியே | நலம்வாழ | சிரிக்க சிரிக்க
குறுக்கெழுத்துப்புதிர் | சூர்யா துப்பறிகிறார் | சிறுகதை | வார்த்தை சிறகினிலே | அஞ்சலி | ஜோக்ஸ் | பொது | சினிமா சினிமா | Events Calendar
எழுத்தாளர் | இளந்தென்றல் | நிகழ்வுகள் | வாசகர் கடிதம் | விளையாட்டு விசயம் | இதோ பார், இந்தியா!
நடந்தவை
Tamil Unicode / English Search
நிகழ்வுகள் - நடந்தவை
பாரதி தமிழ்ச் சங்கம்: டாக்டர் கோபாலியின் நாடகப் பட்டறை
சிகாகோவில் இசைப்போட்டி
கலாலயா வழங்கிய உன்னிகிருஷ்ணன் திரையிசை விருந்து
சவிதா செந்தில் நடன அரங்கேற்றம்
கிரேடர் அட்லாண்டா தமிழ்ச் சங்கம்: கல்லூரிக் கல்வி வழிகாட்டல் கருத்தரங்கம்
லக்ஷ்மிநாராயணா இசைப்பள்ளி விநாயக சதுர்த்தி
சினிமாயா குழுமத்தின் இந்திய அமெரிக்க சாதனையாளர் விருதுகள்
சந்தியா நடாதூர் நடன அரங்கேற்றம்
பிரீதி கண்ணன் நடன அரங்கேற்றம்
- இந்திரா பார்த்தசாரதி|நவம்பர் 2007|
Share:
Click Here Enlargeசெப்டம்பர் 16, 2007 அன்று லாஸ் ஏஞ்சலஸ் சக்தி நடனக் குழுமத்தின் மாணவியான பிரீதி கண்ணனின் நடன அரங்கேற்றம் ஜேம்ஸ் ஆர்ம்ஸ்ட்ராங் அரங்கத்தில் நடைபெற்றது. ஆகாயத்தில் கருடன் மீது ஆரோகணித்திருந்த ஸ்ரீ மகா விஷ்ணுவின் தாமரைப் பாதங்களைக் கண்ணுற்றதும் பரவசமடைந்த பெரியாழ்வார் பாடிய திருப்பல்லாண்டு பாசுரத்துடன் தொடங்கியது பிரீதியின் நடனக் கச்சேரி. அன்னமாச்சாரியாரின் குறிஞ்சி ராக க்ருதியான 'நீராஜனம்' பாட்டில் ஸ்ரீ மகாவிஷ்ணுவின் சங்கையும், சக்கரத்தையும் குறிப்பிட்டிருந்தது அபூர்வமாக இருந்தது.

ஸ்ரீ மஹேஷ் ஸ்வாமி இயற்றிய ராமப்ரியா ராக வர்ணம் அசோகவன சீதையின் நினைவுகளைச் சித்திரித்தது. இதற்கு குரு விஜி ப்ராகஷ் விதவிதமான ஜதிகளை அமைத்திருந்தார். ஸ்ரீவத்ஸா மிக அருமையாக இதைப் பாட, அதற்கேற்றவாறு ஆடிய பிரீதியின் நடனம் மறக்க முடியாதது.

அம்ருத வர்ஷிணி ராகத்தில் தேவியைப் பற்றியும், கமாஸ் ராகத்தில் சிவனைப் பற்றியும் ஆடிய பதங்கள் ஜோர். தவிர குலசேகர ஆழ்வாரின் பெருமாள் திருமொழியில் கண்ணனைப் பற்றிய பாடலுக்கு நாயக நாயகி பாவத்தை அற்புதமாகச் சித்திரித்தார்.
தில்லானாவில் வேதகிருஷ்ணனின் மிருதங்கத்துக்கு சுத்த நிருத்தம் ஆடிய அழகு வியக்க வைத்தது. ப்ருகா பாசல் என்பவரின் பயிற்சியில் கற்றுத் தேர்ந்த அபிநய பாவங்கள் ரொம்பவும் அற்புதம்.

இந்திரா பார்த்தசாரதி
More

பாரதி தமிழ்ச் சங்கம்: டாக்டர் கோபாலியின் நாடகப் பட்டறை
சிகாகோவில் இசைப்போட்டி
கலாலயா வழங்கிய உன்னிகிருஷ்ணன் திரையிசை விருந்து
சவிதா செந்தில் நடன அரங்கேற்றம்
கிரேடர் அட்லாண்டா தமிழ்ச் சங்கம்: கல்லூரிக் கல்வி வழிகாட்டல் கருத்தரங்கம்
லக்ஷ்மிநாராயணா இசைப்பள்ளி விநாயக சதுர்த்தி
சினிமாயா குழுமத்தின் இந்திய அமெரிக்க சாதனையாளர் விருதுகள்
சந்தியா நடாதூர் நடன அரங்கேற்றம்
Share: 




© Copyright 2020 Tamilonline