மிலன் நடத்திய கொடை நடை நந்தலாலா அறக்கட்டளையின் இளையோர் இசைமழை ஜனனி முரளிதரனின் கர்நாடக இசை அரங்கேற்றம் வசந்த் ராமச்சந்திரன் கர்நாடக இசை அரங்கேற்றம் நித்யா ராம் பரத நாட்டிய அரங்கேற்றம் யாத்ரிகா அஜயாவின் பரதநாட்டிய அரங்கேற்றம் வருண் சிவக்குமார் கர்நாடக இசை அரங்கேற்றம் அம்பிகா கோபாலன் பரத நாட்டிய அரங்கேற்றம் கார்த்திகா கணேசன் பரத நாட்டிய அரங்கேற்றம் கவிதா விஜயசேகரின் பரத நாட்டிய அரங்கேற்றம் சிகாகோவில் பாலமுரளி கிருஷ்ணா - பண்டிட் அஜாய் சக்ரவர்த்தி ஜுகல்பந்தி
|
|
சுவாமி சுகபோதானந்தாவின் வளைகுடாப் பயணம் |
|
- ஷகிலா பானு .N|அக்டோபர் 2007| |
|
|
|
பூஜ்ய சுவாமிஜி சுகபோதானந்தா அவர்கள் 2007 ஆகஸ்ட், செப்டம்பர் மாதங்களில் சான் ·ப்ரான்ஸிஸ்கோ வளைகுடாப் பகுதியில் சொற்பொழிவு, வாழ்வியல் பயிற்சிக் கூடம் மற்றும் குழுவாக மலை ஏறும் நிகழ்ச்சிகளை வழங்கினார். சுவாமி சுகபோதானந்தா Enhancing effectiveness through Shiva Sutras என்பது பற்றி மில்பிடாஸ் ஜெயின் அரங்கத்தில் உரையாற்றினார். இந்தப் பழமையான நூலுக்கு விளக்கம் தருவோர் மிகச் சொற்பமே. சுவாமிஜி சுகபோதானந்தா நான்கு மணி நேரத்தில் வாழ்வைப் பற்றிய நுணுக்கங்களை எளிதாக நமக்கு விளக்கி விட்டார்.
அமைதி, ஒருமைப்பாடு, அன்பு, கருணை ஆகியவை ஆரம்பிக்க வேண்டிய இடம் எங்கோ வெளியே இல்லை. ஒரு சில நிமிடங்கள் அமைதியாகத் தனக்குள் செல்லும் எண்ணங்களை கவனிக்க ஆரம்பித்தால், இவை கிளம்பும் இடம் நமது மனது என்பதையும், இவற்றை மேம்படுத்துவதற்கான சக்தி விழிப்புணர்வுக்கு இருக்கிறது என்பதையும் புரிந்து கொள்ளலாம் என்கிறார் சுவாமி சுகபோதானந்தா.
வாழ்க்கையின் ஒவ்வோர் அனுபவமும் வைரக்கல் போன்றது. காலம் இந்த அனுபவங்களால் நம்மைப் பட்டை தீட்டி வாழ்வை மிளிர வைக்கிறது. நமது அனுபவங்கள் வைரம்போல் ஒளிர்கின்றனவா, புழக்கடையில் பாழாகின்றனவா என்பதை நமது விழிப்புணர்வுதான் தீர்மானிக்கிறது.
'வாழ்வியல் பயிற்சி' முகாமில் இந்த முறை உறவுகளை பலப்படுத்துவது பற்றிய பயிற்சி முக்கிய இடம் பெற்றது. உறவுகளை பலப்படுத்த சுவாமிஜி பல வழிமுறைகள் தருகிறார். கணவன், மனைவி இவர்கள் ஒருவர் மற்றவரின் வாழ்க்கையின் மதிப்பு முறை (value system) என்ன என்பதைத் தெரிந்து கொள்ள வேண்டும். இப்படி 10 மதிப்புகளை எழுதி அதன் தலையாய 2, 3 மனைவியின் மதிப்புகளுக்கு ஒருவருக் கொருவர் முக்கியத்துவம் கொடுத்தால் குடும்பத்தில் நெருக்கம் பெருகும் என்று சுவாமிஜி கூறுகிறார். |
|
தினசரி தியானத்தில் ஈடுபடுவது, சத்சங்கங்களில் பங்கு பெறுவது இவை யெல்லாம் வாழ்வில் விழிப்புணர்வோடு நம்மை இயங்க வைக்கும். பிரசன்னா டிரஸ்ட்டின் சத்சங்கங்கள் மாதம் இருமுறை (முதல் மற்றும் மூன்றாவது சனிக்கிழமைகளில்) வளைகுடாப் பகுதியில் நடைபெறுகின்றன. கட்டணம் கிடையாது. சுவாமிஜியின் பிரசன்னா டிரஸ்ட் கம்யூனிட்டி Orkut-ல் இருக்கிறது. சுவாமிஜியும் அவ்வப்போது இதில் கேள்விகளுக்கு பதில் தருகிறார்.
உறுப்பினர் ஆவதற்கு toshakila@gmail.com, m_jaishankar@yahoo.com மின்னஞ்சல் அனுப்புங்கள்.
சுவாமிஜியைப் பற்றி மேற்கொண்டு விபரம் அறிய:www.swamisukhabodhananda.org
N. ஷகிலா பானு |
|
|
More
மிலன் நடத்திய கொடை நடை நந்தலாலா அறக்கட்டளையின் இளையோர் இசைமழை ஜனனி முரளிதரனின் கர்நாடக இசை அரங்கேற்றம் வசந்த் ராமச்சந்திரன் கர்நாடக இசை அரங்கேற்றம் நித்யா ராம் பரத நாட்டிய அரங்கேற்றம் யாத்ரிகா அஜயாவின் பரதநாட்டிய அரங்கேற்றம் வருண் சிவக்குமார் கர்நாடக இசை அரங்கேற்றம் அம்பிகா கோபாலன் பரத நாட்டிய அரங்கேற்றம் கார்த்திகா கணேசன் பரத நாட்டிய அரங்கேற்றம் கவிதா விஜயசேகரின் பரத நாட்டிய அரங்கேற்றம் சிகாகோவில் பாலமுரளி கிருஷ்ணா - பண்டிட் அஜாய் சக்ரவர்த்தி ஜுகல்பந்தி
|
|
|
|
|
|
|