Bay Area Round UP
|
|
விரிகுடாப் பகுதி தமிழ் மன்றத்தின் பூங்கா விருந்து நிகழ்ச்சி |
|
- தில்லை குமரன்|செப்டம்பர் 2001| |
|
|
|
தி.பி. (திருவள்ளுவருக்குப் பின்) 2032 ஆம் ஆண்டு ஆடி திங்கள் 10ஆம் நாள் (8-4-2001) சனிக்கிழமை அன்று மன்றத்தின் 2001-2002 ஆண்டின் முதல் நிகழ்ச்சியாக 'பூங்கா விருந்து' நடைபெற்றது.
இந்நிகழ்ச்சியில் சிறுவர் முதல் பெரியவர்கள் வரை பலர் கலந்து கொண்டு சிறப்பித்தனர். பல புதிய உறுப்பினர்களும் மன்றத்தில் தங்களை இணைத்துக் கொண்டனர். நிகழ்ச்சியின் தொடக்கமாகக் கு¡ந்தைகளுக்கான விளையாட்டுப் போட்டியும் இறுதியாகப் பிற்பகலில் பிங்கோ, சராட்சு போன்ற போட்டிகளும் நடைபெற்று பார்வையாளர்களையும் கலந்து கொண்டவர்களையும் பரவசத்தில் ஆழ்த்தின.
இலக்கியக் கூட்டம்
தமிழ் மன்றத்தின் சார்பில் தி.பி. 2032 ஆம் ஆண்டு ஆவணித் திங்கள் 2ஆம் நாள் (8-18-2001) அன்று முதல் இலக்கியக் கூட்டம் நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் 'தன்னிகரற்ற திருக்குறள்' என்னும் தலைப்பில் தமிழீழத்திலிருந்து வந்த திரு. சிவதாசன் சிறப்புரையாற்றினார். |
|
குமரிக் கரையோரத்தில் 133 அதிகாரத்திற்கு ஏற்ப 133 அடியில் திருவள்ளுவருக்குச் சிலை வைத்தது பொருத்தமானது என்று சிவதாசன் தன்னுடைய உரையில் மகிழ்வுடன் குறிப்பிட்டார். மேலும் உலகிலேயே கவிஞனுக்கு வைத்த சிலைகளில் திருவள்ளுவருடைய சிலைதான் மிக உயரமானது என்கிறதையும் குறிப்பிட்டார்.
க. தில்லைக்குமரன், ka_thillai@yahoo.com |
|
|
More
Bay Area Round UP
|
|
|
|
|
|
|