Thendral Audio Advertise About us
New User? | Forgot Password? | Email: Password: Login
Current Issue | Previous Issues | Author Index | Category Index | Organization Index | E-Magazine | Classifieds | Digital Downloads
By Category:
சின்னக்கதை | சமயம் | சினிமா சினிமா | இளந்தென்றல் | கதிரவனை கேளுங்கள் | ஹரிமொழி | நிகழ்வுகள் | மேலோர் வாழ்வில் | மேலும்
October 2007 Issue
தென்றல் பேசுகிறது | நேர்காணல் | மாயாபஜார் | முன்னோடி | நினைவலைகள் | சிறப்புப் பார்வை | அன்புள்ள சிநேகிதியே | நலம்வாழ | சமயம்
குறுக்கெழுத்துப்புதிர் | சூர்யா துப்பறிகிறார் | சிறுகதை | வார்த்தை சிறகினிலே | தமிழறிவோம் | ஜோக்ஸ் | பொது | சினிமா சினிமா | Events Calendar
எழுத்தாளர் | இளந்தென்றல் | நிகழ்வுகள் | வாசகர் கடிதம் | நூல் அறிமுகம் | இதோ பார், இந்தியா!
நடந்தவை
Tamil Unicode / English Search
நிகழ்வுகள் - நடந்தவை
மிலன் நடத்திய கொடை நடை
நந்தலாலா அறக்கட்டளையின் இளையோர் இசைமழை
ஜனனி முரளிதரனின் கர்நாடக இசை அரங்கேற்றம்
வசந்த் ராமச்சந்திரன் கர்நாடக இசை அரங்கேற்றம்
நித்யா ராம் பரத நாட்டிய அரங்கேற்றம்
யாத்ரிகா அஜயாவின் பரதநாட்டிய அரங்கேற்றம்
வருண் சிவக்குமார் கர்நாடக இசை அரங்கேற்றம்
அம்பிகா கோபாலன் பரத நாட்டிய அரங்கேற்றம்
கார்த்திகா கணேசன் பரத நாட்டிய அரங்கேற்றம்
கவிதா விஜயசேகரின் பரத நாட்டிய அரங்கேற்றம்
சுவாமி சுகபோதானந்தாவின் வளைகுடாப் பயணம்
சிகாகோவில் பாலமுரளி கிருஷ்ணா - பண்டிட் அஜாய் சக்ரவர்த்தி ஜுகல்பந்தி
- பேரா. ராகவன்|அக்டோபர் 2007|
Share:
Click Here Enlarge2007 செப்டம்பர் 15, 16 நாட்களில் 'சிகாகோ தியாகராஜ உத்சவம்' அமைப்பும், ஹிந்துக் கோயிலும் இணைந்து இசை, நாட்டிய நிகழ்ச்சி ஒன்றை வழங்கினர்.

முதல் நாளன்று சங்கீத கலாநிதி பத்ம விபூஷண் டாக்டர் பாலமுரளிகிருஷ்ணாவும், அவரது நேர் சிஷ்யரான ஹிந்துஸ்தானி இசைக் கலைஞர் பண்டிட் அஜாய் சக்ர வர்த்தியும் இணைந்து அற்புதமான ஜூகல்பந்தி ஒன்றை வழங்கினர்.

பாலமுரளி கிருஷ்ணாவின் குரல் கேட்டு மகிழ வந்த யாவரையும் அவரது குரல் வசீகரம் வியப்பிலாழ்த்தியது. தியாகராஜரின் இசையில் ஊறியவர்கள் 'ஆஹா! இப்படியும் 'ஸாமஜவரகமனா'வை விஸ்தரிக்க முடியுமா எனப் புகழ்ந்தனர். முதலில் வாதாபி கணபதிம் (ஹம்சத்வனி) கிருதியை வழங்கினர். நான்கே ஸ்வரங்களில் அமைந்த மஹதி ராக க்ருதி யான 'மஹனீய மதுரமூர்த்தே' யாவரையும் கிறங்க வைத்தது. பாலமுரளியின் தந்தையார் இயற்றிய 'ராம ராம' என்னும் (சிந்துபைரவி) பஜனுடன் கச்சேரி முடிந்தது. ரசிகர்கள் விருப்பத்தை ஈடுகட்ட அஜாய் சக்கரவர்த்தி மட்டும் ஒரு சம்ஸ்கிருத பஜனைப் பாடல் பாடி வேத மந்திரங்கள் இணைந்த ஸ்லோகத்தோடு முடித்தார்.

மாறாத குரு, சிஷ்ய பாவத்தோடு இந்த வயதிலும் அடங்கிப் பாடும் அஜாய் சக்கர வர்த்திக்கு விட்டுக் கொடுத்துப் பாடும் பண்பு அதிகம். ஒரு புகழ்பெற்ற ஓர் இசைமேதை இந்த அளவுக்குக் கர்நாடக சங்கீதத்தை இயைந்து பாடும்போது ஆச்சரியம் உண்டாகத் தான் செய்கிறது.

கர்நாடக இசை பாணியிலேயே பாடியதால் ஜுகல்பந்தியாக அமையவில்லை என்று வட இந்திய இசைப்பிரியர்கள் குறைப்பட்டனர். அஜாய் சக்கரவர்த்தி தனியாக ஹிந்துஸ்தானி ராகத்தில் ஒரு பாடல் பாடி இருந்தால் இதைத் தவிர்த்திருக்கலாம். அஜாய் சக்கரவர்த்தியின் பஜன் பாடலில் ஹிந்துஸ்தானியின் அழகைக் காண முடிந்தது

செப்டம்பர் 16 அன்று நாட்டிய வேள்வி நடந்தது எனலாம். சுஜாதா ஸ்ரீனிவாசன், சுஷ்மிதா அருண்குமார், செளம்யா குமரன், வனிதா வீரவல்லி என்று நான்கு நாட்டிய மணிகள் தனித்தனியாக ஆண்டாள், அக்கமகாதேவி, காரைக்கால் அம்மையார், மீராபாய் இவர்களின் வாழ்க்கை, தத்துவம் இவற்றைச் சித்திரிக்கும் வகையில் தமிழ், கன்னடம், ஹிந்தி இவற்றில் அமைந்த இத்தெய்வப் பெண்டிரின் கவிதைகளை நடனத்தில் தோய்த்து வழங்கினர்.

ஆண்டாள் நடனம் ஆடிய சுஜாதா ஸ்ரீனிவாசன் தேர்ந்த நடனக்கலைஞர். தன் பெண் ஸ்ரேயா மற்றும் குழுவினருடன் திருப் பாவை, நாச்சியார் திருமொழி, அதில் அமைந்த வாரணமாயிரம் ஆகியவற்றை வழங்கினார். ஐந்து திருப்பாவைகளில் ஆண்டாளின் தத்துவத்தையும், வாராண மாயிரம் மூலம் அவள் கனவு நனவுதான் என்றும் நிரூபித்தார் என்றால் மிகையாகாது. பல நடன இசை ஆராய்ச்சி முடிவுகளையும் இணைத்திருந்தார்.

வைணவ இலக்கியத்தில் ஆண்டாளின் திருப்பாவை, நாச்சியார் திருமொழி தத்துவம் நிறைந்தவை. கதைப் பகுதிகளைக் அபிநயத்தில் உணர்த்துவது போல் தத்துவத்தை விளக்குவது சுலபமில்லை. இவற்றை ஆங்கிலத்தில் அடிக்கடி விளக்க வேண்டும்.

அக்கமஹாதேவி மல்லிகார்ஜுனரிடம் மையல் கொண்டாள். கன்னட வீரசைவ இலக்கியத்தில் அவர் வழங்கியவை மிகச் சிறப்பு வாய்ந்தவை. மன்னனின் காமத்தை வெறுத்து, உடலின் அழகை நீக்கி, உள்ளத்தின் அழகைக் காட்டி இறைவனோடு ஒன்றும் முயற்சியே இவள் வாழ்க்கை. வசன கவிதைகளுக்கு சுஷ்மிதா அருண்குமார் தன் சிஷ்யைகளுடன் மெருகூட்டினார். சிவ பூஜையில் ஈடுபாடு, உலகவாழ்வில் வெறுப்பு இவற்றைக் காட்டும் போது நடன ஜதிகளைக் குறைத்து முகபாவத்தாலும், நிருத்ய அசைவு களாலும் காண்பித்ததால் இந்த பக்தி இலக்கியத்தின் அழகை உணர முடிந்தது. சுஷ்மிதாவின் நடனத்துக்கே ஒரு வரப் பிரசாதம் சுதர்சன முரளியின் அற்புதமான விளக்கங்கள். அக்கமஹாதேவியின் மாபெரும் சமூகப் புரட்சியையே எளிய முறையில் நம் கண்முன் கொண்டு நிறுத்தினார்.
அழகான லிங்கம் அமைத்துத் தந்த வனமூர்த்தி, வசனங்களுக்கு எளிய, அழகிய ராகங்களை அமைத்திருந்த பிரசன்னா ராவ் ஆகியோர் பாராட்டுக்கு உரியவர்கள்.

காரைக்கால் அம்மையார் வாழ்க்கையை செளம்யா குமரன் தனியாகவே நடனமாடி ஒரு சதனை படைத்தார் எனலாம். பாடல்கள் பாபநாசம் சிவன் அவர்களுடையவை. அவற்றுக்கு சிவன் அவர்களின் பெண் ருக்மணி ரமணி இசையமைத்திருந்தார். இந்த இசைப் பொக்கிஷம் நடனத்துக்கு வரப் பிரசாதமாக அமைந்தது. ஜதிகளும், கரணங்களும் அமைந்த ஒரு படைப்பு. நடன அரங்கம் முழுவதையும் சுற்றிச் சுழன்ற லாவகம் சௌம்யாவின் சிறப்பு. இதில் கதை யம்சம் மிக அதிகம். கணவன், சிவனடியார், விட்டுப்போதல், வேறு மணமுடித்த கணவர் தன்னை விட்டுப் பிரிந்ததால் வந்த ஏக்கம், வாழ்க்கை வெறுப்பு இவற்றை எல்லாம் கொணர்வது மிகக் கடினம்தான். ஆனால், பாடல்களுக்கான ஆங்கில விளக்கம் எங்கு நடனத்தோடு ஒன்றுகிறது என்பதைக் காணமுடியவில்லை.

வனிதா வீரவல்லியும் அவர் சிஷ்யைகளும் மீராவின் வாழ்க்கையை நடனமாக வழங்கினர். ராஜஸ்தான் ராணா குடும்பத்து அரசியாக வந்தார் வனிதா வீரவல்லி. மிகவும் கவர்ச்சிகரமான நடன உடைகளில் சிஷ்யர் களை அலங்கரித்து எளிய வெள்ளுடையில் தான் நடனமாடியது சிறப்பு. உடைகள், நிறங்கள், நடனக் குழந்தைகளின் ஒத்திசைவு இவை யாவும் குறிப்பிடத் தக்கவையாக இருந்தன. குழந்தைகளின் நடனத்துக்கு இவர் அதிக முக்கியத்துவம் கொடுத்தார். மீராவின் பாடல்களுக்கே முக்கியத்துவம் தந்து அதன் மூலம நடனத்தைக் கொண்டு சென்றிருந்தார். பாடல்கள் ஹிந்தியில் இருந்தாலும் நம்மில் பலரும் எம்எஸ்ஸின் குரலில் கேட்டுப் பழகியவையே. மீரா பஜன்களின் அர்த்தத்தை ஆங்கிலத்தில் விளக்கி இருக்கலாம்.

நிறுத்தாமல் ஆறு மணிநேரம் பாடிய புஸ்தகம் ரமா கின்னஸ் ரிக்கார்டில் சேர்க்கப்பட வேண்டியவர். மிருதங்கம் ஹரிபாபு, நட்டு வாங்கம் பிரசன்னகுமார், குழல் ரகுநந்தன். யாரை விடுவது யாரை சேர்ப்பது என்றே புரியவில்லை. மிக உயந்த மிருதங்க உழைப்பு, காதுக்கினிய புல்லாங்குழல், அழகான நட்டுவாங்கம்.

மேலும் அறிய:http://tyagaraja-chicago.org/WordPress/

பேரா. ராகவன்
More

மிலன் நடத்திய கொடை நடை
நந்தலாலா அறக்கட்டளையின் இளையோர் இசைமழை
ஜனனி முரளிதரனின் கர்நாடக இசை அரங்கேற்றம்
வசந்த் ராமச்சந்திரன் கர்நாடக இசை அரங்கேற்றம்
நித்யா ராம் பரத நாட்டிய அரங்கேற்றம்
யாத்ரிகா அஜயாவின் பரதநாட்டிய அரங்கேற்றம்
வருண் சிவக்குமார் கர்நாடக இசை அரங்கேற்றம்
அம்பிகா கோபாலன் பரத நாட்டிய அரங்கேற்றம்
கார்த்திகா கணேசன் பரத நாட்டிய அரங்கேற்றம்
கவிதா விஜயசேகரின் பரத நாட்டிய அரங்கேற்றம்
சுவாமி சுகபோதானந்தாவின் வளைகுடாப் பயணம்
Share: 




© Copyright 2020 Tamilonline