இட்லி விற்றார் இன்று எம்பிஏ பட்டதாரி
|
|
இளம் சாதனையாளர் சாயிகணேஷ் ரவிகுமார் |
|
- |ஜூன் 2006| |
|
|
|
சென்டர் ·பார் டேலன்டட் யூத் மற்றும் ஜான் ஹாப்கின்ஸ் பல்கலைக் கழகம் (CTY-JHU) நடத்திய திறன் தேடும் தேர்வுகளில் கலந்துகொண்டு மிக அதிக மதிப்பெண் பெற்றவர்களுள் ஒருவர் என்ற பெருமையைப் பெற்றிருக் கிறார் சாயிகணேஷ் ரவிகுமார். தமது குடும்பம் கோவையைச் சேர்ந்தது என்கிறார் சாயிகணேஷின் தாயார் சித்ரா.
இவர் தேர்வுபெற்றிருப்பது நியூயார்க் மாநிலத்தில் உள்ள ஐந்து மற்றும் ஆறாம் நிலை மாணவர்களுக்கானது.
2005-06க்கான தேர்வுகளில் 19 மாநிலங்களில் இருந்து கலந்து கொண்ட 83000 மாணவர்களில் 1500 பேர் மட்டுமே உயர்மட்டத் திறன் கொண்டவர்களாக கண்டறியப் பட்டுள்ளனர். இதற்கான விருதளிப்பு விழா மே 14, 2006 அன்று புரூக்லினில் உள்ள பாலிடெக்னிக் பல்கலைக் கழகத்தில் ஜான் ஹாப்கின்ஸ் பல் கலைக் கழகத்தினரால் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
டொஷிபா NSTA நடத்திய தேசிய அறிவியல் திறன் போட்டியிலும் 2006க்கான விருதை வென்றுள்ளார் சாயிகணேஷ். நியூ யார்க் நகரப் பகுதி முதல்நிலை, நடு நிலைப் பள்ளி மாணவர்களின் செயல்திட்டங்களில் பரிசுக்குரியதாகத் தேர்ந்தெடுக்கப்பட்ட ஒரே திட்டம் இவருடையது. |
|
இந்திய வம்சாவளிக் குழந்தை களுக்கான 'கணிதத் தேனீ', 'சொல் வளத் தேனீ' போட்டிகளில் வட்டாரத் தில் முதலாவது இடத்தைப் பெற்றார். 'கட்டுரைத் தேனீ', 'பலுக்கல் (ஸ்பெல்லிங்) தேனீ' போட்டிகளில் மூன்றாம் இடத்தைப் பிடித்துள்ளார். இவற்றின் தேசியப் போட்டிகள் ஆகஸ்டு மாதம் சிகாகோவில் நடக்க இருக்கின்றன.
·பிரெஷ் மெடோஸில் (குவீன்ஸ், நியூ யார்க்) உள்ள ஸ்கோர் கல்வி மையம் இவருக்கு 'அகடமிக் ஆல் ஸ்டார்' தந்து சிறப்பித்துள்ளது. தவிர, இவர் எல்லாவற்றிலும் 'A' நிலை பெற்று 'முதல்வரின் சிறப்புப் பட்டிய'லில் இடம்பெற்றுள்ளார்.
சாயிகணேஷ் சிவகுமாருக்குத் தென்றலின் வாழ்த்துகள்! |
|
|
More
இட்லி விற்றார் இன்று எம்பிஏ பட்டதாரி
|
|
|
|
|
|
|