வேற்றுமையில் ஒற்றுமை தமிழ் மன்றம் - கம்பன் விழா
|
|
இசை ஆற்றலை ஊக்குவிக்கும் லோட்டஸ் |
|
- |ஆகஸ்டு 2001| |
|
|
|
லோட்டஸ் என்ற நிறுவனம், விரிகுடா பகுதி மக்களின் இசை ஆற்றலை ஊக்குவிக்கும் அடிப்படை நோக்கோடு, மாதாமாதம், மூன்றாவது ஞாயிறன்று இசை நிகழ்ச்சிகளை இரண்டு பிரிவுகளாக நடத்தி வருகின்றது. அங்கனம், லோட்டஸ் நிறுவனத்தின் 16வது இசை நிகழ்ச்சி ஸன்னிவேல் இந்து கோயிலில் ஜுன்17 அன்று நடைபெற்றது.
முதல் பிரிவில் ரூபா மஹாதேவன் அவர்களின் வாய்ப்பாட்டு நிகழ்ச்சி, (30 நிமிடம்) நடைபெற்றது. இவர் ஆஷா ரமேஷ் அவர்களிடம் இசை பயில்பவர். கலிபோர்னியா ஏ.ஏ.எஸ். நிறுவனத்தின் ஸ்காலர்ஷிப்பை பெற்ற இவர், சுத்த தன்யானி வர்ணத்துடன் நிகழ்ச்சியைத் தொடங்கினார். இரண்டாவதாக, ஹம்ஸத்வனியின் ராகலாயலை உணர்த்தியவாறு 'வாதாபி கணபதிம்' என்ற க்ருதியை விருவிருப்பான ஸ்வரக்கோர்வைகளுடன் அளித்தார். மூன்றாவதாக, 'ஆடமோடி' என்ற சாருகேஸி ராகத்தில் அமைந்த த்யாகையர் க்ருதி, நிதானமான சங்கதிகளோடு வழங்கப்பட்டது. நான்காவதாக அமைந்த 'பஜனஸேய ராதா' என்ற வாஸ¤தேவானந்த கீர்த்தனை - மனோதர்மம் நிறைந்த விரிவான தர்மபதி ஆலாபணை, மற்றும் ஸ்வர வரிசைகளுடன் அமைந்தது. வயலின் வாசித்த அஜய் மற்றும் மிருதங்கம் வாசித்த மஹாதேவன் அந்நிகழ்ச்சிக்கு மேலும் மெருகூட்டினர். ஐந்தாவதாக மட்டிய தாளத்தில் அமைந்த பஹ¤தாரி, ராக திருப்புகழைப் பாடியவாறு நிகழ்ச்சி நிறைவுபெற்றது.
இரண்டாவது பிரிவில் ஸ்ரீநாத் சுப்பராயன் அவர்களின் வாய்ப்பாட்டு நிகழ்ச்சி இடம் பெற்றது. வித்வான் டி.வி. கோபாகிருஷ்ணனிடம் இசை பயின்ற இவர், பைரவி அடதாள வர்ணம் பாடி நிகழ்ச்சியைத் தொடங்கினார். தொடர்ந்து, ''மீன லோசன'' என்ற ஷ்யாம ஸாஸ்திரியின், தன்யாஸி ராகப்பாடலைப் பாடலலனார். பின்னர், கருடத்வனி ராக ஆலாபணையைத் தொடங்கி 'பரதத்ர மேருக' என்ற த்யாகையர் க்ருதியை, ஸ்வரக் கோர்வைகளுடன் ரசிகர்களுக்கு வழங்கினார். இதனை அடுத்து 'மாயதரணி' என்றோர் அபூர்வமாக பாடப்படும் ராகத்தை அரங்கேற்றியது ரசிகர்களின் செவிக்கோர் விருந்து. |
|
இவ்வாறு கக்சேரியின் முக்கிய கட்டத்தை எட்டிப் பிடிக்கும் தருணத்தில், ராகம் தாளம் பல்லவி - கல்யாணி ராகத்துடன் தொடங்கிற்று. பின்னர், ஸ்ரீநாத் ஸ்ருதிபேதம் செய்தவாறு கல்யாணியிலிருந்து - மோஹன ராகத்திற்கு மாறி, ரசிகர்களின் கைதட்டல்களை, குவித்துக் கொண்டார். இதனைத் தொடர்ந்து, மிருதங்க நடையுடன் கூடிய தாளம் - 'சிவே சிவே ஸஹிதே, லக்ஷ்மி ஸஹிதே பாஹிமாம் சிவ சிதம்பரேஷ்வரி தர்மபதி (ஸதா) என்ற வரிகளையுடைய பல்லவி, கற்பனை வளமிக்க ஸ்வரங்கள், அனுராதா ஸ்ரீதர் அவர்களின் அனுஸரணையான வாசிப்பு மற்றும் ஸ்ரீராம் ப்ரமமாநந்தம் அவர்கள் 'லக்ஷ்மிஸ' தாளத்தில் வெளியிட்ட தனி ஆவர்த்தனம் ஆகிய அனைத்துமே இந்நிகழ்ச்சியின் சிறப்பு அம்ஸமாக அமைந்தது. இதனைத் தொடர்ந்து, ரசிகர்கள் திருப்திபடும் அளவிற்கு - ஸதாயன்ன ஹ்ருதயஸ்லி ஈபரிய, ராகிதந்திர, ப்ரோக்ருஷ்ணையா, ஜகதோத்தாரணா போன்ற நேயர் விருப்பத்தைத் தழுவிய துக்கடா பாடல்களையெல்லாம் பாடி, மங்களம் பாடியவாறு கச்சேரியை நிறைவு செய்தார்.
லோட்டஸ் நிறுவனத்தின் கலைஞர் மற்றும் ரசிகராக நீங்களும் பங்கேற்கலாமே! விவரங்களுக்கு அணுகுங்கள். http://www.svlotus.com |
|
|
More
வேற்றுமையில் ஒற்றுமை தமிழ் மன்றம் - கம்பன் விழா
|
|
|
|
|
|
|