Thendral Audio Advertise About us
New User? | Forgot Password? | Email: Password: Login
Current Issue | Previous Issues | Author Index | Category Index | Organization Index | E-Magazine | Classifieds | Digital Downloads
By Category:
சின்னக்கதை | சமயம் | சினிமா சினிமா | இளந்தென்றல் | கதிரவனை கேளுங்கள் | ஹரிமொழி | நிகழ்வுகள் | மேலோர் வாழ்வில் | மேலும்
August 2001 Issue
ஆசிரியர் பக்கம் | நேர்காணல் | சிறப்புப் பார்வை | மாயாபஜார் | சிறுகதை | ஜோக்ஸ் | பொது | அமெரிக்க அனுபவம் | கவிதைப்பந்தல் | Events Calendar
எழுத்தாளர் | இளந்தென்றல | நிகழ்வுகள் | குறுக்கெழுத்துப்புதிர் | வாசகர் கடிதம் | தகவல்.காம் | தமிழக அரசியல் | சமயம் | சினிமா சினிமா | முன்னோடி
நடந்தவை
Tamil Unicode / English Search
நிகழ்வுகள் - நடந்தவை
இசை ஆற்றலை ஊக்குவிக்கும் லோட்டஸ்
தமிழ் மன்றம் - கம்பன் விழா
வேற்றுமையில் ஒற்றுமை
- புவனா பாலா|ஆகஸ்டு 2001|
Share:
Click Here EnlargeBay Area Round UP

Cultural Program organized by Geeta's Child Academy at the Hayward Community THeatre on June 23rd 2001.

கீதா சிறுவர்கள் கல்வி நிலையம் லாப நோக்கில்லாத (Non profit) பள்ளிக்கூடம். மனிதப் பண்பாடுகளை சிறிய வயதிலிருந்து குழந்தைகளுக்கு சொல்லி கொடுப்பதுதான் இந்தக் கல்விக்கூடத்தின் குறிக்கோள். இதை மிகவும் இனிமையான முறையில் பண்புக் கதைகள், பஜன், ஸ்லோகங்கள், நடனம் மற்றும் நாடகம் செல்லிக் கொடுக்கப்படுகிறது. இங்கு பிற மொழிகளுடன், தமிழும் சொல்லித் தருகிறார்கள்.

Call : (510) 353 - 1092 or (510) - 445 - 1471. Email :gcainfor@yahoo.com

விழா தினத்தன்று Bay Areaவிலிருந்து குடும்பத்துடன் பல பேர் வந்திருந்தனர். இந்த கோலாகலமான ''Unity in Diversity'' நிகழ்ச்சியைப் பார்ப்பதற்கு வந்திருந்த கூட்டமே இதை ஆமோதிப்பது போலிருந்தது. எல்லாரும் ஒருவரே, ஒருவரே எல்லாரும் என்ற அழகான கருத்தை இந்த நிகழ்ச்சியில் நாடகம், நடனங்கள் மற்றும் நாட்டியங்கள் மூலமாக காண்போருக்கு தெரிவிக்கப்பட்டது.

முதலில் இறைவனிடம் 'வாக்கிலும், நடத்தையிலும் ஒற்றுமை இருக்க வேண்டும்' என்று பாடலின் மூலமாக வேண்டினார்கள். அடுத்தது இயற்கையின் 'சந்திரன், சூரியன், நெருப்பு', முதலான ஒற்றுமையை அழகான உடைகளுடனும் கருத்துக்களுடனும் நாட்டிய நாடகமாக விளக்கினார்கள். பிறகு அதே ஒற்றுமையையும் புரிந்து கொள்ளும் தன்மையையும் பிரபலமான ஹிந்திப் படப் பாடல்கள் மூலமாக ஆடிக் காண்பித்தார்கள்.
வந்திருந்த பார்வையாளர்கள் மிகவும் ரசித்தது 4 வயதுக் குழந்தைகள் மதத் தலைவர்கள் ஆடை அணிந்து 'மதங்கள் பல. ஆனால் அவை அளிக்கும் கொள்கைகள் ஒன்று' என்பதை மிகத் தெளிவாக எடுத்துரைத்த பொழுதுதான். எல்லாவற்றிற்கும் சிகரம் வைத்தது போல் இருந்த கடைசியில் GCA சிறுவர்கள் இந்தியாவின் சுதந்திரப் போராட்டத்தை நாட்டிய நாடகமாக அளித்ததுதான். எப்படி நமத இந்திய நாட்டின் தலைவர்கள் ஒற்றுமை, அன்பு என்ற ஆயுதங்களால் பலாத்காரம் இல்லாமல் சுதந்திரம் வாங்கி கொடுத்தார்கள் என்பதை மிக அருமையாகக் காண்பித்தனர்.

இந்த இரண்டரை மணி நிகழ்ச்சியில் 4 - 16 வயது வகையில் 100 சிறுவர்கள், சிறுமிகள், மாணவர்கள் GCA மற்றும் 5 Bay area சிறுவர் நிறுவனத்திலிருந்து கலந்து கொண்டார்கள். GCA நிகழ்ச்சியில் பங்கு கொண்ட அனைவருக்கும் நன்றியுரை தெரிவித்தனர். அனைவரும் சுவையான இரவு உணவு அருந்திவிட்டு விழாவிலிருந்து திரும்பினார்கள்.

புவனா பாலா
More

இசை ஆற்றலை ஊக்குவிக்கும் லோட்டஸ்
தமிழ் மன்றம் - கம்பன் விழா
Share: 




© Copyright 2020 Tamilonline