மெட்ராஸ் நல்ல மெட்ராஸ் : அனில் கபூர் தேசிய விருது பெற்ற ஸ்வேதா 'குட்டி' ஹாட் லைன் பிரசாந்த்
|
|
பவர் ஆ·ப் விமன் (Power of Women) |
|
- தமிழ்மகன்|செப்டம்பர் 2001| |
|
|
|
'நலம் நலமறிய ஆவல்', 'விலங்கு', 'விலாங்கு மீன்' போன்ற படங்களையடுத்து ஜெயதேவி இயக்குகிற படம் 'பவர் ஆ·ப் வுமன்'.
ஜெயதேவி 'புரட்சிக்காரன்' படத்தின் கதை, திரைக்கதை, வசனப் பொறுப்பை ஏற்றுச் செயல்பட்டவர்.
திராவிடர் கழகப் பொருளாளர் G. சாமித்துரை, லிபர்டி கிரியேஷன்ஸ் பேனரில் இந்தப் படத்தைத் தயாரிக்கிறார். இந்த நிறுவனம் ஏற்கனவே 'புரட்சிக்காரன்' படத்தைத் தயாரித்தது குறிப்பிடத்தக்கது.
மகா அதிசயம் ஒன்று இந்தப் படத்தின் மூலம் நிகழப் போகிறது. தமிழில் கதாநாயகன் இல்லையென்கிற குறையைத் தீர்த்து வைக்க வருகிறார் பாடகர் ஹரிகரன். ஆம்! சாட்சாத் நம்ம குடுமி ஹரிகரன் தான்! |
|
அவருக்கு ஜோடியாக நடிப்பவர் கெளசல்யா, மணிவண்ணன், குஷ்பு, ஜனகராஜ், மனோரமா, சரிதா, ரியாஸ்கான், கடவுள் கண்ணன், கனடாவைச் சேர்ந்த ஷ்யாம், பில்லிமிண்ட்ஸ், ரவி, லிண்டா முதலியோரும் நடிக்கிறார்கள்.
அறிவுமதி, பழனிபாரதி, தாமரை போன்ற முப்பெரும் கவிஞர்கள் பாடல் எழுத பேனாவில் மையூற்றிக் கொண்டிருக்கிறார்கள். கேமரா அசோக் குமார். இசை வித்யாசாகர்.
'கலையைப் பெண்களின் விடுதலைக்காக ஆயுதமாகப் பயன்படுத்திய ஒரு கலைஞனின் கதை' என்று படத்தைப் பற்றி அறிமுகம் செய்து வைத்திருக்கிறார்கள்.
தமிழ்மகன் |
|
|
More
மெட்ராஸ் நல்ல மெட்ராஸ் : அனில் கபூர் தேசிய விருது பெற்ற ஸ்வேதா 'குட்டி' ஹாட் லைன் பிரசாந்த்
|
|
|
|
|
|
|